அறுப்பின் நேரம் Phoenix, Arizona, USA 64-1212 1நன்றி. காலை வணக்கம், நண்பர்களே. இன்று காலை இங்குள்ளது ஒரு சிலாக்கியமே. இத்தகைய அறிமுகம் என்னைக் குறித்து செய்யப்படுவதை நான் கேட்ட போது, நான் இன்னும் சிறியவன் என்னும் உணர்ச்சி எனக்குத் தோன்றுகிறது. இன்று காலை பீனிக்ஸுக்கு வரக்கிடைத்த தருணத்துக்காக நான் மிகவும் நன்றியுள்ளவனாயிருக்கிறேன். நான் முதன் முறையாக பீனிக்ஸுக்கு வந்தது, எனக்கு ஞாபகம் வருகிறது. அப்பொழுது எனக்குப் பதினேழு வயது. அன்று முதல் இது அதிகம் வளர்ந்து விட்டது. நாங்கள் டூசானை விட்டு இன்று காலை பீனிக்ஸுக்குள் நுழைந்தபோது இந்த இடத்தை அடையாளம் கண்டுபிடிக்க முடியவேயில்லை. இந்த இரு இடங்களும் ஒரே போல் இருந்தன. அநேக புது இடங்கள் இங்கு எழும்பியுள்ளன. முன்பு இங்கு வனாந்தரமாக இருந்த இடங்களில் நாங்கள் சென்று விளையாடுவது வழக்கம். ஆனால் அந்த இடங்களில் இப்பொழுது தங்கும் விடுதிகளும் அங்காடிகளும் எழும்பியுள்ளன. எனக்கு வயதாகிக் கொண்டிருக்கிறது என்பதை அது காண்பிக்கிறது. 2என் அருமை சகோதரன் சகோ. வால்டெஸ் பக்கத்தில் நான் உட்கார்ந்து கொண்டு, நாங்கள் உரையாடிக்கொண்டிருந்தோம். ''நான் நல்லது, சகோதரனே, எனக்கு வயதாகின்றது. என் வாழ்க்கை பாதையில் அநேக மைல்கள் கடந்து விட்டன என்று உணருகிறேன்'' என்றேன். அவர், ''என் வயதை நீங்கள் அடையும் போது பாருங்கள்'' என்றார். அவர் என்னைக் காட்டிலும் பன்னிரண்டு வயது மூத்தவர் என்று கேள்விப்பட்டபோது, எனக்கு ஆச்சரியத்தை விளைவித்தது. அப்பொழுது எனக்கு அதிக நல்லுணர்வு தோன்றினது. நான், ''சகோ. வால்டெஸ், எவ்வளவு காலமாக நீங்கள் சுவிஷேத்தை பிரசங்கித்து வருகிறீர்கள்?'' என்று கேட்டேன். அவர், ''ஐம்பது ஆண்டுகளாக'' என்று விடையளித்தார். நான் சிறுவனாக இருந்த முதற்கொண்டு அவர் பிரசங்கித்து வந்திருக்கிறார். நான் அவரிடம், ''சகோ. வால்டெஸ், இன்று காலை நீங்கள் ஆராதனையை நடத்தினால் நல்லது மூத்தவர்களின் முன்னிலையில் நான் பேசுவது எனக்கு அவ்வளவாக பிடிக்காது'' என்றேன். அவர் சிரித்துக் கொண்டே, ''எதற்காக இங்கு நான் இருக்கிறேன் என்று நினைக்கிறீர்கள்?'' என்றார். எனவே நான் சகோ. வால் டெஸுக்கு மிகவும் நன்றியுள்ளவனாயிருக்கிறேன். இங்கு அவருக்கு ஒரு இளைப்பாறும் வீடு உள்ளதாக என்னிடம் கூறினார். அது மிகவும் நல்லது. எப்பொழுதாவது அவர் வீட்டுக்கு வரும்படி எனக்கு அழைப்பு விடுத்தார். அதை நான் பாராட்டுகிறேன். அது நீயு ரிவர் என்னுமிடத்தில் உள்ளது. உங்களில் யாருக்காகிலும் அது எங்குள்ளது என்று தெரியுமோ என்று எனக்குத் தெரியாது. ஆனால் வால்டெஸ் குடும்பத்தினர் ஒருவர் அதில் ஈடுபட்டிருந்தால், அது நன்றாகவே இருக்கும். 3ஒவ்வொரு முறை நான் கன்வென்ஷனுக்கு வரும் போதும், ஆராதனைகளில் சுகம் பெற்றவர் யாரையாகிலும் சந்திக்கிறேன். இன்று காலை நான் மேசையருகில் நின்று கொண்டிருந்த போது, இங்கு உட்கார்ந்து கொண்டிருந்த எர்ப் என்னும் பெயர் கொண்ட ஒரு விலையேறப்பெற்ற சகோதரி; அவளுடைய மகன் கிறிஸ்தவ வானொலி நிலையத்தில் அறிவிப்பாளராக பணியாற்றுகிறார். அவள் மிச்சிகனிலுள்ள பிளிண்ட் என்னுமிடத்தில் அநேக ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கூட்டத்திற்கு வந்திருந்ததாக என்னிடம் கூறினாள். அங்கு அவள் ஜெப அட்டையை பெற்றுக்கொண்டு, ஜெபித்துக் கொள்ளும்படி அதிகமாக முயன்றாள், ஆனால் அவளால் முடியவில்லை. அவள் அதிக நோய் வாய்ப்பட்டிருந்தாள். இன்று காலை இந்த இடத்தில் தேவன் அவளை சுகமாக்கினார். நான், ''என்ன ஒரு தருணம்! அது பன்னிரண்டு, பதினான்கு ஆண்டுகளுக்கு முன்பு. இப்பொழுது பீனிக்ஸ் என்று அழைக்கப்படும் இந்நகரில்; பீனிக்ஸ் என்பது பாழடைந்த இடம் புதிதாக கட்டப்பட்டதாகும். அது தான் இன்று காலை உனக்கு சம்பவித்தது. தேவன் உன் பாழடைந்த ஆரோக்கியத்தை நல்ல ஆரோக்கியமாக இன்று காலை மாற்றித் தந்தார்'' என்றேன். 4நேற்று மாலை நிறைய தொலைபேசி அழைப்புகள் வந்து கொண்டிருந்தன. இப்பொழுது நான் உங்கள் அண்டை வீட்டான். நான் டூசானில் இப்பொழுது வசிக்கிறேன். நிறைய அழைப்புகள் வந்த காரணத்தால், எல்லோரையும் சென்று காண முடியவில்லை. அவர்களுக்கு தொலைபேசியின் வழியாகவே ஜெபித்தேன். அவர்கள் தங்கள் தொலைபேசி எண்களை கொடுக்க வேண்டியதாயிருந்தது. எண்பத்தேழு வயதான ஒரு கிறிஸ்தவ அம்மாள் சிறிது காலமாக மனநலம் இல்லாதவர்களாக இருந்து வந்தார்கள். அவர்கள் தெருவில், தன் குழந்தையை யாரோ கொண்டு போய் விட்டதாக கூச்சலிட்டு, போலீசை கூப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். எண்பத்தேழு வயது, பாருங்கள், அவர்களுக்கு மனக்கோளாறு ஏற்பட்டிருந்தது. அவர்கள் அருமையான வயோதிப அம்மாள். அவர்களை என் வாழ்க்கையில் நான் அறிந்திருக்கவில்லை. பில்லி என்னை தொலைபேசியில் கூப்பிட்டு, ''நீங்கள் உடனே அவர்களுக்காக ஜெபியுங்கள். அவர்கள் மிகவும் நோயுற்றிருக்கிறார்கள். அவர்கள் மரித்து விடுவார்கள் என்று எண்ணுகின்றனர். அவர்களுக்கு பைத்தியம் பிடித்திருக்கிறது'' என்றான், நான் தொலைபேசியை வைத்துவிட்டு அறைக்குள் சென்று ஜெபித்தேன். சில நிமிடங்களுக்குள் அந்த அம்மாள் நன்றாக உறங்கினார்கள். அவர்கள் சுகமடைந்தவர்களாக உறக்கத்தினின்று எழுந்து, இரவு உணவுக்கு கோழியும், ஐஸ்கிரீமும், கேக்கும் தின்றார்கள். ஆம். பாருங்கள், தேவன் இராஜாதிபத்தியமுள்ளவர். அவர் தத்ரூபமானவர். அவரால்.... நீங்கள் அங்கிருக்க வேண்டுமென்றில்லை. நீங்கள் அவரிடத்தில் கேட்டால் போதும். இன்று காலை இங்குள்ள நமது தலைவர், அல்லது வேறு யாரோ, ஒருக்கால் சகோ. வால்டெஸ் என்று நினைக்கிறேன். ''அவர் தமது ஜெபத்தில் நாம் கேட்காததனால் பெற்றுக்கொள்வதில்லை. நாம் விசுவாசிக்காததனால் கேட்பதில்லை'' என்று கூறினார். 5இந்த இளைஞர்கள் பாடின பாடல்களை நான் பாராட்டுகிறேன். நானும் சகோ. வால்டெஸ் போன்ற வயதானவர்களும், அந்த இளைஞன் தான் இயேசுவை அறிந்து கொண்டதை சாட்சியாக அறிவித்த உத்தமத்தை மெச்சினோம். அநேக சமயங்களில் இந்த நால்வர் பாடற் குழுவினரின் பாடல்கள்.... இது மற்றொரு போதகரின் கருத்து. சகோ. வால்டெஸ், ''சில சமயங்களில் அவர்கள் பன்னிரண்டு காசுகளாக வருகின்றனர்'' என்றார். ஏனெனில் இன்றைக்கு அது, பெந்தெகொஸ்தேயினர் ஒரு காலத்தில் பெற்றிருந்த பரிசுத்தத்துக்கும் உத்தமத்துக்கும் பதிலாக, பாடும் திறனைக் காண்பிக்கும் ஒன்றாக ஆகிவிட்டது. ஆனால் இந்த இளைஞர்கள் உத்தமத்துடன் பாடினார்கள். அதை நான் பாராட்டுகிறேன். இளைஞர்களே, கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக. 6நான் தொலைக்காட்சியை விரும்புவதில்லை. உங்களுக்கு தெரிந்துள்ளபடி, அதற்கு நான் விரோதம். என்னுடைய இடம் ஆயத்தமாகும் வரைக்கும், நான் டூசானில் ஒரு இடத்தை வாடகைக்கு எடுத்திருக்கிறேன். அந்த வீட்டை வாடகைக்கு கொடுத்தவர்கள் ஒரு நல்ல கிறிஸ்தவ சிநேகிதி, ஆனால் அந்த வீட்டில் அவர்கள் ஒரு தொலைக்காட்சி பெட்டியை வைத்திருக்கின்றனர். எனக்கு வாலிப பிள்ளைகள் உள்ளனர். அவர்கள் எப்படியென்று உங்களுக்குத் தெரியும். தொலைகாட்சியை காண அவர்கள் விரைந்து செல்கின்றனர். இரண்டு நாட்களுக்கு முன்பு சகோ. ஸ்ட்ரோமியுடன் செய்த பயணத்தை நான் முடித்துக் கொண்டு வீடு திரும்பின போது..... இன்று காலை சகோ. ஸ்ட்ரோமி இங்கிருக்கிறாரா என்று எனக்குத் தெரியவில்லை, அவர் டூசானிலுள்ள வர்த்தகர் குழுவின் தலைவர். இப்பொழுது பின்னால் உட்கார்ந்து கொண்டிருக்கும் என் வாலிப மகள் என்னைக் கூப்பிட்டு, ''நாங்கள் நால்வர் பாடற் குழு பாடும் பாடல்களை தொலைகாட்சியில் கேட்கப் போகிறோம். வாருங்கள்'' என்று அழைத்தாள். நான் குற்றம் சொல்வதில் கைதேர்ந்தவன். அதற்காக நான் வருந்துகிறேன். என் இயல்பு எதுவோ அப்படித்தான் நான் இருக்க முடியும். என் இயல்புக்கு முரணாக நான் ஏதாகிலும் செய்தால், நான் ஒரு மாய்மாலக்காரனாகி விடுவேன். உங்களுக்கு முன்பாக அப்படி இருக்க நான் விரும்பவில்லை. நான் எப்படி இருக்கிறேனோ, அப்படியே இருக்க விரும்புகிறேன். அப்பொழுது என் நிலையை நீங்கள் அறிந்து கொள்வீர்கள். நான் சிறிது அதிகமாகவே குற்றம் சொல்லுகிறேன் என்று நினைக்கிறேன். அந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியைக் குற்றம் சொல்ல வேண்டுமென்று என் மனதில் இருந்தது. ஏனெனில், அது ஹாலிவுட் பாணியில் அமைந்திருந்ததாக எனக்குத் தோன்றினது. அதில் எந்த பரிசுத்தமும் இல்லை. அவர்கள் பொன் நிறக் காலணிகளை அணிந்து கொண்டு ராக் அண்டு ரோல் தாளத்தில் கிறிஸ்தவ பாடல்களைப் பாடினார்கள். சுவிசேஷம் ஒரு வேஷம் என்னும் நிலைக்கு வந்துவிட்டதா என்ன? அப்படியானால் அதனுடன் எவ்வித தொடர்பும் கொள்ள நான் விரும்பவில்லை. எனக்கு உண்மையும் உத்தமுமான ஒன்றே தேவை. அதை அந்த வழியிலேயே நாம் வைத்திருக்க விரும்புகிறோம். சகோதரரே, இங்குள்ள இரு ஒலிபெருக்கிகளும், சரியாயுள்ளன என்று நினைக்கிறேன். இப்பொழுது நான் பேசுவது நன்றாகக் கேட்கிறதா? 7கர்த்தருக்கு சித்தமானால் அடுத்த சனிக்கிழமை காலை, முதன் முறையாக அரிசோனாவிலுள்ள பிளாக்ஸ்டாப் என்னுமிடத்திலுள்ள வர்த்தகர் குழுவில் பேசும் சிலாக்கியம் எனக்கு கிடைத்துள்ளது. இங்குள்ள சகோதரன்- அவருடைய பெயர் எனக்கு மறந்து விட்டது - அதற்கு தலைவராயிருக்கிறார். (ஒரு சகோதரன் ''செஸ்டர் எர்ல்'' என்கிறார் - ஆசி.) செஸ்டர் எர்ல், சகோ. செஸ்டர் எர்ல். இன்று காலை இந்தியாவிலிருந்து வந்துள்ள அருமையான சுவிசேஷகருடன் நான் கைகுலுக்கிக் கொண்டிருந்தபோது, அவரை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அடுத்த சனிக்கிழமை காலை அங்கு நான் பேச வேண்டுமென்று என்னைக் கேட்டுக்கொண்டார். அந்த கூட்டத்துக்கு வர நீங்கள் அன்பாக அழைக்கப்படுகிறீர்கள். கர்த்தர் நம்மை ஆசிர்வதிப்பாரென்று நம்புகிறேன். அதற்கடுத்த திங்கள் இரவு டூசானில் ஒரு விருந்து. அந்த விருந்தின் போது பேச கர்த்தர் எனக்கு கனத்தை அளித்துள்ளார். அது டூசானில் டிசம்பர் 21ம் தேதி நடைபெறும். அன்றிரவு விருந்திலும் கலந்துகொள்ள நீங்கள் அன்பாக அழைக்கப்படுகிறீர்கள். சகோ. வில்லியம்ஸ் அறிவித்தபடி, கன்வென்ஷன் துவங்குவதற்கு முன்பாக சிறு முன்னுரை கூட்டம் நடத்த நான் மறுபடியும் இங்கு வருவேன். 8நான் சிலபுள்ளி விவரங்களை அறிவித்தேன், இல்லையா சகோ. வில்லியம்ஸ்.. என்ன சொல்லுகிறீர்கள்? இப்பொழுது நன்றாக கேட்கிறதா? நல்லது. அந்த கூட்டங்களில் ஒன்றில், அல்லது ஒவ்வொரு இரவும் பகலும், கூட்டத்தில் கலந்துகொள்ள உங்களில் அநேகருக்கு நேரம் கிடைக்குமென்று நம்புகிறேன். ஞாயிறு 17ம் தேதி பிற்பகல் 7 மணிக்கு அது தொடங்கும். (யாரோ ஒருவர் 1.30 மணிக்கு என்கிறார்-ஆசி). 1.30 மணிக்கு ஞாயிறு பிற்பகல் இதையும் கூற விரும்புகிறேன், கர்த்தருக்கு சித்தமானால் அந்த கூட்டங்களில் நான் வியாதியஸ்தருக்காக ஜெபிப்பேன். உங்களுக்குதவி செய்ய என்னால் கூடுமான எல்லாவற்றையும் செய்வேன். 9இன்று காலை இங்கு வந்துள்ள பீனிக்ஸ் வட்டாரத்திலுள்ள போதகர்களே, இந்த மண்டபத்துக்கு நான் வரக் காரணம்... ஒவ்வொரு முறை நான் வரும் போதும், இதை சிறிது விரிவுபடுத்தி, எல்லா சபைகளுக்கும் நான் செல்வது வழக்கம். அது கடிமானதாக எனக்குத் தோன்றுகிறது. ஏனெனில் சில சபைகள் சிறியவைகளயுள்ளன. ஒரு சகோதரனின் சபை சிறிதாயுள்ள காரணத்தால், அவரை விட்டுவிட எங்களுக்குப் பிரியமில்லை. ஆனால் அங்கு கூட்டம் நடத்தினால் அதுவரும் ஜனங்களைக் கொள்ளக் கூடாத அளவுக்கு சிறிதாயிருப்பதால் கடினமாகி விடுகிறது. எனவே.... நாம் அனைவரும் ஒரே இடத்தில் கூடி அதை நானே கவனித்துக் கொள்ளலாமென்று எண்ணினேன். நாம் இங்கு ஒன்று கூடி ஆராதனை நடத்தி - ஒரு சிறு சுவிசேஷ கூட்டத்தை நடத்தி - வியாதியஸ்தருக்காக ஜெபிப்போம். முன்பெல்லாம்.... 10மற்ற ஒலிபெருக்கியினருகில் வந்தால் நன்றாக கேட்குமா? (யாரோ ஒருவர், ''இல்லை, அது ஒலிநாடாவுக்கு என்கிறார்'' - ஆசி). ஓ, அது ஒலிநாடாவுக்கு. சரி. ஒருக்கால் இதை இப்படி செய்தால் நலமாயிருக்கும். பீனிக்ஸ் வட்டாரத்திலுள்ள சபைகளின் சகோதரர்கள், இங்குள்ள போதகர்கள், இதை அறிய விரும்புகிறேன். இந்த மண்டபத்தில் நான் வரக் காரணம், நாமெல்லாரும் ஓரிடத்தில் ஒன்றாக கூடலாம் என்பதற்காகவே. எல்லா சகோதரர்களிடம் செல்வது சிரமம். ஏனெனில் அவர்கள் அநேகர் உள்ளனர். இன்று காலை இங்கு வந்துள்ளவர் அவர்களில் பாதி கூட இல்லை. எனவே, கன்வென்ஷனுக்கு முன்பு உள்ள ஒரு சில நாட்களில் அவர்கள் எல்லோரையும் இங்கு வரவழைப்பது மிகவும் கடினம். கன்வென்ஷனின் போது உங்களுக்கு மகத்தான தருணம் உண்டாயிருக்குமென்று நிச்சயமுடையவனாயிருக்கிறேன். நீங்கள் சிறந்த பேச்சாளர்களின் சொற்பொழிவுகளைக் கேட்கப் போகின்றீர்கள். இது சகோ. காஷ் ஹாம்பர்க். என்னே, எத்தனை பேர் அவர் பேசுவதைக் கேட்டிருக்கிறீர்கள். அவர் நிச்சயமாக ஒரு சூறாவளி (typhoon). ஆம், என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். நான் அப்படி சொல்லியிருக்கக்கூடாது. அவர் ஒரு சகோதரன். ஆனால், அடேயப்பா, ஒருமுறை நான் அவருடன் இருந்தேன், அப்படிப்பட்ட ஒருவர் பேசுவதைக் கேட்ட பிறகு, நான் பேசுவதைக் கேட்க நீங்கள் எப்படி வருகின்றீர்களோ என்று எனக்குப் புரியவில்லை. அவரால் மூச்சுவிடாமல் பேச முடியும். அவர் எப்படி அவ்வாறு பேசுகிறாரென்று எனக்குத் தெரியவில்லை. நான்.... அவர் அதிகமாக பேசுபவர். அண்மையில் நியூயார்க்கில் நடந்த கன்வென்ஷனில் நான் அவருடன் சென்றிருந்தேன், கூட்டத்துக்குப் பிறகு அவர் என்னை இரவு உணவுக்கு கூட்டிச் சென்றார். நான் ஓரிடத்துக்கு சென்று வெளியே வர ஆயத்தமான போது இந்த சகோதரன், கட்டிடத்தின் மேலும் கீழும் எல்லாவிடங்களிலும் அங்கிருந்த எல்லோருக்கும் பிரசங்கித்தார். அவர் தன்னில் தானே மிகவும் விசேஷமானவர். 11கலிபோர்னியாவிலிருந்து வந்துள்ள சகோதரன் பேசுவதையும் நீங்கள் ரசிப்பீர்கள் என்பது உறுதி. அவருடைய பெயர் என்ன? அவருடைய பெயர் எனக்கு ஞாபகமில்லை பேச்சாளர்களின் பட்டியலில் இடம் பெற்றிருப்பவர். அவருடைய பெயர் எனக்கு மறந்து விட்டது. அவர் ஆணித்தரமாக பேசக்கூடியவர். அவருடைய செய்தியை நீங்கள் ரசிப்பீர்கள். இன்னும் இக்காலத்து பெரிய மனிதர்களான சகோ. ராபர்ட்ஸ் போன்றவர்கள் கலந்து கொள்ளக்கூடும். இந்நேரத்தில் ஒரு வேதவாக்கியம் என் ஞாபகத்துக்கு வருவதற்காக நான் நன்றியுள்ளவனாயிருக்கிறேன். ஒரு முறை தாவீது தேவனுடைய உடன்படிக்கை பெட்டி கூடாரங்களில் வாசமாயிருப்பதைக் கண்டான். அவன் சொன்னான்.... அவன் அக்காலத்து தீர்க்கதரிசியாகிய நாத்தானுடன் உட்கார்ந்து கொண்டிருந்தான். அவன் நாத்தானிடம், ''பாரும், கேதுரு மரங்களால் செய்யப்பட்ட வீட்டிலே நான் வாசம்பண்ணும்போது, தேவனுடைய பெட்டி திரைகளின் நடுவே வாசமாயிருப்பது நியாயமா?'' என்று கேட்டான். (2.சாமு;7:2). அப்பொழுது தீர்க்கதரிசியாகிய நாத்தான், ''தாவீதே, நீர் போய் உம்முடைய இருதயத்தில் உள்ளபடியெல்லாம் செய்யும். கர்த்தர் உம்மோடு இருக்கிறார்'' என்றான். அன்று ராத்திரியிலே கர்த்தர் தீர்க்கதரிசியை சந்தித்து, ''நீ போய் என் தாசனாகிய தாவீதை நோக்கிச் சொல்ல வேண்டியது என்னவென்றால்: ஆடுகளின் பின்னே நடந்த உன்னை நான் ஆட்டு மந்தையை விட்டு எடுத்து, பூமியிலிருக்கிற பெரியோர்களின் நாமத்திற்கு ஒத்த ஒரு பெரிய நாமத்தை உனக்கு உண்டாக்கினேன்'' என்றார். (2.சாமு;7:8-9). ''அது தாவீதுக்கு உண்டான தேவனுடைய கிருபை என்று நினைத்தேன். அது எனக்கும் உள்ளது'' என்று எண்ணினேன். உலக வரலாறு முடிவு பெறும் நாட்களில் வாழும் சிலாக்கியத்தைப் பெற்றுள்ள நாம், இந்த கூட்டங்களுக்கு வரும் பெரியோர்களுடன் நானும் எண்ணப்படுவதென்பது. கர்த்தர் உங்களை அதிகதிகமாய் ஆசிர்வதிப்பாராக. 12என் நல் நண்பர் சகோ. வால்டெஸ், ''சகோ. பிரான்ஹாமே, நான் 9.45 மணிக்கு செல்ல வேண்டும். எனவே, பேசுகிற உங்களைத் தொந்தரவு செய்யாதபடிக்கு ஒரு மூலைக்கு சென்று அங்கிருந்து சென்று விடுகிறேன்'' என்றார். அவர் இக்கூட்டங்களுக்கு முன்பு வந்திருக்கிறார். நான் ஒருவிதம் மெள்ள பேசுபவன். நான் பேசுவதை யோசித்தே பேச வேண்டும். என் வேதவாக்கியங்களையும் இன்னும் சில குறிப்பகளையும் இங்கு எழுதி வைத்திருக்கிறேன். ஆனால் நான் திரும்பிச் சென்று, நான் கூற வேண்டுமென்று கர்த்தர் எனக்குக் கட்டளையிட்டவைகளை நான் யோசித்துப் பார்த்து, அவருக்காக காத்திருக்க வேண்டியதாயுள்ளது. நான் ஒருவிதம் மெள்ள பேசுபவன். இன்று காலை உங்களை நீண்ட நேரம் வைத்திருக்க மாட்டேன் என்று நம்புகிறேன். நான் சகோ. வில்லியம்ஸிடம், ''சகோ. வில்லியம்ஸ், எனக்கு எவ்வளவு நேரம் அளிக்கப்பட்டுள்ளது? நான் குறித்து வைத்துள்ள வேதவாக்கியத்தின் பேரில் ஏறக்குறைய முப்பது நிமிடங்கள் பேசி, எல்லோரையும் வீட்டுக்கு அனுப்பிவிட முடியும். ஆனால் கூடுமானால், ஒரு சிறு பாடத்தை போதிக்கலாம் என்று நினைக்கிறேன். அது இன்று உங்களுக்கு முக்கியமான ஒன்றாக அமைந்து, நீங்கள் வீட்டுக்கு சென்று அதைக் குறித்து ஆழ்ந்து சிந்திக்க ஏதுவாயிருக்கும்'' என்றேன். நீங்கள் என்னைப் பார்க்க வேண்டும் என்பதற்காக நான் விடியற்காலை 3.30 மணிக்கு அல்லது 3.40க்கு எழுந்திருந்து இங்கு வர ஆயத்தப்பட்டிருக்க மாட்டேன். என்னைப் பார்க்க வேண்டுமென்று நான் கவலை கொள்வதில்லை. நான் எழுதி வைத்த சில வேத வாக்கியங்களை ஆராய்ந்து படித்து, அதன் பேரில் உத்தமமாக ஜெபம் செய்து, அது யாருக்காகிலும் உதவியாயிருக்கக் கூடும் என்று எண்ணினேன். நான்..... நமக்கு வெளிவேஷத்துக்கும் காட்சிகளுக்கும் நேரமில்லை. நாம் பணியில் ஈடுபட வேண்டியது அவசியம். இயேசு சீக்கிரமாய் வருகிறார் என்று நான் விசுவாசிக்கிறேன். 13அவர்கள் இதை ஒலிப்பதிவு செய்கின்றனர். ஒருக்கால் யாராவது இந்த ஒலி நாடாவை வாங்குவார்கள். இதை நான் கூற விரும்புகிறேன். சில சமயங்களில் நான்... அநேக முறை நான் தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறேன். அநேக முறை ஜனங்கள் என்னைக் கூப்பிட்டு, ''சகோ. பிரான்ஹாமே, இந்த அர்த்தத்திலா இதை கூறினீர்கள்?'' என்று கேட்டிருக்கின்றனர். சில சமயங்களில் நாம் ஒன்றைக் கூறும் போது, நான் என்ன அர்த்தத்தில் அதை கூறினேன் என்று நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும். சில நேரங்களில் நான் கூறுபவை வேறொருவர் கொண்டுள்ள கருத்துக்கு முரணாயுள்ளன. இதை நான் இப்பொழுது தெளிவுபடுத்த விரும்புகிறேன் - சிலர் கொண்டுள்ள கருத்துக்கு. ஆனால் நான்.... தேவனிடத்திலிருந்து வந்த செய்தியைப் பெற்றிருக்கிறேன். அப்படித்தான் நான் உணருகிறேன். சிலர் அது பிசாசினிடத்திலிருந்து வந்தது என்று எண்ணவகையுண்டு. வேறு சிலர் அது அர்த்தமற்றது என்று எண்ணலாம். ஆனால் எனக்கோ அது ஜீவன். நான் வேறுபாடு கொண்டிருக்க வேண்டும் என்பதற்காக வேறுபாடானவைகளையோ அல்லது மற்றவர்களைப் புண்படுத்தும் அல்லது உருவக்குத்தும் காரியங்களையோ கூறுவதில்லை. அந்தவிதமாக அது இருக்க வேண்டுமென்று நான் கூறுவதில்லை. அப்படி செய்தால், நான் மாய்மாலக்காரனாயிருப்பேன். தேவனிடம் ஜனங்கள் முன்னேற வேண்டும், தேவனை ஜனங்கள் இன்னும் அதிகமாக அறிய வேண்டும் என்பதற்காகவே இவைகளை கூறுகிறேன். இதை நானே கட்டி உண்டாக்கி கூறும் ஒன்றல்ல. அது தேவனிடமிருந்து நான் கண்டு கொண்ட ஒன்றாகும். 14ஜனங்களை நோகச் செய்யக் கூடிய ஒன்றை இந்த கன்வென்ஷன் கூட்டங்களில் நான் பேச நேர்ந்தால்.... ''நான் அவ்விதம் விசுவாசிப்பதில்லை'' என்று கூறுங்கள். ''நல்லது, நான் அநேகமுறை இப்படிப்பட்ட சொற்களைக் கூறியுள்ளேன். அங்கு உட்கார்ந்து கொண்டு என்னைக் கேட்டுக்கொண்டிருக்கும் மனைவி, என்னிடம் சம்பிரதாய முறைமை (formality) எதுவும் இல்லையென்பதை அறிவாள். நான் - நான்... நீங்கள் கோழியை தின்று கொண்டிருக்கும் போது, ஒரு எலும்பு கிடைப்பது போன்று. கோழியை விரும்பித்தின்னும் எவரும், கோழியில் எலும்பு உள்ளது என்பதற்காக கோழியைத் தின்னாமல் தூரப் போட்டு விடுவதில்லை. அவன் எலும்பை தூர எறிந்து விட்டு, கோழியைத் தின்கிறான். அது போன்று தான் செர்ரிபழம் தின்னும் விஷயத்திலும். எனக்கு கொட்டை அகப்பட்டால், நான் செர்ரி பழத்தை தூர எறிந்துவிட மாட்டேன், நான் கொட்டையை எறிந்து விடுவேன். அதுபோன்று, நான் கூட்டங்களில் கூறுபவை எவையாகிலும் உங்களுக்கு கொட்டையாகத் தென்பட்டால், அதை தள்ளிவிட்டு, அதைக் குறித்து உங்களை விட எனக்கு அதிகம் தெரியாது என்று கூறிவிடுங்கள். நீங்கள் சென்று உங்களுக்கு நன்மையாக காணப்படுபவைகளைப் புசியுங்கள். நான்.... 15கர்த்தர் தமது வார்த்தையை ஆசிர்வதித்து தருவாரென நம்புகிறேன். நான் வார்த்தையை - வார்த்தையை மாத்திரம் - உறுதியாக விசுவாசிப்பவன். வார்த்தையை மாத்திரமே விசுவாசிப்பவன். அந்த செய்தியை மாத்திரமே ஆண்டவர் எனக்குக் கொடுத்திருக்கிறார். நாம் ஒருவருக்கொருவர் கருத்து வேற்றுமை கொண்டிருக்கிறோம். இன்று காலை இங்கு நின்று கொண்டிருக்கும் என் சகோதரர், மிஷனரிமார்கள், சுவிசேஷகர், போதகர் ஆகியோரை கவனித்தேன். அவர்களின் எண்ணிக்கை நூற்றுக்கும் அதிகமாக இருக்கக்கூடும். அவர்கள் ஒவ்வொருவரும் இங்கு நின்று பேச என்னைக் காட்டிலும் தகுதி வாய்ந்தவர்கள். அதை நான். உறுதியாக அறிந்திருக்கிறேன். ஆனால் பாருங்கள், ஒருவர் மற்றவரின் ஸ்தானத்தை வகிக்க முடியாது. ஒருவர் மற்றவரின் செய்தியை ஏற்றுக்கொள்ள முடியாது. பாருங்கள், தமக்கு வெவ்வேறு முறைகள் உள்ளன. 16தேவன் இராஜாதிபத்தியமுள்ளவர். அவர்.... அவர் மாத்திரம் ஆதியில் தனிமையாயிருந்த போது, இவைகளை இப்படி உண்டாக்க வேண்டுமென்று அவருக்கு ஆலோசனை கூறியது யார்? பாருங்கள்? நமக்கு நித்திய ஜீவன் இருக்குமானால்; ஒரே வகை நித்திய ஜீவன் மாத்திரமே உண்டு, அதுதான் தேவன். எனவே, நமக்கு நித்திய ஜீவன் இருக்குமானால், அப்பொழுதே நாம் தேவனுடன் அவருடைய ஒருபாகமாக இருந்தோம். நாம் அவருடைய தன்மைகளாயிருந்தோம் (attributes). இப்பொழுதும் நாம் அவருடைய தன்மைகள். ஏனெனில், ''ஆதியிலே வார்த்தை இருந்தது.'' சிந்தனையை வெளிப்படுத்துவதே வார்த்தை. எனவே நாம் அவருடைய சிந்தையில் இருந்து, பிறகு வார்த்தையாக வெளிப்பட்டு, இப்பொழுது நாம் இருக்கிற வண்ணமாக இருக்கிறோம். அதன் காரணமாகத் தான் நம்முடைய பெயர்கள் - ஒருக்கால் இப்பொழுது நமக்குள்ள பெயர்கள் அல்ல - நம்முடைய பெயர்கள் உலகத் தோற்றத்துக்கு முன்பே ஆட்டுக்குட்டியானவரின் ஜீவ புஸ்தகத்தில் எழுதப்பட்டது. பாருங்கள்? அது அப்பொழுது எழுதப்படவில்லையென்றால், அது எப்பொழுதுமே அங்கிருக்காது. பாருங்கள்? அந்த புத்தகத்தில் பெயரெழுதப்பட்ட அனைவரையும் மீட்கவே இயேசு வந்தார். பாருங்கள், அவர் அறிந்திருந்தார். 17''குயவனிடம் யார் கூற முடியும்?'' என்று ரோமர் 9 உரைக்கிறது. களிமண், ''என்னை இப்படி இப்படி உண்டாக்கு என்று கூற முடியுமா?'' பாருங்கள்? முடியாது. தேவன் தமது தன்மைகள் அனைத்தையும் வெளிப்படுத்த வேண்டியவராயிருக்கிறார். எனவே, அவர் ஒரு பாத்திரத்தை கனவீனமான காரியத்துக்கும் மற்றொரு பாத்திரத்தை கனமான காரியத்துக்கும் உண்டாக்கி, ஒன்று மற்றொன்றுக்கு மேலாக உள்ளதென்று காண்பிக்கிறார். அவர் இராஜாதிபத்தியம் உள்ளவர், பாருங்கள், அவர் என்ன செய்ய வேண்டுமென்று யாரும் அவரிடம் கூற முடியாது. அவர் நம் ஒவ்வொருவரையும் வித்தியாசமாக உண்டாக்கியிருக்கிறார். நட்சத்திரங்களும் கூட ஒன்றுக்கொன்று வித்தியாசமாயுள்ளதாக நமக்கு வேதாகமத்தில் கூறப்பட்டுள்ளது. பரலோகத்திலுள்ள தூதர்களிலும் கூட வித்தியாசம் உண்டு என்று உங்களுக்குத் தெரியுமா? அங்கு தூதர்கள், கேரூபின்கள், சேராபீன்கள் போன்ற வெவ்வேறு வகையினர் உள்ளனர். நாம் எல்லோரும் வெவ்வேறு வகையினர். தேவனுக்கு பெரிய மலைகள் உண்டு, அவருக்கு சமபூமிகள், புல்தரைகள், பாலைவனங்கள், தண்ணீருள்ள கடல்கள் போன்று விதவிதமானவை உண்டு. பாருங்கள், அவர் வித்தியாசப்பட்டவர். அவர் பற்பல வகைகள் (variety) கொண்ட தேவன். அதுபோன்று அவர் போதகர்களையும் விதவிதமாக உண்டாக்கியிருக்கிறார் என்று எண்ணுகிறேன். 18இப்பொழுது சிறிது நேரம் ஜெபத்துக்காக நாம் தலை வணங்குவோம். நாம் வேதவசனத்தைப் படிக்கும் முன்பு இதைக் கூற விரும்புகிறேன். நான் நீண்ட நேரம் பிரசங்கம் செய்து, நீங்கள் எழுந்து போக வேண்டுமென்றால் எனக்கு ஆட்சேபனை இல்லை. நான் புரிந்து கொள்வேன். பாருங்கள், நான் நன்றாக புரிந்துகொள்வேன். நாம் ஜெபம் செய்வோம். தேவன் நம்மை எங்கிருந்து எடுத்தாரோ, அந்த மண்ணை நோக்கி நாம் தலை குனிந்து ஜெபம் செய்யும் போது, இங்குள்ள யாராகிலும் ஜெபத்தில் நினைவு கூரப்பட விரும்பினால், உங்கள் கையையுயர்த்துங்கள். உங்கள் கையின் கீழுள்ள இருதயத்தில் என்ன உள்ளதென்று அவருக்குத் தெரியும். 19அன்புள்ள பரலோகப் பிதாவே, நீர் எங்களை உண்டாக்கின மண்ணை நோக்கி தலை குனிந்தவர்களாய் உம்மை பயபக்தியுடன் அணுகுகிறோம். ஒரு இரவு நீர் ஆபிரகாமிடம், ''கடற்கரையிலுள்ள மணலை உன்னால் எண்ண முடியுமா?'' என்று நீர் கேட்டது எங்களுக்கு நினைவில் வருகிறது. அதன் பிறகு நீர் அவனிடம், ''நட்சத்திரங்களை நோக்கிப் பார்'' என்று சொல்லிவிட்டு, அவனால் அதை எண்ண முடியுமா என்று கேட்டீர். அது கூடாத காரியம் தான். அவனுடைய சந்ததி கடற்கரை மணலத்தனை போலவும், ஆகாயத்திலுள்ள நட்சத்திரங்களைப் போலவும் எண்ண முடியாததாயிருக்கும் என்று கூறினீர். நாங்கள் தோன்றின மண்ணை நோக்கி எங்கள் தலைகள் குனிந்திருக்கும் இவ்வேளையில், எங்கள் இருதயங்கள் நாங்கள் போய்க் கொண்டிருக்கும் பரலோகத்தை நோக்கியுள்ளது. மணலிலிருந்து நட்சத்திரங்கள் வரைக்கும், அது ஆபிரகாமின் சந்ததி! நாங்கள் கிறிஸ்துவுக்குள் மரித்தவர்களாய், ஆபிரகாமின் சந்ததியாராகி, வாக்குத்தத்தத்தின்படி அவனுடன் சுதந்தரவாளிகளாயிருக்கிறோம். உயிர் வாழ அவசியமான இயற்கை உணவை உண்டு ஐக்கியங்கொள்ள - இக்காலை இங்கு வந்திருக்கிறோம். அதை உண்டு எங்கள் வழியிலிருந்து விலக்கிவிட்டோம். இப்பொழுது எங்களுக்குள் இருக்கும் ஜீவனுக்கு பெலத்தை அளிக்கக்கூடிய உணவாகிய அந்த பரலோக மன்னாவை உம்மிடமிருந்து பெற விரும்புகிறோம். இரத்தம் இந்த இயற்கை உணவை இப்பொழுது கொண்டு சென்று, அதிக அணுக்களை உண்டாக்கி, இந்த நாளுக்கான சரீர பெலனை அளிக்கும் இந்நேரத்தில், நாங்கள் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு, இன்று காலை அவர் வார்த்தையின் மூலம் எங்கள் ஆவிக்குள் வரவும், நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் பெலனை அளிக்கவும் அருள்புரியும். ஏனெனில் பகல் சென்று போயிற்று, சாயங்கால நிழல்கள் விழுகின்றன, சாயங்கால வெளிச்சம் இங்குள்ளது. விரைவில் ''மேலே ஏறி வா'' என்னும் கட்டளையை நாங்கள் கேட்கப்போகிறோம். அந்த நேரத்தில் நாங்கள் ஆயத்தமாயிருக்க விரும்புகிறோம். எனவே பிதாவே, எங்களுக்குதவி செய்யும். புத்தகத்தைத் திறக்கவும் முத்திரைகளை உடைக்கவும் எந்த மனிதனும் பாத்திரனாயிருக்கவில்லை. ஆனால் உலகத்தோற்றத்துக்கு முன்பு அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானவர் வந்து புத்தகத்தை கையிலெடுத்து முத்திரைகளை உடைத்தார். ஓ தேவ ஆட்டுக்குட்டியே, இன்று காலை நீர் வந்து எங்களுக்கு புத்தகத்தை திறந்து தாரும். கர்த்தாவே, நாங்கள் உம்முடன் அந்த புத்தகத்தில் என்ன உள்ளதென்று கண்டு, இந்த வேளையில் நாங்கள் எப்படி ஆயத்தப்படுவதென்று அறிந்துகொள்ளும்படி செய்யும். ஒவ்வொரு சபையையும் ஆசிர்வதியும். வரப்போகும் கூட்டங்கள் ஒவ்வொன்றையும் ஆசிர்வதியும். எங்கள் சிறு கூட்டத்தையும் அதனுடன் இணைத்து ஆசிர்வதியும். இன்று நாங்கள் இவ்விடம் விட்டுச் செல்லும் போது, எம்மாவூருக்குச் சென்ற சீஷர்களைப் போல் நாங்களும், வழியிலே அவர் நம்முடனே பேசினபோது, நம்முடைய இருதயம் நமக்குள்ளே கொழுந்துவிட்டு எரியவில்லையா?'' என்று கூற அருள் புரியும். பிதாவே, இதை அருளும். இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம். ஆமென். 20வேதாகமத்தை திருப்ப விரும்புகிறவர்கள்; வழக்கமாக போதகர் வேதவசனங்களைப் படிக்கும் போது நீங்களும் அவருடன் கூட படித்து, அவர் எதிலிருந்து பேசுகிறார் என்று நீங்கள் அறிந்துகொள்ள விரும்புவதுண்டு. உங்களிடம் வேதாகமம் இருந்தால், மத்தேயு 4ம் அதிகாரத்துக்குத் திருப்புங்கள். நான் பேசுவதற்கு முன்பு என் பொருளைக் கூறப் போகின்றேன். அதை ஏறக்குறைய ஒரு வேதபாடமாக கற்றுத்தந்து, தொடர்ந்து செல்லும் போது, பிரசங்கம் செய்யத் தொடங்கலாம். இதற்கு நான் எப்படியோ 'அறுப்பின் நேரம்' என்னும் தலைப்பைக் கொடுத்திருக்கிறேன். ஏனென்று தெரியவில்லை. இந்த கருத்தை ஆதாரமாகக் கொள்ள ஒரு வேத பாகத்தைப் படித்து, அதிலிருந்து பொருளைத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். நாம் பரி. மத்தேயு 4ம் அதிகாரத்தின் ஒரு பாகத்தைப் படிக்கப் போகிறோம். இது இயேசுவுக்கு நேர்ந்த சோதனைகளைக் குறித்தது. அவர் பரிசுத்த ஆவியினால் நிறையப்பட்ட பிறகு, வனாந்தரத்துக்கு கொண்டு செல்லப்பட்டார். அப்பொழுது இயேசு பிசாசினால் சோதிக்கப்படுவதற்கு ஆவியானவராலே வனாந்தரத்திற்குக் கொண்டு போகப்பட்டார். அவர் இரவும் பகலும் நாற்பது நாள் உபவாசமாயிருந்த பின்பு, அவருக்குப் பசியுண்டாயிற்று. அப்பொழுது சோதனைக்காரன் அவரிடத்தில் வந்து: நீர் தேவனுடைய குமாரனேயானால், இந்தக் கல்லுகள் அப்பங்களாகும்படி சொல்லும் என்றான். அவர் பிரதியுத்தரமாக: மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே என்றார். அப்பொழுது பிசாசு அவரைப் பரிசுத்த நகரத்திற்குக் கொண்டுபோய், தேவாலயத்து உப்பரிகையின் மேல் அவரை நிறுத்தி: - நீர் தேவனுடைய குமாரனேயானால் தாழக்குதியும்; ஏனெனில், தம்முடைய தூதர்களுக்கு உம்மைக் குறித்துக் கட்டளையிடுவார்; உமது பாதம் கல்லில் இடறாதபடிக்கு அவர்கள் உம்மைக் கைகளில் ஏந்திக்கொண்டு போவார்கள் என்பதாய் எழுதியிருக்கிறது என்று சொன்னான். அதற்கு இயேசு: உன் தேவனாகிய கர்த்தரைப் பரீட்சை பாராதிருப்பாயாக என்றும் எழுதியிருக்கிறதே என்றார். மறுபடியும் பிசாசு அவரை மிகவும் உயர்ந்த மலையின் மேல் கொண்டுபோய், உலகத்தின் சகல ராஜ்யங்களையும் அவைகளின் மகிமையையும் அவருக்குக் காண்பித்து : நீர் சாஷ்டாங்கமாய் விழுந்து, என்னைப் பணிந்து கொண்டால், இவைகளையெல்லாம் உமக்குத் தருவேன் என்று சொன்னான். அப்பொழுது இயேசு: அப்பாலே போ சாத்தானே; உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்து கொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று எழுதியிருக்கிறதே என்றார். மத்;4:1-10 21நான் 4ம் வசனத்தை. திரும்பவும் படிக்க விரும்புகிறேன். அவர் பிரதியுத்தரமாக: மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே என்றார். இப்பொழுது பொருளுக்காக, ''தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தை'' என்பதை தெரிந்துகொள்ள விரும்புகிறேன். நாம் பேசும்போது, இதை மனதில் வைத்திருங்கள். இயேசு ஒருமுறை யோவான் 6:48ல்- அது சரியென்று நினைக்கிறேன், இன்று காலை அதை குறித்து வைத்தேன் ''ஜீவ அப்பம் நானே'' என்றார். அது பஸ்கா பண்டிகையின் போது. யூதர்கள் வனாந்தரத்தில் விழுந்த மன்னாவின் ஞாபகார்த்தமாக தங்கள் அப்பத்தை புசித்துக் கொண்டிருந்தனர்; வனாந்தரத்திலிருந்த கன்மலைக்கு அடையாளமாக அவர்கள் ஊற்றிலிருந்து தண்ணீரைப் பருகினர். அவர்கள் மகத்தான தருணத்தை அனுபவித்துக் கொண்டிருந்தனர். அப்பொழுது இயேசு அவர்கள் மத்தியில் உரத்த சத்தமாய், ''ஜீவ அப்பம் நானே.'' உங்கள் பிதாக்கள் வனாந்தரத்தில் நாற்பது ஆண்டுகளாக மன்னாவைப் புசித்திருந்தும் அவர்கள் ஒவ்வொருவரும் மரித்தார்கள். ஆனால் நானே வானத்திலிருந்திறங்கின ஜீவ அப்பம். இந்த அப்பத்தைப் புசிக்கிறவன் மரியாமல் என்றென்றைக்கும் பிழைப்பான்'' என்றார். கன்மலையைக்குறித்து அவர், ''நானே வனாந்தரத்திலிருந்த கன்மலை''. உங்கள் பிதாக்கள் தண்ணீர் குடித்த கன்மலை நானே'' என்றார். அவர்கள், ''அது எப்படியிருக்க முடியும்? உனக்கு இன்னும் ஐம்பது வயதாகவில்லை, நீ ஆபிரகாமைக் கண்டதாக சொல்கிறாயே! உனக்கு பிசாசு பிடித்திருக்கிறதென்றும் நீ பைத்தியக்காரன் என்றும் இப்பொழுது அறிந்து கொண்டோம்“ என்றனர். அப்பொழுது இயேசு, ''ஆபிரகாம் உண்டாகிறதற்கு முன்னமே நான் இருக்கிறேன்'' என்றார் (யோவான் 8:58). பாருங்கள்', ''இருக்கிறேன்'' என்பவரே முட்செடியில் அக்கினி ஸ்தம்பமாக மோசேயுடன் பேசினவர். நீங்கள் இலக்கண ரீதியாக அதை காண்பீர்களானால், இருந்தேன்'' என்றோ இருக்கப்போகிறேன்'' என்றோ அல்ல, ஆனால் எக்காலத்தும் “இருக்கிறேன்'' என்று நிகழ்காலத்தில். 22அவர் தம்மைக் குறித்து ''ஜீவ அப்பம் நானே'' என்று உரைத்ததை நாம் சிந்தித்துக் கொண்டிருந்தோம். இந்த மனிதன் எப்படி ஜீவ அப்பமாக இருக்க முடியும் என்று நாம் வியக்கிறோம். ''இந்த அப்பம் என் சரீரமாயிருக்கிறது'' என்றார் அவர். இந்த மனிதன் எப்படி அப்பமாக இருக்க முடியும்? அது விசித்திரமான ஒன்று. ஆனால் அதைக் குறித்து குழப்பமடையாதீர்கள். அவர் காலத்திலிருந்த மக்கள் அதைக் குறித்து குழப்பமடைந்தனர். இந்த மனிதன் எப்படி அப்பமாயிருக்க முடியுமென்று அவர்களால் அறிந்துகொள்ள முடியவில்லை. மேலும் பரி.யோவான் முதலாம் அதிகாரத்தில். ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. அந்த வார்த்தை மாம்சமாகி நமக்குள்ளே வாசம்பண்ணினார்'' என்பதாய் நமக்குக் கூறப்பட்டுள்ளது. எனவே வார்த்தை அப்பமானது. வார்த்தையும் அப்பமும் ஒருவராக இருக்க வேண்டும். இயேசுவே வார்த்தை, அவரே அப்பம். அவர் எப்படி வார்த்தையும் அப்பமுமாக இருக்க முடியும்? எல்லா.... அது மாம்ச சிந்தைக்கு குழப்பத்தை உண்டாக்குகிறது. ஆனால் இன்று காலை நம்மிடையே மாம்ச சிந்தை இல்லையென்றும், ஆவிக்குரிய சிந்தை மாத்திரமே உள்ளதென்றும், பிதா நமக்குக் கூற முற்படுபவைகளை நாம் புரிந்துகொள்ள முடியுமென்றும் நாம் நம்புகிறோம். இந்த வார்த்தைகள் குழப்பமுறச் செய்கின்றன என்று நாம் காண்கிறோம், ஆனால் அதே சமயத்தில் அவை வேதப்பிரகாரமான சத்தியம், பாருங்கள். ''இந்த மனிதன் எப்படி அப்பமாக இருக்க முடியும்?'' அப்படித்தான் அவர்கள் கூறினர். அப்படித்தான் ஜோசிபஸ் கூறினார் என்று நினைக்கிறேன். சரித்திரக்காரராகிய உங்களில் அநேகர்.... அதை நான் படித்து வருகையில். 23இப்பொழுது நான் வெளிப்படுத்தின விசேஷம் முதல் நான்கு அதிகாரங்கள் பேரில் விரிவுரைகளை எழுதி வருகிறேன். அந்த புத்தகம் விரைவில் வெளிவரும் என்று நம்புகிறேன். அது ஒரு பெரிய புத்தகமாக இருக்கும். பிறகு ஒவ்வொரு சபை காலத்தின் பேரிலும் ஒரு சிறு புத்தகத்தை வெளியிடுவேன். நான் சபை சரித்திரம் படித்து வருகையில்.... அது எனக்கு ஒருவிதமாக ஞாபகம் உள்ளது. ஜோசியஸ் என்று நினைக்கிறேன், அல்லது ஆதி எழுத்தாளர்களில் ஒருவர், ''வியாதியஸ்தர்களை சுகப்படுத்தினவராய் சுற்றித் திரிந்த இந்த நசரேயனாகிய இயேசுவின் சரீரத்தை அவருடைய சீஷர்கள் தோண்டியெடுத்து புசித்து விட்டனர்'' என்று எழுதியிருந்தார். பாருங்கள், அவர்கள் இராப்போஜனம் ஆசரித்தனர். ஆனால் அவர்களோ, சீஷர்கள் அவருடைய சரீரத்தை தோண்டியெடுத்து அதை புசித்து வந்ததாக எண்ணினர். அவருடைய சரீரத்துக்கு அடையாளமாக நாம் இராப்போஜனம் உட்கொள்கிறோம். ஏனெனில், அவர் வார்த்தையாயிருக்கிறார். பாருங்கள், இது குழப்பம் உண்டாக்குகிறது. அதே சமயத்தில் அதற்கு ஆதாரமாக வேதவசனங்கள் உள்ளன. இயேசு, வேதவாக்கியங்கள் எல்லாம் நிறைவேற வேண்டும்'' என்றார். பாருங்கள்? வேதவசனங்களுக்கு முரணாயுள்ளவைகளுக்கு நமது சிந்தையை விலக்கிக்கொள்ள நாம் எப்பொழுதும் விரும்புகிறோம். எந்நேரத்திலும் எக்காரணத்தைக் கொண்டும் வேதத்திலுள்ள ஒரு வார்த்தையையும் விட்டுவிடாதீர்கள். வேதத்துடன் அப்படியே நிலைந்திருங்கள். 24என்றாவது ஒருநாள் தேவன் ஜனங்களை நியாயந்தீர்க்க வேண்டும். அவர் சபையைக் கொண்டு ஜனங்களை நியாயந்தீர்ப்பாரானால், அது எந்த சபையாயிருக்கும்? அவர்கள் 'கத்தோலிக்க சபை' என்பார்களானால், எந்த கத்தோலிக்க சபை? பாருங்கள்? ஏனெனில் அவர்களிடையே ஒருவருக்கொருவர் கருத்து வேற்றுமை உண்டு. அவர்கள் நம்மோடு கொண்டுள்ள கருத்து வேற்றுமையைக் காட்டிலும் அது மோசமானது. பாருங்கள், அவர்களிடையே வெவ்வேறு வகையினர் உண்டு - ரோமன், வைதீகர், (ஜீபனைட்?), ஓ, வெவ்வேறு வகுப்பினர். அவர்கள் ஒருவர் தொண்டையை மற்றவர் நெறிக்கின்றனர். அப்படியிருக்க, அவர் எந்த கத்தோலிக்க சபையைக் கொண்டு நியாயந்தீர்ப்பார்? அவர் பிராடெஸ்டெண்டு சபையைக் கொண்டு நியாயந்தீர்ப்பாரானால், அது எந்த பிராடெஸ்டெண்டு சபை? ஒன்று மற்றதைக் காட்டிலும் வித்தியாசமாயுள்ளதே! அவர் உலகத்தை நியாயந்தீர்க்க வேண்டுமென்றால், அவர் ஏதாவது ஒரு நிர்ணயத்தை வைத்திருக்க வேண்டும். நம்மை நியாயந்தீர்க்க அவர் ஒரு நிர்ணயம் வைக்காமலிருந்தால், நம் இஷ்டப்படி வாழ்க்கை வாழ்ந்து, அவர் நம்மை நியாயந்தீர்க்க அவர் அநீதியுள்ளவராயிருப்பார். யார் செய்வது சரி? யார் சரியென்று நீங்கள் எப்படி கூறமுடியும்? ஒரு நிர்ணயம் நிச்சயமாக இருக்க வேண்டும். 25அவர் உலகத்தை இயேசு கிறிஸ்துவைக் கொண்டு நியாயந்தீர்க்கப் போவதாக வேதத்தில் கூறியுள்ளார். இயேசு வார்த்தை என்று இங்கு நாம் வாசிக்கிறோம். ''அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்'' என்று எபி;13:8 உரைக்கிறது. எனவே வார்த்தையாகிய இயேசுவின் பேரில் சபை கொண்டுள்ள மனப்பான்மையை ஆதாரமாகக் கொண்டு அவர் நியாயந்தீர்ப்பார். ''மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்.'' மனிதனுடைய வாயிலிருந்து புறப்படுகிற வார்த்தையினால் அல்ல, வேதாகமப் பள்ளியிலிருந்து புறப்படுகிற வார்த்தையினால் அல்ல, சபையிலிருந்து புறப்படுகிற வார்த்தையினால் அல்ல. ''தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற வார்த்தையினால்.'' மனிதன் அதைக் கொண்டு மாத்திரமே வாழ வேண்டும். மனிதனின் வியாக்கியானம் அல்ல, ஆனால் தேவனுடைய சொந்த வார்த்தை. ''இங்கு ஒரு தவறுள்ளது'' என்று நீங்கள் கூறலாம். அப்படியானால் தேவனே அதற்கு பொறுப்பாளி. அவர்தான் அதை எனக்குக் கொண்டு வந்தார், பாருங்கள். இங்கு அவர் கூறினவைகளை நான் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஒரு மனிதன் அப்பமாகவும் வார்த்தையாகவும் இருப்பது குழப்பமாக இருந்தால், நாம் சென்று அதை ஆராய்வோம். நாம் கண்டு பிடிப்போம். ஏனெனில் வேதவாக்கியங்கள் அனைத்தும் உண்மையானவை, அவை தவறாயிருக்க முடியாது. வேதவாக்கியம் ஒவ்வொன்றும் நிறைவேறும். அது எவ்வளவு விசித்திரமாகக் காணப்பட்ட போதிலும், அது எப்படியும் நிறைவேறும். 26சகோ. வில்லியம்ஸ் அல்லது இங்குள்ள சகோதரரில் ஒருவர்; நம்முடைய முப்பாட்டனார் உயிரோடெழுந்து எழுந்து வந்து, அவர்களுக்கு நீங்கள் தொலைக்காட்சியைக் காண்பித்தால் எப்படியிருக்கும்? அவர்களுடைய நாட்களில் யாராகிலும் ஒருவர், ''சத்தத்தை உலகம் பூராவும் கேட்கக்கூடிய நாள் ஒன்று வரப்போகிறது'' என்று தீர்க்கதரிசனம் உரைத்திருக்கலாம். அவர்கள் என்ன நினைத்திருப்பார்கள்? பாவம் அந்த கிழவனை விட்டு விடுங்கள். அவனுக்கு மூளை கோளாறு ஏற்பட்டு விட்டது'' என்று சொல்லியிருப்பார்கள். ''காற்றின் வழியாய் வண்ணம் பாய்ந்து வரக்கூடிய நாள் ஒன்று வரும்.'' அது இப்பொழுது இங்குள்ளது. அவர்கள் ஒரு பொத்தானை அழுத்தினால், உலகெங்கும் ஜனங்கள் நடமாடுவதை நீங்கள் திரையில் காணலாம். அந்த காலத்தில் அவர்கள் ''பாவம் கிழவன்'' என்று சொல்லியிருப்பார்கள். ஆனால் இன்றைக்கு அதை நாம் பெற்றிருக்கிறோம். இக்காலையில் அது இதே அறையில் உள்ளது. நாம் தொடர்ந்து செல்வதற்கு முன்பு, தேவன் இவ்வறையில் இருக்கிறார் என்பதை உங்கள் சிந்தனைக்கு கொண்டு வர விரும்புகிறேன். வார்த்தையின் காரண கர்த்தர் இங்கிருக்கிறார். எனவே நீங்கள் எப்படி உடுத்தியிருந்தாலும், உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எந்ததரத்தில் வாழ்ந்தாலும், எப்படிப்பட்ட வீட்டில் வாழ்ந்தாலும், எந்தவிதமான காரை ஓட்டினாலும், எவ்வளவாக கல்வி கற்றிருந்தாலும் அதனால் ஒன்றுமில்லை. தேவன் உங்கள் இருதயத்தைப் பார்க்கிறார். அவர் ஏன் இருதயத்தைப் பார்க்கிறார். நம்முடைய இருதயத்தினால் நாம் நியாயந்தீர்க்கப்படுகிறோம், நம்முடைய வார்த்தைகளினாலும் கூடஅல்ல. நம்முடைய இருதயம் நம்மை நியாயந்தீர்க்கிறது. ''இருதயத்தின் நிறைவினால் வாய் பேசும்.'' (மத்.12:34). இல்லையெனில், அது மாய்மாலம். 27இப்பொழுது இந்த அறையில் உலகெங்கிலுமிருந்து மனித உருவங்கள் கடந்து கொண்டிருக்கின்றன, குரல்கள் பாடிக் கொண்டிருக்கின்றன - இந்த அறையில் இப்பொழுது, உங்கள் புலன்கள் ஓரளவுக்கு மாத்திரமே உள்ளன. உங்கள் பார்வை ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் மாத்திரமே காணமுடியும். ஆனால் நீங்கள் ஒரு படிகத்தை (crystal) அல்லது ஒரு தொலைக்காட்சி குழாயைக் கொண்டு வந்து அதை போட்டால், அது ஈதர் அலைகளில் சிதறியிருக்கும் உருவங்களை ஒரு சானலில் (channel) ஒன்று கூட்டி, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இந்தியா அல்லது உலகில் வேறெந்த பாகத்திலும் உள்ளவர்களை நமக்குக் காண்பிக்கிறது. நீங்கள் தொலைக்காட்சி பெட்டி திரைக்கு முன் நின்று, அவர்கள் உடுத்தியிருக்கும் உடைகளின் வண்ணங்களையும், மரங்களின் வண்ணங்களையும், அவர்களுடைய ஒவ்வொரு அசைவையும் காணலாம். தொலைகாட்சி பெட்டியை போட்டு அது உண்மையா என்று பாருங்கள். 28அப்படியானால், எங்கோ நமது கண்களுக்கு மறைவாக இவை இப்பொழுது கடந்து கொண்டிருக்க வேண்டும். தேவன் ஆபிரகாமிடம், ''நட்சத்திரங்களை அண்ணாந்து பார்'' என்று கூறினதும் இதன் வழியாக கடந்து சென்றிருக்க வேண்டும். எலியா கர்மேல் பர்வதத்தில் நடத்தின சம்பவமும் இங்கிருந்தது. ஆதாம் இவ்வுலகில் இருந்த போது, அது இங்கிருந்தது. ஆனால் இப்பொழுது தான் அவர்கள் கண்டு பிடித்தனர். அவ்வாறே தேவனும், தூதர்களும் இங்குள்ளனர். என்றாகிலும் ஒரு நாள் அதுவும் தொலைகாட்சியைப் போலவே நமக்கு தத்ரூபமாய் இருக்கும். ஏனெனில், ஆவி நம்மை என்றென்றும் மரிக்காத வாழ்க்கைக்கு கொண்டு சென்றுவிடும். அப்பொழுது நாம் புரிந்து கொள்வோம். எனவே, நாம் அவருடைய வார்த்தையிலிருந்து பேசிக் கொண்டிருக்கிறோம். நாம் இப்பொழுது முயற்சி செய்யப் போகிறோம். 29தேவன், மகத்தான சிருஷ்டி கர்த்தராகிய தேவன்; இப்பொழுது நாம் இயற்கை வடிவில் பேச முயல்வோம். அவரை முதலில் இயற்கையில் கண்டு கொண்டு, பின்பு வார்த்தைக்கு வருவோம். இயற்கை வார்த்தையுடன் இணையாக செல்கின்றது. ஏனெனில் தேவனே இயற்கையை சிருஷ்டித்தவர். இயற்கை இயங்குவதை நீங்கள் காணும்போது.... அப்படித்தான் என்று நீங்கள் கண்டு கொள்வீர்கள். இயற்கையே என் முதல் வேதாகமமாக அமைந்திருந்தது. அது எப்படி இயங்குகிறது என்று காண்பதே.... தேவனை நான் இயற்கையில் கண்டு கொண்டேன். கோதுமை இயற்கை அளித்த தானியம். அதைக் கொண்டு நாம் அப்பம் உண்டாக்குகிறோம். அது நமது இயற்கை சரீரத்தை போஷிக்கிறது. இயற்கை அநேக இரகசியங்களை தன்னில் கொண்டுள்ளது. நாங்கள்.... இயற்கையை கவனித்து வந்ததன் மூலமாகவே நான் தேவனை முதன்முறையாக கண்டு கொண்டேன். ஏதோ ஒன்றுண்டு என்று அதன் மூலம் அறிந்து கொண்டேன். எனக்கு கல்வி இல்லை. எனவே, இயற்கையை ஆதாரமாகக் கொண்டு நான் அதிகம் பேசுவது வழக்கம். அது.... நான் அறியாமையை ஆதரிக்க முயலவில்லை. நான் என்ன கூற முயல்கிறேன் என்றால், தேவனை அறிந்துகொள்ள நமக்கு கல்வி அவசியமில்லை. 30கிறிஸ்துவுக்கு முன்னோடியாக விளங்கிய யோவான் ஸ்நானன் வனாந்தரத்திலிருந்து புறப்பட்டு வந்தான். அவன் ஒன்பதாம் வயதில் வனாந்தரத்துக்கு சென்றதாக நாம் கற்பிக்கப்பட்டுள்ளோம். அவனுடைய பணி மிகவும் முக்கியமானதால் அவன் வனாந்தரத்திலேயே தங்கியிருந்தான். அவனுடைய தகப்பன் ஒரு ஆசாரியன். அந்த ஆசாரியத்துவம் அல்லது ஸ்தாபன வழியில், அவனுடைய தகப்பன், ''யோவானே, நீ மேசியாவை அறிமுகம் செய்ய வேண்டியவன். உனக்குத் தெரியுமா, இந்த ஆசாரியர் வழியில் வந்துள்ள சகோதரர் இன்னார் இன்னார் மேசியாவாக இருப்பதற்கு மிகவும் பொருத்தமானவர்'' என்று கூறினான். யோவான் அதிலிருந்து விலகி, வனாந்தரத்துக்கு செல்ல வேண்டியதாயிற்று. ஏனெனில் மேசியா மனிதன் தெரிந்துகொள்ளும் ஒருவராக இல்லாமல், தேவன் தெரிந்து கொள்ளும் ஒருவராக இருக்க வேண்டும். எனவே அவனுக்கு ஏறக்குறைய ஒன்பது வயதான போது, அவன் வனாந்தரத்துக்கு சென்றான். நீங்கள் கவனிப்பீர்களானால், முப்பதாம் வயதில் அவன் வனாந்தரத்தை விட்டு வெளிவந்த போது, அவனுடைய பிரசங்கங்கள் ஒரு வேத பண்டிதரின் பிரசங்கங்களைப் போல் இருக்கவில்லை. அவன் பெரிய சொற்களை உபயோகிக்கவில்லை. அது இயற்கையை சார்ந்திருந்தது. அவன் அக்காலத்திலிருந்த சபை ஆட்களை நோக்கி, ''விரியன் பாம்புக்குட்டிகளே'' என்றான். அவன் வனாந்தரத்தில் கண்டது பாம்புகளே. அவனுக்கு பாம்புகள் என்றால் வெறுப்பு. அவை விஷ ஜந்துக்கள். அவைகளுடைய பற்களில் உயிர்ச்சேதம் விளைவிக்கும் விஷம் இருந்தது. எனவே அக்காலத்திலிருந்த சபையை அவன், ''விரியன் பாம்புக் குட்டிகளே, வருங்கோபத்துக்கு தப்பித்துக்கொள்ள உங்களுக்கு வகை காட்டினவன் யார்?'' நாங்கள் இதை சார்ந்தவர்கள், ''நாங்கள் ஜேசுயிட்ஸ்' (Jesuits),' நாங்கள் இன்னார் இன்னார்', நாங்கள் மெதோடிஸ்டு, பாப்டிஸ்டு, பிரஸ் பிடேரியன்'' என்று உங்களுக்குள்ளே சொல்லிக் கொள்ளாதிருங்கள். தேவன் இந்த கல்லுகளினாலே ஆபிரகாமுக்குப் பிள்ளைகளை உண்டுபண்ண வல்லவராயிருக்கிறார்'' என்றான்; (மத். 3:9). பாருங்கள்? 31''கோடாரியும்,'' அதை தான் அவன் வனாந்தரத்தில் உபயோகித்தான். ''அது மரங்களின் வேரருகே வைத்திருக்கிறது. நல்ல கனி கொடாத மரமெல்லாம் வெட்டுண்டு அக்கினியிலே போடப்படும்'' (மத்.3:10). பாருங்கள், கனி கொடுக்கும் மரத்தை அவன் வெட்ட மாட்டான். ஏனெனில், அவன் மரத்தின் கனிகளை உண்டு வாழ்ந்தான். ஆனால் கனி கொடாத மரம்! ஓ, நீங்கள் வேதவாக்கியங்கள் அனைத்தும் ஆராய்ந்து பார்த்தால், அவை பரிசுத்த ஆவியின் ஏவுதலினால் அருளப்பட்டு இயேசு கிறிஸ்துவுக்கு பொருத்தமாக அமைந்துள்ளன. பாருங்கள்? ''நல்ல கனிகொடாத மரமெல்லாம் வெட்டுண்டு அக்கினியிலே போடப்படும்''. பாருங்கள், அவன் இயற்கையை ஆதாரமாகக் கொண்டே தன் செய்தியை அளித்தான். 32இயேசு, ''நானே அப்பம். மனுஷன் ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான். நானே வார்த்தை'' என்று கூறினதை இப்பொழுது நாம் சந்திக்க வேண்டும். பாருங்கள்? நாம் இயற்கைக்குச் செல்வோம். நான் அநேக முறை அவ்வாறு செய்யும்படி நேர்ந்துள்ளது. இயற்கை அனைத்தும் ஒரேவிதமாக இயங்குகிறது. நீங்கள் பறவைகள் ஒன்று கூடும் நேரத்தை கவனியுங்கள். அவை கூடுகளை விட்டு வயல் வெளிக்குச் சென்று இரை தின்கின்றன. அவ்வாறே ஆடு மாடுகள் வயல் வெளிகளில் சிதறி புல் மேய்கின்றதை கவனியுங்கள். அப்பொழுது நீங்கள் தூண்டில் போட்டால், மீன் அதைக் கடித்து மாட்டிக்கொள்ளும். ஆனால் ஆடு மாடுகள்... பறவைகள் மரங்களுக்குத் திரும்பி வந்து, ஆடுமாடுகளும் மூலைக்கு ஒதுங்கிவிட்டால், நீங்கள் தூண்டிலை தண்ணீரிலிருந்து எடுத்துவிடுவது நல்லது. மீன்கள் அதை கடிக்காது. ஏனெனில், இயற்கை அனைத்தும் ஒரே விதமாக இயங்குகின்றது. 33அவ்வாறே தேவனுடைய வார்த்தையும் தொடர்ச்சியாக செல்கிறது. தேவன் எப்பொழுதுமே ஒரேவிதமாக செயல் புரிகிறார். ஆதியில் மனிதன் தேவனுடன் கொண்டிருந்த ஐக்கியத்தை இழந்துவிட்ட போது, குற்றமற்ற ஒன்றின் இரத்தத்தின் மூலம் அவனை இரட்சிக்க வேண்டுமென்று அவர் தீர்மானம் கொண்டார். அன்று முதல் அவர் தமது முறையை மாற்றவேயில்லை. நாம் கல்வி கற்று தந்து அதற்குள் நுழைக்கப் பார்த்தோம், ஸ்தாபனம் உண்டாக்கிக் கொண்டு அதற்குள் நுழைக்கப் பார்த்தோம், அவர்களைக் கெஞ்சி நுழைக்கப் பார்த்தோம், அவர்களை அடித்து திட்டி அதற்குள் நுழைக்கப் பார்த்தோம். ஆனால், இன்று வரை அதே முறை நிலைத்து வருகிறது. தேவன் ஒருவனை சிந்தப்பட்ட இரத்தத்தின் கீழ் மாத்திரமே சந்திக்க முடியும். நாம் உலக சபைகளின் ஆலோசனை சங்கத்தைக் கூட்டி அங்கு எல்லோரும் சந்திக்கும்படி செய்ய முடியாது. அது ஒருக்காலும் கிரியை செய்யாது. அது முன்பு கிரியை செய்ததுமில்லை. இனி கிரியை செய்யப் போவதுமில்லை. ஆகையால் தான் நான் அந்த முறைமைக்கு விரோதமாய் உள்ளேன். தேவன் ஒரு முறையை வைத்திருக்கிறான். எல்லா சபைகளும் ஒன்று சேருங்கள். அது உலக சபைகளின் ஆலோசனை சங்கமாயிருக்கும். ''நாம் எல்லாரும் ஒன்றாயிருக்கவும்'' (யோவான்;17:21) என்று இயேசு ஜெபித்தது அதற்காகவே'' என்று இன்று நீங்கள் கூறக் கேட்டீர்கள். பாருங்கள், ஆவியை அறிந்து கொள்ளாமல், அது மாம்ச சிந்தையில் எழுந்த கருத்து. 34இயேசு, ''பிதாவே, நாம் ஒன்றாயிருக்கிறது போல அவர்களும் ஒன்றாயிருக்கும்படி வேண்டிக் கொள்கிறேன்'' என்றார்; (யோவான்;17:22). ஏதோ ஒரு மனிதன் ஏதோ ஒன்றின் மேல் அதிகாரம் வகிப்பதல்ல அது. அது ஒருபோதும் கிரியை செய்யாது. ஒரு ஸ்தாபனம் மற்றொரு ஸ்தாபனத்தை ஆட்கொள்ளப் பார்க்கிறது. ஒரு மனிதன் மற்றொரு மனிதன் மேல் அதிகாரம் செலுத்த விழைகிறான். கிறிஸ்துவும் தேவனும் ஒன்றாயிருக்கிறது போல, நாமும் தேவனில் ஒன்றாயிருக்க வேண்டும். அது தான் அவர் ஜெபித்த ஜெபம். அவர் வார்த்தை என்பதால் நாமும் வார்த்தையாயிருந்து அவரைப் பிரதிபலிக்க வேண்டுமென்று இயேசு வேண்டிக் கொண்டார். அந்த அவருடைய ஜெபத்துக்கே மறு உத்தரவு அருளப்பட வேண்டும். பாருங்கள், சாத்தான் அதை மாம்ச சிந்தையில் எவ்விதம் குழப்பியுள்ளான் என்று. அதுவல்ல இயேசு ஏறெடுத்த ஜெபம் நாமெல்லாரும் ஒன்று சேர்ந்து ஒரு குறிப்பிட்ட கோட்பாட்டை உண்டாக்கிக் கொள்ள வேண்டும் என்று. அவர்கள் அவ்வாறு செய்யும் போது, தேவனை விட்டு விலகி, விலகிச் செல்கின்றனர். நாம் தேவனுடன் ஒன்றாயிருக்க அவர் விரும்புகிறார். தேவன் வார்த்தையாயிருக்கிறார். ஆகையால் தனிப்பட்ட நபர் ஒவ்வொருவரும் தன் இருதயத்தில் தேவனுடன் ஒன்றாயிருக்க வேண்டும். 35இவையனைத்தும் இவ்வாறு கிரியை செய்கின்றன என்று தேவன் அறிந்தவராய்; அப்படித்தான் நாம் தேவனை சில சமயங்களில் கண்டுகொள்கிறோம் - இயற்கையை கவனிப்பதன் மூலம். காலங்கள் சுற்றி சுற்றி வருதல் தேவனை நிரூபிக்கின்றது. அங்கு தான் நான் முதலில் தேவனைக் கண்டு கொண்டேன் - எப்படி வசந்த காலத்தில் ஜீவன் எழும்பி வந்து, அது ஜீவித்து விதையை உண்டாக்கி, செத்து பூமிக்கடியில் சென்று, உயிர்த்தெழுதலில் மறுபடியும் வந்து, இப்படியாக சுற்றி சுற்றி வருவதன் மூலம். ஓ, அதைக் குறித்து மணிக்கணக்காக நாம் பேசலாம். ஆனால் இந்த சுவிசேஷக சகோதரனுடைய இந்தியாவில் அவர்கள் எவ்வாறு வேறுபட்ட கருத்தை உடையவர்களாயிருக்கின்றனர்! அங்குள்ள அநேகரும், இன்னும் உலகம் முழுவதிலுமுள்ளவர்கள், இறந்து மறு ஜென்மம் எடுத்தல், (reincarnation) என்பதில் நம்பிக்கை கொண்டுள்ளதை நான் காண்கிறேன் அதாவது நீங்கள் மனிதனாக மரித்து, பறவையாக அல்லது மிருகமாக பிறக்கிறீர்கள் என்று. பாருங்கள், அது இயற்கையுடன் ஒத்துப்போவதில்லை. இயற்கை கூறுவது என்னவெனில், பூமிக்கடியில் சென்ற வித்து அதே வித்தாக மறுபடியும் எழும்பி வருகிறது. பாருங்கள்? எந்த இயேசு பூமிக்கடியில் சென்றாரோ, அதே இயேசு மறுபடியும் மேலே வந்தார். அல்லேலூயா! இறந்த சரீரம் பூமிக்கடியில் சென்று அது மலராகவோ அல்லது வேறெதாகவோ மேலே வராது. அது மனிதனாக அல்லது ஸ்திரீயாக மேலே வரும். அதை நாம் இயற்கையின் செயலில் காண்கிறோம். அது குளிர் காலத்தின் வழியாய் சென்று அழுக வேண்டும். ஆனால் அதில் ஜீவன் இருக்குமானால், அது பாதுகாக்கப்படுகிறது. 36ஆனால் அந்த வித்தில் ஜீவன் இல்லாமல் போனால், அது மறுபடியும் மேலே எழாது. அதனால் எழும்ப முடியாது. அதை மேலே எழுப்புவதற்கு அதில் ஒன்றும் இல்லை. அவ்வாறே நாம் ஒரு பெயர் கிறிஸ்தவராக இருப்போமானால்... உலகில் இருவித சபைகள் உண்டு. ஒன்று மாம்சத்துக்குரிய சபை, மற்றது ஆவிக்குரிய சபை. ஆனால் அவைகளிலுள்ள அனைவருமே ''கிறிஸ்தவர்கள்'' என்றழைக்கப்படுகின்றனர். மாம்சத்துக்குரிய சபை எழும்ப முடியாது. அது இப்பொழுது உலக சபைகளின் ஆலோசனை சங்கத்தில் எழும்பிக் கொண்டிருக்கிறது. ஆனால் கிறிஸ்தவன் உயிரோடெழுந்து கிறிஸ்துவை சந்திப்பான். ஏனெனில், மணவாட்டி சென்று அவரை சந்திக்க வேண்டும். எனவே, இவ்விரண்டும் வித்தியாசப்பட்டவை. இயற்கை நமக்காக இந்த இரகசியங்களை தனக்குள் வைத்துள்ளது. நாம் கவனித்தால் அதை கண்டுகொள்வோம். எனவே கிறிஸ்தவ மார்க்கம் மரணம், அடக்கம், உயிர்த்தெழுதல் என்னும் சத்தியத்தை உரைப்பதை நாம் காண்கிறோம். 37கோதுமை ரொட்டி அல்லது அப்பத்தைக் கொண்டு நாம் உயிர் வாழ்கிறோம் என்று அறிந்திருக்கிறோம். நாம் உயிர் வாழ ஒரே வழி, இறந்த பொருளை நமது சரீரத்தில் உட்கொள்வதன் மூலமே. வேறெந்த வழியிலும் நீங்கள் உயிர் வாழ. முடியாது. அண்மையில் மரக்கறி உண்பவர் என்னை சந்தித்து. “சகோ.பிரான்ஹாமே, காலை உணவுக்கு பன்றி இறைச்சியும் முட்டையும் சாப்பிடுகிறீர்கள் என்று நீங்கள் கூறினதை கேட்கும் வரைக்கும் உங்கள் பேரில் எனக்கு அதிக நம்பிக்கை இருந்தது. தேவ பக்தியுள்ள ஒரு மனிதன் அதை எப்படி புசிக்க முடியும்?'' என்றார். பாருங்கள், நான், ''அதனால் என்ன தவறு?'' என்றேன். எல்லாமே அசுத்தமானவை. ஆனால் அது தேவ வசனத்தினாலும், ஜெபத்தினாலும் பரிசுத்தமாக்கப்படுகின்றது. ''தேவன் படைத்ததெல்லாம் நல்லதாயிருக்கிறது. ஸ்தோத்திரத்தோடே ஏற்றுக்கொள்ளப்படுமாகில் ஒன்றும் தள்ளப்படத்தக்கதல்ல. அது தேவவசனத்தினாலும், ஜெபத்தினாலும் பரிசுத்தமாக்கப்படும். இவைகளை நீ சகோதரருக்குப் போதித்து வந்தால், இயேசு கிறிஸ்துவுக்கு நல்ல ஊழியக்காரனாயிருப்பாய்'' என்று வேதம் உரைக்கிறது. (1.தீமோ;4:4-6). அது உண்மை என்று நாம் காண்கிறோம். எனவே நான் கூறினேன்.... நான் அவரிடம், ''இறந்து போனவைகளை நீங்களும் தின்கிறீர்கள் அல்லவா?'' என்று கேட்டேன். அவர், ''ஓ. இல்லவே இல்லை, ஐயா'' என்றார். நான், ''நீங்கள் உயிர் வாழ வேண்டுமென்றால், இறந்த பொருளைக் கொண்டே உயிர் வாழ முடியும். நீங்கள் ரொட்டியை தின்கிறீர்கள். அதற்காக கோதுமை இறக்க வேண்டும். கீரைகளை சாப்பிட்டால், அது இறக்க வேண்டும். நீங்கள் பாலைக் குடிக்கும் போது, அதிலுள்ள கிருமிகளையும் சேர்த்து குடித்து விடுகின்றீர்கள்'' என்றேன். நீங்கள் இறந்த பொருளைக் கொண்டே உயிர் வாழ முடியும். 38நாம் மாம்சத்தில் வாழ்வதற்கு, ஏதாவதொன்று மரிக்க வேண்டுமானால், நாம் நித்திய காலமாக வாழ்வதற்கு ஒன்று மரிக்க வேண்டும் என்பது எவ்வளவு முக்கியம் வாய்ந்தது! அதை பெற மரணம் அவசியம். அப்பம்! இயேசு, ''ஜீவ அப்பம் நானே'' என்றார். கோதுமையால் செய்த அப்பம் உண்டு. ஆனால், இயேசு அப்படிப்பட்ட அப்பம் அல்ல. எனவே, அப்பத்தால் உயிர்வாழும் இரண்டு விதமான ஜீவன்கள் உள்ளன என்று நாம் தீர்மானிக்கலாம். அவர் கோதுமையல்ல, அவர் வார்த்தையல்ல. அவர் மாமிசமே. எனவே, இரண்டு விதமான ஜீவன்கள் உள்ளன. நாம் மாம்சப் பிரகாரமாக உயிர்வாழ கோதுமை சாகின்றது என்று கூறினேன். நாம் நித்திய காலமாக உயிர்வாழ வார்த்தை அப்பமாகிய இயேசு மரித்தார். அவர் வார்த்தை அப்பம். இப்பொழுது கவனியுங்கள், இதை மனதில் வைத்திருங்கள். இயேசுவின் வார்த்தைகள் உண்மையென்று நிரூபிக்க, நாம் இயற்கைக்கு சென்று அது இயங்குவதை கவனிக்க வேண்டியவர்களாயிருக்கிறோம். அதை கண்டுகொள்ள நாம் வேதத்துக்கு செல்வோம். நமது முக்கிய பொருளுக்கு நாம் வரும்வரைக்கும் வேத வாக்கியங்களுக்கு திரும்பிச் செல்வோம். ஏதேன் தோட்டத்தில் தேவன், தமது முதல் குடும்பம் உயிர் வாழ்வதற்கென, அவருடைய வார்த்தையை அளித்தார்- ஒவ்வொரு வார்த்தையும். பூமியில் வைக்கப்பட்ட முதல் குடும்பம் தேவனுடைய வார்த்தையில் நிலைத்திருக்கும் வரைக்கும், அவர்களுக்கு நித்திய ஜீவன் அளிக்கப்பட்டது. அதுவே தேவனுடைய திட்டம். அவர், ''நான் கர்த்தர், நான் மாறாதவர்'' என்கிறார்; (மல்;3:6). அதுவே அவருடைய திட்டமாக இப்பொழுதும் அமைந்துள்ளது. கோட்பாடுகள், ஸ்தாபனங்கள், மனிதனால் உண்டாக்கப்பட்ட சட்டங்கள் இவைகளினால் மனிதன் பிழைக்க வேண்டுமென்பது அவருடைய திட்டமல்ல. தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் அவன் பிழைக்க வேண்டுமென்பதே அவருடைய திட்டம். 39நாம் ஆதியாகமத்துக்கு செல்வோம். அதுவே தொடக்கம். ''ஆதியாகமம் என்றால் தொடக்கம்'' என்று பொருள். தம்முடைய குடும்ப வார்த்தையில் நிலைத்திருந்து வார்த்தையைக் கொண்டு வாழ்ந்த வரைக்கும் தேவன் அவர்களுக்கு நித்திய ஜீவனை அளித்திருந்தார். ஆனால் அவர்கள் அதை மீறின போது வாக்குத்தத்தம் என்னும் சங்கிலியில் ஒரு இணைப்பு அறுந்தபோது - மரணம் அவர்களை ஆட்கொண்டது. அதுவும் தேவனுடைய வாக்குத்தத்தமாயிருந்தது. அது ஒரு சங்கிலி. அதைப் பிடித்துக் கொண்டு நீங்கள் நரகத்தின் மேல் தொங்கிக் கொண்டிருக்கிறீர்கள். அது ஒன்று மாத்திரமே உங்களை நித்திய ஜீவனுக்கு கொண்டு செல்ல முடியும். ஆனால் விசுவாசி பாவனை விசுவாசியாகி, இந்த வார்த்தைக்கு முரணான ஒரு வார்த்தையும் கொண்டு வாழத்தலைப்பட்டால், அவன் தேவனுடன் கொண்டுள்ள ஐக்கியத்தை முறித்துப் போடுகிறான். ஒரு இணைப்பு அறுந்து விடுகிறது. இந்த வார்த்தையின் பேரில் நீங்கள் கொண்டுள்ள விசுவாசம் ஒரு சங்கிலியைப் போன்றது என்பதை ஞாபகம் கொள்ளுங்கள். ஒரு சங்கிலி அதன் மிகவும் பலவீனமாக இணைப்பில் மிகவும் பலமுள்ளதாயிருக்கிறது. அது உண்மை. ஏனெனில், அவ்வளவு பளுவைத்தான் அது தாங்கும். வார்த்தையில் ஏதாவதொன்று உங்களுக்கு குழப்பம் உண்டாக்கினால் - நீங்கள் வேறுவிதமாக கேள்விப்பட்டிருந்தால்; அவர்கள், ''இதுவா? ஓ, அது கடந்து சென்ற அப்போஸ்தலர்களின் நாட்களுக்குரியது'' என்கின்றனர். ஆனால், வேதமோ இயேசு கிறிஸ்து நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிறார்'' என்றுரைக்கிறது. எனவே, அது பலவீனமாக இருக்கவிட்டு விடாதீர்கள்! அதை அரணிட்டு இறுகப்பற்றிக் கொள்ளுங்கள். உங்கள் வாழ்க்கையை அதில் சுற்றிக்கொள்ளுங்கள். ஏனெனில், அது ஒன்று மாத்திரமே உங்களை நரகத்தின் அக்கினிக்கு மேல் கடத்தி கொண்டு செல்ல முடியும். அது உண்மை. 40முதல் குடும்பமாகிய ஆதாமும், ஏவாளும் இந்த சங்கிலியை அறுத்த போது; கவனியுங்கள், அவர்கள் ஒரு முழு வாக்கியத்தை மீறவில்லை, மூன்று வார்த்தைகளை மீறவில்லை, ஒரே ஒரு வார்த்தையை மாத்திரம் மீறினர்! மனிதன் தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் நரகத்தின் மேல் தொங்கிக் கொண்டிருப்பான். அங்குதான் மனிதன் நித்தியமாக அடையும் ஸ்தலம் தீர்மானிக்கப்படுகிறது. அவன் அந்த சங்கிலியைப் பிடித்து தொங்கிக் கொண்டிருக்கிறான், அல்லது கோட்பாட்டை பிடித்து தொங்கிக் கொண்டிருக்கிறான். சங்கிலியில் கோட்பாடு கலந்திருந்தால், அங்குதான் பலவீனமான இணைப்பு உள்ளது. நீங்கள் விழுந்து விடுவீர்கள். அங்கு தான் ஆதாமுக்கும், ஏவாளுக்கும் பலவீனமான இணைப்பு இருந்தது. அந்த பலவீனமான இணைப்பு ''நிச்சயமாக'' அவன் சொன்னான் தேவன்.... ஆனால் நிச்சயமாக தேவன் அதை சொன்னார். தேவன் அதை கூறியிருப்பாரானால், அந்த அர்த்தத்தில் தான் அவர் கூறினார். மேலும், ''நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய்!'' என்று அவர் கூறினதை நிறைவேற்ற வேண்டும். நீங்கள் கலப்படமற்ற தேவனுடைய வார்த்தையைத் தவிர வேறெதையாகிலும் உங்கள் ஆத்துமாவில் போடும் அந்த நாளில் தேவனை விட்டு பிரிக்கப்படுவீர்கள். இது மிகவும் கடினமானது, ஆனால் கூர்ந்து கவனியுங்கள். இப்பொழுது கவனியுங்கள். ஒரு வார்த்தை, வேதாகமத்தின் துவக்கத்தில் ஒரு வார்த்தை. ''ஒரே ஒரு வார்த்தை மனிதனை நித்திய ஜீவன் சங்கிலியிருந்து பிரித்தது'' என்று தேவன் கூறினார். அது மனிதனின் கால்களைக் கட்டி அவனைத் தலை கீழாகத் தொங்கவிடுவது போல்.... அவன் தன் கரங்களை வானத்தை நோக்கி உயர்த்தியிருந்தான். ஆனால், அவன் தொங்கிக் கொண்டிருந்த கால்களை அல்லது பாத விரல்களை வெட்டிப் போட்டால், அந்த சங்கிலி அறுபட்டு, நீங்கள் விழுந்துவிடுகிறீர்கள். அதை ஞாபகம் கொள்ளுங்கள். 41''மூன்று சாட்சிகளுடைய வாக்கினால் எந்த ஒரு வார்த்தையும் நிலவரப்பட வேண்டும்'' என்று வேதம் கூறுகிறது (மத்;18:16). நாம் இயேசுவுக்கு நேர்ந்த சோதனைகளைக் குறித்து இன்னும் சில நிமிடங்களில் சிந்திக்கும் போது, அதற்கு வருவோம். இன்றைக்கு ஊழியக்காரர்கள் விழுந்து போகத்தக்கதாக அவர்களுக்கு நேரிடும் மூன்று சோதனைகள்; சபை விழ்ந்து போகத்தக்கதாக அதற்கு நேரிடும் சோதனைகள்; ஸ்தாபனங்கள் விழுந்து போகத்தக்கதாக அதற்கு நேரிடும். மூன்று சோதனைகள் தனிப்பட்ட நபர் விழுந்து போகத்தக்கதாக அவருக்கு நேரிடும் மூன்று சோதனைகள். இவையனைத்தும் மூன்றாக அமைந்துள்ளன - நீதிமானாக்கப்படுதல், பரிசுத்தமாக்கப்படுதல், பரிசுத்த ஆவியின் அபிஷேகம்; பிதா, குமாரன், பரிசுத்த ஆவி போல். எல்லாமே மூன்றில் பரிபூரணப்படுகின்றன. 42இப்பொழுது கவனியுங்கள். தேவன் ஆதியிலே, தமது பிள்ளைகள் பிழைக்கத்தக்கதாக அவர்களுக்கு முதலாவதாக அளித்தது வார்த்தையே. அது உண்மையென்று நாம் காண்கிறோம். வேதாகமத்தின் நடுவில் இயேசு, ''மனுஷன் தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்'' என்றார். பிறகு வெளி. 22:18ல் இயேசுவே, ''இவைகளை நான் சாட்சியாக எச்சரிக்கிறேன். ஒருவன் இவைகளோடே எதையாகிலும் கூட்டினால் அல்லது எதையாகிலும் எடுத்துப்போட்டால், ஜீவ புஸ்தகத்திலிருந்து அவனுடைய பங்கு எடுத்து போடப்படும்'' என்கிறார். பாருங்கள், நாம் நல்லவர்களாக வாழுதல் என்னும் அடிப்படையில் அல்ல. அது நாம் சபைக்கு விசுவாசமுள்ளவர்களாக இருத்தல் என்னும் அடிப்படையில் அல்ல. முக்கியமான காரியம் என்னவெனில் அந்த வார்த்தையில் நிலைத்திருப்பதே. வார்த்தையைத் தவிர வேறெதையும் புசிக்காதீர்கள். அதில் நிலைத்திருங்கள். அவரே அந்த வார்த்தை. இப்பொழுது, நாம் கூர்ந்து கவனிப்போம். 43நாம் உண்டு உயிர்வாழும் இந்த அப்பத்தில் என்ன வித்தியாசம் உள்ளது? கோதுமையைக் கொண்டு செய்யப்படும் அப்பத்தினால் நாம் உயிர் வாழ்கிறோம். அது கலப்புள்ள. தானியம் அல்ல... அதை நிலத்தில் புதைத்தால் அது மறுபடியும் மேலே வருகிறது. அது முதிர்ந்த தானியமாக இருக்க வேண்டும். கெட்டுப்போன தானியங்கள் மேலே எழும்ப முடியாது. அது நமக்குத் தெரியும். இங்கு உட்கார்ந்து கொண்டிருக்கும் சகோ. சாத்மன் கனடாவில் கோதுமை பயிரிடுகிறார். கெட்டுப்போன தானியங்களை மண்ணில் விதைத்தால், கோதுமை பயிரை எதிர்பார்க்க முடியாதென்று அவருக்குத் தெரியும். ஏனெனில் கோதுமையிலுள்ள புழுக்கள் அதை அரிக்கும் போது, அதிலுள்ள ஜீவனை முதலில் தின்று விடுகின்றன. உங்கள் சரீரங்களை அரிக்கப்போகும் புழுக்கள் இப்பொழுதே உங்களுக்குள் இருக்கின்றன என்று உங்களுக்குத் தெரியுமா? யோபு, ''என் தோல் புழுக்கள் என் சரீரத்தை அழித்த பின்பு'' என்கிறான். (''என் தோல் முதலானவை அழுகிப்போன பின்பு'' என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது - யோபு;19:26). உங்களை சவப்பெட்டியில் வைத்து, காற்றுப் புகாமல் அதை ஆணியடித்தாலும், உங்களில் இருக்கும் புழுக்கள் உங்களைத் தின்றுபோடும். நீங்கள் மாவை எடுத்து சிறிது நேரம் மூடிவைத்தால், அதில் பூச்சி இருப்பதைக் காணலாம். அது என்ன? துவக்கத்திலேயே அதில் பூச்சி இருந்தது. அது துவக்கத்திலேயே இருந்தது. 44இது நல்ல தானியமாக இருக்க வேண்டும். அதில் தவறுகள், குறைகளின்றி கெட்டுப்போகாமல் இருக்க வேண்டும். அது கலப்பில்லாத தானியமாக இருக்க வேண்டும். அது கலப்புள்ளதாக இருந்து, அதை நீங்கள் விதைத்தால், அது வளராது. நீங்கள் அதை வேறொன்றுடன் கலக்கும் போது, அதன் ஜீவனைப் போக்கி விடுகிறீர்கள். இன்றைக்கு அதுவே சபைகளுக்கு நேர்ந்துள்ளது. அவர்கள் உலகத்துடன் கலந்துள்ளனர். அதன் காரணமாகவே ஒரு எழுப்புதல் உண்டாகும் போது, அதை தொடர்ந்து மற்றொரு எழுப்புதல் உண்டாவதில்லை. ஸ்தாபனம் உண்டாக்கிக் கொண்ட ஒவ்வொரு ஸ்தாபனமும் அந்த இடத்திலேயே மரித்து. மறுபடியும் எழும்புவதில்லை. ஏனெனில் அது தன் முறைமைகளில் உலகத்தையும் சேர்த்துவிட்டது, ஸ்தாபனம் உண்டாக்கிக் கொண்ட எந்த சபையும் மறுபடியும் எழுந்ததாக வரவாறு இல்லை. அது அங்கேயே மரித்து விடுகிறது. ஏன்? நீங்கள் அதை கலப்பு செய்துவிட்டீர்கள். 45அதற்கு மேல் ஒரு பேராயரை அமர்த்தாதீர்கள். பரிசுத்த ஆவி அதற்கு தலைவராக இருக்கட்டும். பாருங்கள்? களைகள் போன்றவைகளை புறம்பாக்கவே பரிசுத்த ஆவி அனுப்பப்பட்டார். பேராயரோ அல்லது மேற்பார்வையாளரோ என்ன நினைக்கிறார் என்றல்ல. சபையை அதன் நிலையில் வைத்திருக்க பரிசுத்த ஆவியே அவசியம். அவரே பரிபூரணமான வார்த்தை, அதை நாம் சிறிது நேரத்தில் பார்ப்போம். ஆதாம் சுயமாக தெரிந்துகொள்ளும்படி அனுமதிக்கப்பட்டான். அவன் வார்த்தையை ஏற்றுக்கொண்டு பிழைக்க வேண்டும், அல்லது ஒரு வார்த்தையை அவிசுவாசித்து மரிக்க வேண்டும். இன்றைக்கு நாமும் அதுபோன்று இவ்விரண்டில் ஒன்றைத் தெரிந்துகொள்ள வேண்டியவர்களாயிருக்கிறோம். தேவன் ஆதாமை வார்த்தையின் மேல் வைத்து, நம்மை கோட்பாடுகளில் வைப்பாரானால், அது அவரை அநீதியுள்ளவராக செய்து விடுகிறது. அது அவருடைய பரிசுத்தத்துக்கும் இராஜாதிபத்தியத்துக்கும் ஏற்ற செயல் அல்ல. எல்லா மனிதரையும் ஒரே அடிப்படையில் வைப்பதே அவருடைய இராஜாதி பத்தியத்துக்கு ஏற்றதாக இருக்கும். அவர் தேவன், அவர் மாறாதவர். தேவன் முதலில் செய்தது எதுவோ, அதையே என்றென்றைக்கும் செய்ய வேண்டும். அவர் தமது திட்டத்தை மாற்றுவதில்லை. அவர் செய்யும் ஒன்றே ஒன்று, அதை விரிவுபடுத்துகிறார், ஆனால் அதை மாற்றுவதில்லை. அது தொடர்ந்து சென்று கொண்டிருக்கிறது. 46ஆதாமுக்கு சுயமாக தெரிந்து கொள்ளுதல் அனுமதிக்கப்பட்டது அவன் வார்த்தையைப் பற்றிக் கொண்டால் பிழைப்பான், வார்த்தையைப் பற்றிக்கொள்ளாமல் போனால் மரிப்பான். இன்றைக்கு நாமும் அதே நிலையில் இருக்கிறோம். நாம் வார்த்தையில் நிலைத்திருந்தால் பிழைப்போம். மனுஷன் ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான். ''நாம் அப்படி செய்யாமல் போனால், மரிக்கிறோம். நாம் ஆவிக்குரிய - பிரகாரமாய் மரிக்கிறோம். ஓ, நாம் கூச்சலிட்டு, உதைத்து, எல்லவற்றையும் செய்யக்கூடும். ஆனால் பிழைத்திருப்பதென்பது அதுவல்ல. நான் ஒரு மிஷனரி. அஞ்ஞானிகள் நம்மைக் காட்டிலும் அதிகமாக கூச்சலிட்டு, தேவனை அறிந்திருப்பதாக அறிக்கை செய்வதை நான் கண்டிருக்கிறேன். அவர்கள் பிழைத்திருக்கவில்லை. அவர்கள் உயிரோடே செத்தவர்கள்''. அப்படித்தான் வேதம் கூறுகிறது. எனவே, நமக்கு இந்த தெரிந்து கொள்ளுதல் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஆதாமோ ஒரு வார்த்தையின் பேரில் சாத்தானுடன் ஒப்புரவாகி மரித்து போனான். தேவன் தமது கிருபையினாலும், இரக்கத்தினாலும், ஆதாமின் கீழ்ப்படியாமையை காணாமல் விட்டிருந்தால் நமக்கு அதன் விளைவாக நேரிடும் கஷ்டங்களும், குழந்தைகளின் மரணமும், யுத்தங்களும், துயரங்களும் இருந்திருக்காது. அவருடைய வார்த்தையின் இராஜாதிபத்தியம் அதை காணாமல் விட்டுவிட அவரை அனுமதித்திருக்கும். ஆனால் அவர் அப்படி செய்திருந்தால், அவர் அநீதியுள்ளவராகி விடுவார். உங்களுக்குப் புரிகிறதா? அவர் அதை காணாமல் விட முடியாது. துவக்கத்தில் அவர் ஆதாமுக்கு அதை காணாமல் விடவில்லை. அப்படியிருக்க, அவர் உங்களுக்கும் எனக்கும் அப்படி செய்யமாட்டார். நாம் வார்த்தைக்கு மாத்திரமே திரும்பி வர வேண்டியவர்களாயிருக்கிறோம். ''எல்லா மனிதர்களின் வார்த்தையும் பொய் என், வார்த்தையே சத்தியம்'' (ரோமர் : 3:4). 47இப்பொழுது நாம் எந்த நேரத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதைக் காண வேண்டும். இது அறுப்பின் நேரம். ஆதாமின் வீழ்ச்சிக்குப் பிறகு (அவன் வார்த்தையினால் சோதிக்கப்பட்டு விழுந்து போனான்), தேவன், தமது சிருஷ்டிப்பில் ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைக்கும் ஒரு மனிதனை கண்டுபிடிக்க முயன்றார். இப்பொழுது கவனியுங்கள். அவர் அதை கண்டுபிடிக்க முயன்றார் - அதாவது அவன் காலத்திற்கென்று அளிக்கப்பட்ட வார்த்தையின்படி வாழும் ஒருவனை. பாருங்கள், தேவன் தமது வார்த்தையை சிதறப்பண்ணினார். அவர் முடிவற்றவர், அவர் சர்வ வியாபி, (omni present) சர்வஞானி. (omniscient). எனவே அவர் எல்லாவற்றையும் அறிந்தவர். அவர் எல்லாவிடங்களிலும் இருக்க முடியாது. ஆனால் அவர் சர்வ ஞானியாக எல்லாவற்றையும் அறிந்துள்ள காரணத்தால் அவர் எல்லாவிடங்களிலும் சர்வவியாபியாக இருக்க முடிகிறது. அப்படித்தான் அவர் தமது முன்னறிவின்படி நம்மை முன்குறிக்கிறார் இவன் இரட்சிக்கப்பட வேண்டும், இவன் இழக்கப்பட வேண்டும் என்று அவர் விரும்புவதனால் அல்ல. யார் இழக்கப்படுவான், யார் இரட்சிக்கப்படுவான் என்று அவர் முன் கூட்டியே அறிந்திருந்தார். பாருங்கள்? எனவே அவருடைய முன்னறிவின்படி அவர் முன் குறிக்க முடிகிறது. அவர் எல்லாவற்றையுமே தமது மகிமைக்காக கிரியை செய்யும்படி பண்ணுகிறார். அதுதான் அவருடைய தன்மைகள். இப்பொழுது செய்து கொண்டிருக்கின்றன அவருடைய மகிமையை வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றன. ஒன்று கனமான பாத்திரம், மற்றொன்று கனவீனமான பாத்திரம். ஆனால் தேவனே அவைகளை உண்டாக்குகிறவர். ''விரும்புகிறவனாலும் அல்ல, ஓடுகிறவனாலும் அல்ல, இரங்குகிற தேவனாலேயாம்.'' (ரோமர்;9;16). பாருங்கள்? 48''என் பிதா ஒருவனை இழுத்துக் கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டேன்'' என்று இயேசு கூறினார். (யோவான்;6:44). ''பிதாவானவர் எனக்குக் கொடுக்கிற யாவும்'' - இறந்த காலம் - (ஆங்கில வேதாகமத்தில் (hath given me), அதாவது 'தந்த யாவும்' என்று இறந்த காலத்தில் எழுதப்பட்டுள்ளது - தமிழாக்கியோன்) ''வார்த்தையாகிய என்னிடத்தில் வரும்'' (யோவான்;6:37). ''அவர்கள் வருவதற்கு முன் கூட்டியே நியமிக்கப்படாமல் போனால், அவர்களால் எப்படி வர முடியும்?'' ''அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனை பேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங் கொடுத்தார்'' (யோவான்;1:12). பாருங்கள், ஏனெனில் அவர்களுடைய பெயர்கள் புத்தகத்தில் எழுதப்பட்டிருந்தது. புத்தகத்தில் பெயரெழுதப்பட்டவர்களை மீட்கவே அவர் வந்தார். வெளிப்படுத்தின விசேஷத்தில் முத்திரைகள் திறக்கப்பட்ட போது ஒரு புத்தகம் இருந்ததாக நாம் காண்கிறோம். சிங்காசனத்தில் வீற்றிருந்தவர், தேவன். அதை தமது வலது கரத்தில் பிடித்திருந்தார். வானத்திலாவது பூமியிலாவது அல்லது வேறெங்காவது ஒருவனும் அந்தப் புத்தகத்தை வாங்கவும் அதைப் பார்க்கவும் கூடாதிருந்தது. யோவான் மிகவும் அழுதான்.... ஏனெனில் மீட்பின் முழு புத்தகம் அங்கிருந்தது. 49அன்றொரு இரவு நடந்த கூட்டத்தின் போது அசெம்பிளி ஆப் காட் சபையைச் சேர்ந்த சகோதரனும் சகோதரியும், ''எல்லா தேசங்களும் ஒன்றாக கூடினபோது, யோவான் என்னைக் கண்டானா என்று வியக்கிறேன். அவன் என்னைக் கண்டானா?'' என்னும் பாடலைப் பாடினர். உங்கள் பெயர் அந்த புத்தகத்தில் எழுதப்பட்டிருந்தால், அவன் நிச்சயம் உங்களைக் கண்டிருப்பான். யோவானின் பெயரும் அதில் எழுதப்பட்டிருந்தது. அதைத் தொடவும் யாரும் பாத்திரவானாகக் காணப்படாததினால் யோவான் மிகவும் அழுதான். அப்பொழுது மூப்பர்களில் ஒருவன், ''யோவானே, நீ அழ வேண்டாம். யூதா கோத்திரத்துச் சிங்கம் ஜெயங் கொண்டிருக்கிறார்'' என்றான். சிங்கத்தைக் காண யோவான் சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டிருந்தபோது, திரைக்குப் பின்னாலிருந்து ஒரு ஆட்டுக்குட்டி வந்தது. அந்த ஆட்டுக்குட்டி உலகத்தோற்றத்துக்கு முன்பே அடிக்கப்பட்டதாயிருந்தது. அவன் இரத்தம் தோய்ந்த ஆட்டுக்குட்டி வெளியே வருவதைக் கண்டான். அந்த ஆட்டுக் குட்டியானவர் வந்து சிங்காசனத்தின் மேல் உட்கார்ந்தவருடைய வலது கரத்திலிருந்த புத்தகத்தை வாங்கி, அந்த புத்தகத்திலிருந்த அனைவரையும் அழைத்தார். அது மீட்பின் முழு புத்தகம். இது தான் அது. மீட்பின் புத்தகம். அந்த புத்தகத்தில் பெயரெழுதப்பட்டிருந்த அனைவரையும் அவர் மீட்டார், புத்தகத்தில் எழுதப்படாமல் வெளியே இருப்பவரை அல்ல. துவக்கம் உள்ள எதற்கும் ஒரு முடிவு உண்டு. உங்களுக்கு நித்திய ஜீவன் இருக்குமானால், நீங்கள் துவங்கவுமில்லை, உங்களுக்கு முடிவும் இராது. ஏனெனில், நீங்கள் தேவனுடைய குமாரரும், குமாரத்திகளுமாய், அவருடைய சிந்தனைகளின் அவருடைய வார்த்தையின் தன்மைகளாக (attributes) இருக்கிறீர்கள். உங்கள் பெயர் அந்த புத்தகத்தில் இருந்தால், உங்கள் ஜீவன் முடிவு பெறாது. அவர்களை மீட்கவே ஆட்டுக்குட்டியானவர் வந்தார், 'கிறிஸ்தவர்கள்' என்று வாயளவில் அறிக்கை செய்பவர்களை அல்ல, நல்ல தூய்மையான வாழ்க்கை வாழ்பவர்களை அல்ல, ஆனால் அந்த புத்தகத்தில் பெயரெழுதப்பட்டவர்களை. அவர்களை மாத்திரமே அவர் மீட்டுக் கொண்டார். 50அந்த ஒரு வார்த்தையில் தவறியதன் மூலம், ஆதாமின் வீழ்ச்சிக்கு சாத்தான் காரணமாயிருந்தான். தேவன் தொடர்ந்து, தமது சிருஷ்டிப்பில், ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைக்கும் ஒரு மனிதனை தேடிக் கொண்டிருந்தார். அவருடைய முதல் மனிதன் தவறினான். இந்த மனிதன் தன் காலத்தில் வாழுவான். இப்பொழுது, பாருங்கள், துவக்க முதற்கு வழி வழியாக வெவ்வேறு காலங்கள் இருக்குமென்று தேவன் தீர்க்கதரிசனம் உரைத்திருந்தார். அவரால் துவக்க முதற்கு முடிவு வரையிலும் என்ன நடக்குமென்று கூறமுடியும். ஏனெனில் அவர் சகலத்தையும் அறிந்திருக்கிறவர். அவர் சகலத்தையும் இயேசு கிறிஸ்துவைக் கொண்டு, அவருக்காக அவருடைய சித்தத்தின்படி உண்டாக்கினார். இப்பொழுது கூர்ந்து கவனியுங்கள், இதை காணத்தவறாதீர்கள். 51மோசே நோவாவின் செய்தியைக் கொண்டு வந்திருந்தால் எப்படியிருக்கும்? அது கிரியை செய்திருக்காது. முடியாது. இல்லை. இயேசு மோசேயின் செய்தியைக் கொண்டு வந்திருந்தால் எப்படியிருக்கும்? அது கிரியை செய்திருக்காது. நாம் மெதோடிஸ்டு செய்தி, பாப்டிஸ்டு செய்தி அல்லது பெந்தெகொஸ்தே செய்தியைக் கொண்டு வந்திருந்தால் எப்படி இருக்கும்? அது கிரியை செய்யாது, அவை நல்ல செய்திகளே. இன்னும் ஒரு நிமிடத்தில் வார்த்தையைக் கொண்டு நிரூபிக்கலாம். அவைகளுடைய காலத்தில் அவை நல்லவைகளாக இருந்தன. ஆனால் அந்த காலம் கடந்து விட்டது. இன்றைய காலத்துக்கு வேதம் என்ன சொல்கிறது என்பதை நாம் கண்டுகொள்ள வேண்டும் - இந்த நாளுக்கு. இதைக் கொண்டு தான் மனிதன் அவன் காலத்தில் வாழ வேண்டும். முழு வார்த்தையைக் கொண்டு பிழைக்கும் ஒரு மனிதனை அவர் கண்டுபிடிக்க விழைந்தார். 52அவர் முதலாவதாக நோவாவை பரிசோதித்தார். அவன் அவருக்கு தவறிழைத்தான். அவன் குடித்து வெறித்து தவறினான். தேவனுடைய சிறந்த வேலைப்பாடாக அமைந்திருந்த மோசேயை அவர் பரிசோதித்தார். அவனும் தவறினான். அவன் தன்னை மகிமைப்படுத்திக் கொண்ட காரணத்தால், வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்துக்குள் பிரவேசிக்க அவன் அனுமதிக்கப்படவில்லை. அதன்பிறகு அவரைப் பிரதிபலித்து காண்பிக்கும் தாவீது தோன்றினான்... தாவீதில் அவருடைய மகத்தான ஆயிரம் வருட அரசாட்சி. அவருடைய ராஜா எப்படி இருப்பார் என்பதை அவர் காண்பித்துக் கொண்டிருந்தார். அவனுடைய சிங்காசனத்தில் உட்கார அவனுடைய குமாரனை எழுப்புவதாக தேவன் தாவீதின் மேல் ஆணையிட்டார். தாவீது மிகவும் வீரமுள்ளவன். அவன் தேவனுடைய இருதயத்துக்கு ஏற்றவனாயிருந்தான். அவன் நன்மையானவைகளை செய்தான். அவன் பெலிஸ்தியரை முறியடித்து, பீடங்களை தகர்த்து, வார்த்தையில் நிலைத்திருந்தான். முடிவில் ஒரு அழகான ஸ்திரீ அவன் இருதயத்தைக் கெடுத்தாள். அவன் கற்பனையை மீறி, வார்த்தையை இழந்து, விபச்சாரம் செய்தான். பாருங்கள்? தாவீது தேவனுடைய இருதயத்துக்கு ஏற்றவனாயிருந்தும், அவருக்கு தவறிழைத்தான். மோசே அவருக்கு தவறிழைத்தான், மற்றவர் அனைவரும் அவருக்கு தவறிழைத்தனர். ஆனால் அவர்களுடைய வாழ்க்கை அனைத்தும் வரப்போகும் ஒருவரை பிரதிபலித்து காண்பித்தது. 53வெளிப்படுத்தின விசேஷத்தின் விரிவுரைகளை நான் எழுதும் போது, வேறொருவர் அதை இலக்கணரீதியாக அமைத்துக் கொண்டிருக்கிறார்... என்னுடைய இலக்கணம் மோசமானது. அதை நல்ல இலக்கணரீதியில் அமைத்து பெயர் சொற்களையும் பிரதி பெயர் சொற்களையும் சரியான இடங்களில் பொருத்த ஒரு அறிவாளி எனக்குண்டு. எனக்கு பெயர் சொற்களுக்கும் பிரதிபெயர் சொற்களுக்கும் வித்தியாசம் தெரியாது. ஆனால் அவருக்குத் தெரியும். அவர் அதை இலக்கணரீதியாக அமைத்துக் கொண்டிருக்கிறார்... எனக்குத் தெரிந்ததெல்லாம், தேவன் அதை எனக்கு அளிக்கிறார், அதை நான் எழுதிக்கொள்கிறேன். அவை வேத பள்ளிகளுக்கும் மற்றவிடங்களுக்கும் சென்றால் அவர்கள் தங்கள் வழியில் அதைப்படித்து புரிந்துகொள்ள வேண்டுமெனக் கருதி அது இவ்வாறு அமைக்கப்படுகிறது. இதை இலக்கண வடிவில் அமைத்துக் கொண்டிருக்கும் அந்த மனிதர் என்னிடம், ''சகோ. பிரான்ஹாமே, பெர்கமு சபையின் காலத்தில் இயேசு, 'ஜெயங்கொள்ளுகிறவனுக்கு விடிவெள்ளி நட்சத்திரத்தைக் கொடுப்பேன்' என்று கூறியிருக்கிறார். (தீயத்திரா சபை தமிழாக்கியோன்). அவரே தம்மை விடிவெள்ளி நட்சத்திரம் என்று அழைத்திருக்க, அவன் எப்படி விடிவெள்ளி நட்சத்திரத்தைப் பெறுவான்?'' என்று கேட்டார். 54பாருங்கள், ஆபிரகாமின் சந்ததியார் அனைவரும் நட்சத்திரங்களாக ஜொலிக்கின்றனர். ஆனால் நட்சத்திரத்துக்கு நட்சத்திரம் வித்தியாசமுள்ளது. நாம் ஒருவருக்கொருவர் வித்தியாசமாயிருக்கிறோம். இயேசுவே எல்லாரைக் காட்டிலும் மிகப் பிரகாசமான விடிவெள்ளி நட்சத்திரம். ஆனால் வெளிப்படுத்தல் 1ம் அதிகாரத்தில் அவர் தமது வலதுகரத்திலே ஏழு நட்சத்திரங்களை ஏந்திக் கொண்டிருப்பதாக நாம் காண்கிறோம். அந்த ஏழு நட்சத்திரங்களும், ஏழு சபைகளின் - வரப்போகும் ஏழு சபை காலங்களின் - தூதர்கள் என்று அவர் அர்த்தம் உரைக்கிறார் . ''அவர்கள் எப்படி விடிவெள்ளி நட்சத்திரத்தைப் பெற முடியும்?'' என்று அவர் கேட்டார். நான், ''அவருடைய கரத்திலுள்ள நட்சத்திரங்கள், விடிவெள்ளி நட்சத்திரத்தின் ஒளியைப் பிரதிபலிக்கும் நட்சத்திரங்களே, பாருங்கள், அந்தந்த காலத்தின் தூதன் வார்த்தையைக் கொண்டிருந்தான்'' என்றேன். அவர் வார்த்தை. ஆனால் ஒவ்வொரு தூதனும் அவனுடைய காலத்துக்குரிய வார்த்தைபயின் பாகத்தைப் பெற்றிருந்தான். உலக முறைமைகளிலிருந்தும் உலக காரியங்களிலிருந்தும் பிரிந்து வந்து அவரோடு நடக்க ஆயத்தமாயுள்ளவர்கள், அக்காலத்து தூதனின் மூலம் விடிவெள்ளி நட்சத்திரம் பிரதிபலிப்பதை காண்கின்றனர். அவர் நோவாவின் மூலம், மோசேயின் மூலம் பழைய ஏற்பாட்டை பிரதிபலித்தது போல். அவர்கள் அனைவரும் ஒருவரில் முடிவடைந்தனர். அவ்வாறே சபை காலங்களின் முடிவிலும், அது இயேசுவில் திரும்பவும் முடிவடையும் - அவர் வார்த்தை என்பதில். 55நாம் கிறிஸ்தவர்கள் என்னும் முறையில் அவரையே பிரதிபலிக்கிறோம். சூரியன் இல்லாத போது சந்திரன் அதை பிரதிபலிக்கிறது. அவ்வாறே தேவனுடைய குமாரன் இல்லாத போது. விசுவாகி அவரையே பிரதிபலிக்கிறான். அது வேதாகம ஒளி நமது வாழ்க்கையில் உறுதிபடுத்தப்பட்டு, வார்த்தை இருளில் ஒளியாயுள்ளது என்பதை காண்பிக்கிறது. நீங்கள் மலையின் மேல் வைக்கப்பட்ட விளக்காய் இருக்கிறீர்கள். அது சூரியன் அல்ல, அது விளக்கு. விளக்கு சூரியனுடைய ஸ்தானத்தை எடுத்துக் கொண்டு, ஒரு குறிப்பிட்ட அளவு ஒளியைக் கொடுக்கிறது. நாம் தேவனுடைய பிள்ளைகள், நாம் ஒரு குறிப்பிட்ட அளவு ஆவியை மாத்திரம் கொண்ட தேவனுடைய குமாரரும், குமாரத்திகளுமாயிருக்கிறோம். அவர் அதை அளவில்லாமல் பெற்றிருந்தார். நாம் பிரகாசிக்கும் நட்சத்திரம். நாம் ஒருமித்து உலகிற்கு ஒளியைக் கொடுக்கிறோம். ஆனால் அவர் சூரியனாக ஒவ்வொரு நட்சத்திரத்துக்கும் தமது ஒளியை கொடுக்கிறார். அல்லேலூயா! அவரை நான் விசுவாசிக்கிறேன். என் அவிசுவாசம் நீங்க தேவன் உதவி செய்வாராக! 56முடிவில் இந்த பரிபூரணமான ஒருவர் தோன்றினார். அவர் தோன்றின போது, நம்மைப் போல் எல்லவிதத்லும் சோதிக்கப்பட்டதாக வேதம் உரைக்கிறது. அவர் நோவாவைப் போல் சோதிக்கப்பட்டார். அவர் மோசேயைப் போல் சோதிக்கப்பட்டார். அவர் மற்றவர் அனைவரையும் போல் சோதிக்கப்பட்டார். நமக்கு நேரமிருந்தால், அதை விரிவாக உங்களுக்குக் காண்பிக்கலாம். ஆனால் நமக்கு நேரமில்லை. உங்கள் நேரத்தை அதிகம் எடுத்துக்கொள்ள நான் விரும்பவில்லை. அவர் அதேவிதமாக சோதிக்கப்பட்டார். சாத்தான் தன்னுடைய உபாயங்களை மாற்றிக் கொள்வதில்லை. தேவனும் அவ்வாறே தமது வழிமுறைகளை மாற்றிக்கொள்வதில்லை. காலங்கள் மாத்திரமே மாறுகின்றன. ஆனால் என்ன....சாத்தான் பூமியிலிருந்த தேவனின் முதல் குடும்பத்தில் புகுந்தான். சகோதரனே. சகோதரியே, இதை காணத் தவற வேண்டாம். அவன் எப்படி முதல் குடும்பத்தில் புகுந்தான்? அவர்கள் வார்த்தையை மீறச் செய்வதன் மூலமே. அவனால் உள்ளே புகமுடிந்ததேயன்றி வேறு வழியில் அவனால் புகமுடியவில்லை. ஏனெனில் அவர்கள் வார்த்தை என்னும் அரணுக்குப் பின்னால் இருந்தனர். அவனுக்கு மாத்திரம் புகுவதற்கு சிறு இடம் கிடைத்தால்! அவன் அப்படித்தான் ஒவ்வொரு காலத்திலிருந்த ஒவ்வொரு சபையிலும் ஒவ்வொரு விசுவாசியிலும் அந்த சிறு இடத்தை பயன்படுத்படுத்திப் புகுந்தான். ''வேதம் உண்மையென்று நான் விசுவாசிக்கிறேன்; ஆனால் இதை நான் விசுவாசிப்பதில்லை.'' ஓ, அந்த சிறு இடத்தில் அவன் புகுந்து விடுகிறான். அது மிகவும் மோசமானது, ஆனால் அதற்குள் அவன் நுழைந்துவிடுகிறான். ''தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும்!'' 57இதை இப்பொழுது கூர்ந்து கவனியுங்கள். தோன்ற வேண்டிய இந்த ஒருவர் முடிவில் தோன்றி, அவரும் மற்றவர்களைப் போல் சோதிக்கப்பட வேண்டிய தாயிருந்தது. ஒவ்வொரு முறையும் சாத்தான் தன் தாக்குதல்களில் எவ்வளவு மும்முரமாக ஈடுபட்டன் என்பதைக் கவனியுங்கள். அவன் ஏவாளுக்குச் செய்தது போல அவருக்கும் இயற்கை அப்பத்தைக் கொடுக்கப் பார்த்தான். ''நீர் இதைப் புசித்தால், நீர் இதை செய்தால்'', அப்படி ஏதாவதொன்றை அவன் கூறுகிறான். அதைதான் அவன் ஒவ்வொரு ஸ்தாபனத்துக்கும் செய்கிறான். அதை தான் அவன் தனிப்பட்ட ஒவ்வொரு நபருக்கும் செய்கிறான். நீங்கள் காணத்தக்கதான இயற்கையான காரியங்களை உங்களுக்கு அளிக்க அவன் முற்படுகிறான். அது உங்களை தூர அகற்றி விடுகிறது. ''இந்த பெரிய சபையை பார். அவர்கள் கோடிக்கணக்கில் அதில் போட்டிருக்கிறார்கள். நகரிலேயே எங்கள் சபைதான் மிகப் பெரிய சபை, நகராண்மை தலைவர் எங்கள் சபைக்கு வருகிறார். இதையெல்லாம் பார்! எங்கள் போதகருக்கு டி.டி , எல்.டி, பிஎச்.டி. போன்ற பட்டங்கள் உள்ளன. அவர் நிச்சயமாக அறிவாளியாக இருக்க வேண்டும்''. ஒரு கத்தோலிக்க குருவானவர் தான் பெற்ற பட்டங்களைக் கொண்டு இவரை எத்தனையோ மடங்கு மிஞ்சி விடுவார். குருவானவராவதற்கு பட்டங்களைப் பெற அவர் அறுபதுக்கும் அதிகமான புத்தகங்களைப் படித்து, உங்களுக்கு வேதம் தெரிந்த அளவுக்கு அப்புத்தகங்களிலுள்ளவைகளை அவர் அறிந்திருக்க வேண்டும். எனவே கல்வித் திறனை ஒப்பிடாதீர்கள். 58எப்பொழுதும் ஒப்பிட்டுப் பார்க்க முயல்வது உலகத்தில் காணப்படுவதைப் போன்றது. உலகத்தின் காரியங்களுடன் நீங்கள் ஒப்பிடாதீர்கள். நீங்கள் வேதாகமத்துடன் ஒப்பிட்டுப் பாருங்கள்! ஆனால் நாம் இன்றைக்கு செய்வது உலக காரியங்களுடன் ஒப்பிடுவதே. பெந்தெகொஸ்தே சபைகளிலும் அதுதான் நடக்கிறது. நால்வர் குழுக்கள் பாடுவதிலும், இன்னும் மற்றவைகளிலும், நாம் ஹாலிவுட்டைப் போல் நடந்து கொள்ள முயல்கிறோம். ஹாலிவுட் பளபளக்கிறது (glitters); ஆனால் சுவிசேஷமோ தகதகவெனப் பிரகாசிக்கிறது (glows). பளபளக்கிறதற்கும் தகதகவெனப் பிரகாசிப்பதற்கும் நிறைய வித்தியாசம் உண்டு. பாருங்கள்? ஹாலிவுட் தன் உடைகளினாலும் ரிச்கிகள், ரிக்கெட்டாக்கள் இவர்களினாலும் பளபளக்கிறது. ஆனால் தேவன் விசுவாசியின் தாழ்மையில் - அவன் எவ்வளவு படிப்பறிவில்லாதவனா யிருந்தபோதிலும் - தகதகவெனப் பிரகாசிக்கிறார். அவர் தாழ்மையில் தகதகவென பிரகாசிக்கிறார், ஹாலிவுட்டின் பளபளப்பினால் அல்ல. 59கவனியுங்கள், சாத்தான் தன் பழைய உபாயத்தை இயேகவின் மேல் பிரயோகிக்க முயன்றான். அவன் அதையே மோசேக்கு செய்தான், மற்றவர்களுக்கும் செய்தான். அவன் பளபளப்பாயுள்ள பெரிதான ஒன்றை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டுமெனக் கருதி அதை உங்கள் மேலும் பிரயோகிப்பான். நான் குழிமுயலை வேட்டையாடுவது எனக்கு ஞாபகத்துக்கு வருகிறது. நான் எனக்கு.... என் தந்தை புகையிலை உபயோகிப்பது வழக்கம், புகையிலையை முறுக்கி அதை சுற்றியிருக்கும் பழைய ஜிகினா காகிதம் உங்களுக்கு ஞாபகம் உள்ளதா என்று எனக்குத் தெரியாது. நான் அதை எடுத்துக்கொண்டு, துளையுண்டாக்கும் கம்பியினால் ஓடையைச் சுற்றி குழிமுயல் ஓடிக்கொண்டிருக்கும் இடத்தில் ஒரு துளையை உண்டாக்கி, இந்த ஜிகினா காகிதத்தை அங்கு ஒட்டிவிடுவேன். குழிமுயல் எப்பொழுதுமே பளபளப்பான ஒரு பொருளை அடைய விரும்பும். எனவே நிலா வெளிச்சத்தில் பளபளப்பாக காணப்படும் அந்த ஜிகினா காகிதத்தை அடைத்து அதை எடுத்துக் கொள்ள அதன் கையை நீட்டும். அதன் பிடியை அது தளரவிடாது. அது சிலசபை அங்கத்தினர்களைப் போன்றது. அது பிடிபட்டுவிட்டது என்று அறிந்த போதிலும், அதன் பிடியை அது தளர்த்தாது. ''நான் அப்படி செய்தால். அவர்கள் என்னை ஸ்தாபனத்தினின்று வெளியேற்றி விடுவார்கள்.'' அது அவருடைய மரணம், அவ்வளவு தான். சரி. கவனியுங்கள். குழிமுயல் அதனை இறுகப் பிடித்துக் கொண்டு, அதன் பிடியை விடுவதில்லை. 60சாத்தான் மற்றவர்களிடம் கையாண்ட அதே உபாயத்தைக் கையாண்டான். வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட வார்த்தை அப்பத்தைத் தவிர வேறெதையோ அவரைத் தின்னச் செய்ய அவன் முயன்றான். ஆனால் இயேசுவோ, ''மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல.... என்று எழுதிபிருக்கிறது'' என்றார். பாருங்கள்? அவர் அவனுக்குக் கீழ்படியச் செய்யும்படி சாத்தான் முயன்றான். அது நல்லதாக தென்பட்ட போதிலும், அவர் அவரைப் போஷித்துக்கொள்ள முடியுமென்று காணப்பட்ட போதிலும்; வேண்டுமானால் அவர் அப்படி செய்திருக்க முடியும். நீங்கள்..... நீங்களும் உங்களுக்கு விருப்பமான வழியில் நடந்து கொள்ளலாம். நீங்கள் அதை ஏற்றுக்கொள்ளலாம், அல்லது விட்டுவிடலாம். நீங்கள் எதை வேண்டுமானாலும் செய்யலாம். அந்த குழிமுயலுக்கு போதிய புத்தி இருந்திருந்தால், அது தன் கைகளை மூடி அதை இழுத்துக் கொண்டிருக்கும். ஆனால் அது அப்படி செய்யாது. அது அங்கேயே இறுகப்பற்றிக் கொண்டு நிலைத்திருக்கும். அப்படித்தான் அநேக பெயர் கிறிஸ்தவர்களும் செய்கின்றனர். அவர்களுக்கு இதைக் குறித்து எதையும் கேட்க விருப்பமில்லை, அவர் வந்து இதை கேட்க விரும்புவதில்லை, அவர்களுக்கு இது ஒன்றும் வேண்டாம். அப்படியானால் நீங்கள் சென்று மற்றதை இறுகப்பற்றிக் கொள்ளுங்கள், பாருங்கள், என்ன நடக்கிறதென்று பிறகு அறிந்துகொள்வீர்கள். 61இப்பொழுது கவனியுங்கள், ஒவ்வொரு மனிதனையும் பிழைக்கச் செய்யும் ஜீவ அப்பத்தைத் தவிர வேறெதையோ அவரைத் தின்னச் செய்ய சாத்தான் முயன்றான். ஆனால் இயேசுவோ பிதாவின் வார்த்தையில் நிலைத்திருந்தார். ஓ, அவன் ஏவாளை அப்பொழுது தாக்கவில்லை. அவன் மோசேயை தாக்கவில்லை. அவன் மற்றவர்களைத் தாக்கவில்லை. அவன் ஒவ்வொரு வார்த்தையையும் பிரதிபலிக்கப் போகும் அந்த ஒருவரைத் தாக்கினான். பாருங்கள், அவர் வார்த்தை என்னும் காரணத்தால் அவன் அப்படி செய்தான். ஆனால் இயேசுவோ அவனுடைய வேதசாஸ்திர உபதேசங்களை ஏற்றுக்கொள்ள மறுத்து, வார்த்தையில் நிலைநின்றார். ஆம், ஐயா. அவனுடைய புது வெளிச்சத்தை, அவனுடைய அதிகமான அனுபவத்தை, அவன் ஏவாளின் மேல் திணித்து. ''ஓ, நிச்சயமாக, தேவன்....'' என்று கூறினது போல. இயேசுவின் மேல் திணிக்க முடியவில்லை. நாம் அனைவரும் ஒன்று கூடி உலக சபைகளின் ஆலோசனை சங்கம் ஒன்று நிறுவினால், ஓ நிச்சயமாக தேவன் அதில் இருப்பார். நிச்சயமாக தேவன் அதில் இருப்பார். ''அவர் ஒற்றுமையையும், சகோதரத்துவத்தையும் விரும்புகிறார்''. ஆம், அவருடன் நாம் ஒற்றுமையாயிருக்க வேண்டுமேயன்றி, உலகத்துடன் அல்ல; அவருடன் நாம் சகோதரத்துவம் கொண்டிருந்து, அவரைத் தொழுதுகொள்ள வேண்டும். அதற்காகவே அவர் மரித்தார் - நீங்கள் அவரைத் தொழுதுகொள்ள வேண்டுமெனக் கருதி. எப்பொழுதும் போல, அவனால்.... அவன் இயேசுவிடம் தோல்வியடைந்தான் என்று காண்கிறோம். இயேசு, ''கர்த்தர் உரைக்கிறதாவது'' என்பதுடன் அவனிடம் சென்றார். 62அவன் ஒரு விசுவாசியைக் காணும்போது... விசுவாசிகளாகிய நீங்கள் ஒவ்வொருவரும் இதேவிதமாக சோதிக்கப்படுவதைக் கவனியுங்கள். நீங்கள் வேதத்தில் நிலைத்திருக்கிறீர்கள் என்று அவன் காணும்போது; நீங்கள், ''ஆம், நான் வேதத்தை விசுவாசிக்கிறேன். நான் எந்த கோட்பாட்டையும் பின்பற்றி அதில் சேர்ந்து கொள்ளப்போவதில்லை. நான் வேதத்தில் நிலைத்திருக்கப் போகின்றேன்'' என்று கூறுகிறீர்கள். உண்மையான சத்தியத்திலிருந்தும், வார்த்தையை விசுவாசிப்பதிலிருந்தும் அவன் உங்களை விலக்க முடியாவிட்டால், இரண்டாம் முறை அவன் இயேசுவுக்கு என்ன செய்தான் என்பதை நீங்கள் கவனிக்க விரும்புகிறேன். நீங்கள், நான் எந்த கோட்பாட்டையும் சேர மாட்டேன். நான் சுயாதீனமாக பிறந்தவன். நான் வார்த்தையில் நிலைத்திருக்கப் போகிறேன். நான் இதை அதை, மற்றதை செய்யப் போகிறேன் என்று கூறுகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். பாருங்கள், நீங்கள் சபையை சேர்ந்துகொள்ள வேண்டுமென்று அவன் அரும்பாடுபடுகிறான், அவனால் முடியவில்லை என்றால், அவன் உங்களுக்கு வேறெதையாகிலும் செய்வான். ஓ சகோதரனே, இதை கவனி. 63அவனால் முடியவில்லை என்றால், அவன் உங்களை தன் சொந்த வேதசாஸ்திர பள்ளிகளுக்கு அனுப்பி, அவனுடைய சொந்த வேதசாஸ்திரிகள் உங்களை கற்பிக்கப்படும்படிக்கு செய்து விடுவான். பாருங்கள், அங்கு சாத்தான் வியாக்கியானி. ''ஓ, அற்புதங்களின் நாட்கள் கடந்துவிட்டன. அங்குள்ள கூட்டம் ஜனங்கள் மதபேதமுள்ளவர்கள். இவர்களோ அப்படியில்லை, பாருங்கள்'', அவன் உங்களை அங்கு அனுப்பி விடுவான். ஓ, நீங்கள், சகோ. பிரான்ஹாமே, ஒரு நிமிடம் பொறும், ஒரு நிமிடம்'' எனலாம். ஆம், நாம் ஒரு நிமிடம் பொறுப்போம், பாருங்கள். நீங்கள், 'இதை நாம் இப்பொழுதெல்லாம் செய்யக்கூடாது அல்லவா?'' எனலாம். அப்படி இல்லை, ஐயா. இல்லை, ஐயா.. இயேசு, ''சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, நான் உங்களுக்குப் போதித்தவைகளை உங்கள் ஞாபகத்துக்குக் கொண்டு வந்து, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார்'' என்றார். அதுவே ஆவியினால் நிறையப்பட்ட உண்மையான சபை. அது வார்த்தையில் நிலைத்திருந்து, வார்த்தையை, தேவனை, பூமியில் பிரதிபலிக்கும். பாருங்கள்? அப்படிப்பட்டவனுக்கு எந்த வேதபண்டிதனும் அவசியமில்லை. ஏனெனில் அவருடைய வார்த்தையை சுயமாக வியாக்கியானிக்கக் கூடாது. அவரே தம்முடைய வார்த்தையை உண்மையென்று உறுதிப்படுத்தி நிரூபிப்பதன் மூலம் அதை வியாக்கியானப்படுத்துகிறார். மெதோடிஸ்டு சபையானது, பெந்தெகொஸ்தே நாளிலிருந்த அவர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொண்டது போல நீங்கள் பெற முடியாது என்று உங்களிடம் கூறினபோது, நீங்கள் அதற்கு கவனம் செலுத்தினீர்களா? நிச்சயமாக இல்லை. நீங்கள் முன் சென்று எப்படியும் பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொண்டீர்கள். பாருங்கள்? ஏனெனில்... 64நான் திரித்துவத்தைக் குறித்து அன்றொரு இரவு ஒரு பாப்டிஸ்டு போதகரிடம் பேசிக் கொண்டிருந்தேன். நான் அவரிடம் அது ஒரு குறியீட்டுச் சொல் (terminology) மாத்திரமே என்றேன். அவருடன் கூட வேதாகமப் பள்ளியிலிருந்த வேறொரு போதகர், ''திரு. பிரான்ஹாமே, நீர் ஜனங்கள் அப்போஸ்தல் மார்க்கத்தில் நம்பிக்கை கொள்ளும்படி செய்கிறீர்'' என்றார். நான்,''நிச்சயமாக, அந்த ஒரு மார்க்கம் மாத்திரமே உள்ளது'' என்று விடையளித்தேன். அவர், ''ஐயா, நீர் எந்த பள்ளிக்குச் சென்றீர்?'' என்று கேட்டார். நான், என் முழங்காலில், என் சகோதரனே, வேறெங்கும் இல்லை... பார், அங்குதான் நான் பெற்றுக் கொண்டேன். ''வேதத்துவம் (theology) அல்ல, முழங்கால் தத்துவம் (kneeology)அங்குதான் அவரை நான் கண்டு கொண்டேன்'' என்றேன். அவர், ''திரு. பிரான்ஹாமே, பெந்தெகொஸ்தே நாளில் அவர்கள் பெற்றுக் கொண்ட பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் போல் இன்றைக்கும் பெற்றுக் கொள்ள முடியும் என்றா கூறுகிறீர்?'' என்று கேட்டார். நான், ''ஐயா, இயேசு கிறிஸ்து நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிறார் என்று வேதம் உரைக்கிறது. அது பெந்தெகொஸ்தே நாளில் வந்த இயேசு'' என்றேன். ஓ, ஆமாம். அது அவரே தான். இன்னும் கொஞ்சக் காலத்தில்: நான் பிதாவை வேண்டிக் கொள்ளுவேன். அப்பொழுது பரிசுத்த ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார். இன்னும் கொஞ்சக் காலத்திலே உலகம் என்னைக் காணாது, நீங்களோ என்னைக் காண்பீர்கள். நான் உங்களுடனே வாசம் பண்ணி, உலகத்தின் முடிவு பரியந்தம் உங்களுக்குள்ளே இருப்பேன்'' (யோவான்;10:19,17). நான் அந்த போதகரிடம், ''ஆம், பெந்தெகொஸ்தே நாளில் வந்தவர் அவரே. ஆம், ஐயா. அவர் வந்து, அவர்களுக்குள் பரிசுத்த ஆவியின் ரூபத்தில் வாசம் செய்தார். நாங்கள் தேவ தத்துவத்தை புரிந்து கொண்டுள்ளபடி, இயேசு கிறிஸ்து பரிசுத்த ஆவி என்னும் நபராக வந்தார்'' என்றேன். 65இப்பொழுது கவனியுங்கள், சாத்தானுக்கு அவருடைய வேதசாஸ்திரம் அவசியமில்லை. இந்த மனிதர் என்னிடம், ''திரு. பிரான்ஹாமே, நான் ஒரு குறிப்பிட்ட வேதாகமப் பள்ளியில் படித்தவன் என்பதை நீங்கள் விளங்கிக்கொள்ள வேண்டும். நாங்கள் பயிற்சி பெற்றவர்கள்'' என்றார். நான், ''உங்கள் நிகழ்ச்சியை நான் எப்பொழுதும் கேட்கிறேன்'' என்றேன். பாருங்கள்? அவர், ''நாங்கள் அங்கு பயிற்சி பெற்றவர்கள். பரிசுத்த ஆவியின் அபிஷேகம் சீஷர்களுக்கு மாத்திரமே'' என்றார். ''மேலறையில் நூற்றிருபது பேர் இருந்ததாக வேதம் உரைக்கிறது. அப்படியானால் யார் சரி, நீங்களா, வார்த்தையா?'' என்று கேட்டேன். நான் தொடர்ந்து, ''மேலும் பிலிப்பு சமாரியர் களிடத்தில் பிரசங்கம் செய்து, அவர்களுக்கு இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் கொடுத்த போது, பரிசுத்த ஆவி அவர்கள் மேல் வரவில்லை. ஏனெனில், பேதுரு திறவு கோல்களை வைத்திருந்தான். எனவே, அவன் பேதுருவினிடம் ஆளனுப்பி அவனை வரவழைத்தான். பேதுரு அவர்கள் மேல் கைகளை வைத்த போது, பரிசுத்த ஆவி அவர்கள் மேல் வந்தார்.'' வேதம், ''பரிசுத்த ஆவி என்று கூறுகிறது'' என்றேன். 66நான் மேலும், ''திறவுகோல்களை வைத்திருந்த பேதுரு தரிசனம் கண்டு, கொர்நேலியுவின் வீட்டிற்கு சென்றான்... இந்த வார்த்தைகளைப் பேதுரு பேசிக்கொண்டிருக் கையில், பரிசுத்த ஆவியானவர் அவர்கள் மேல் இறங்கினார். அவர்கள் பல பாஷைகளைப் பேசுகிறதையும் தேவனைப் புகழுகிறதையும் பேதுருவோடு கூட வந்திருந்த விசுவாசிகள் கேட்டு பிரமிப்படைந்தார்கள். அப்பொழுது பேதுரு: நம்மைப் போல பரிசுத்த ஆவியைப் பெற்ற இவர்களும் ஞானஸ்நானம் பெறாதபடிக்கு எவனாகிலும் தண்ணீரை விலக்கலாமா என்று சொல்லி, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்கும்படி கட்டளையிட்டான்'' என்று வேதம் உரைக்கிறது; (அப்;10:44-48). முப்பது ஆண்டுகள் கழித்து பவுல் மேடான தேசங்கள் வழியாய்ப் போய் எபேசுவுக்கு வந்தபோது, பாப்டிஸ்டு மக்கள் பெரிய எழுப்புதல் கூட்டம் ஒன்றை நடத்திக் கொண்டிருப்பதைக் கண்டான். பெரிய அற்புதங்கள் அங்கு நடந்து கொண்டிருந்தன. அவர்கள் சத்தமிட்டு கர்த்தரைத் துதித்துக் கொண்டிருந்தனர். இருபது பேர் கொண்ட ஒரு சபைக்கு பவுல் விஜயம் செய்தான். அங்கு ஆக்கில்லாவும், பிரிஸ்கில்லாளும் வந்திருந்தனர். அப்பொல்லோ என்னும் இரட்சிக்கப்பட்ட வழக்கறிஞர் ஒருவன் இயேசுவே கிறிஸ்து என்று வேதத்தின் வாயிலாக நிரூபித்துக் கொண்டிருந்தான். அங்கு மிகுந்த சந்தோஷமும் மகத்தான கூட்டமும் உண்டாயிருந்தது. பவுல் அந்த வழியாய் கடந்து வந்தான்.... கர்த்தர் அவனை சிறைச் சாலையிலிருந்து விடுவித்தார். குறி சொல்லும் ஒரு பெண்ணிலிருந்த அசுத்த ஆவியை அவன் துரத்தின காரணத்தால் சிறையில் அடைக்கப்பட்டான். அவன் தேவனுடைய ஊழியத்தின் நிமித்தம் அந்த வழியாய் வந்தபோது. அந்த கூட்டத்துக்கு சென்றான். அவன், நீ பெரிய மனிதன் என்று ஒத்துக்கொள்கிறேன். ஆனால் நீ விசுவாசியான பிறகு, ''பரிசுத்த ஆவியைப் பெற்றாயா?'' என்று கேட்டான். அவன் விசுவாசியான போதே பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்டதாக விசுவாசித்தான். ஆனால் அவனோ, ''நீ விசுவாசியான பிறகு பரிசுத்த ஆவியைப் பெற்றாயா? என்று கேட்டான். அவன், ''பரிசுத்த ஆவி உண்டென்பதை நாங்கள் கேள்விப்படவே இல்லை'' என்றான். பவுல், ''அப்படியானால் நீ எந்த ஞானஸ்நானம் பெற்றாய்?'' என்றான். அவன், ''இயேசுவுக்கு ஞானஸ்நானம் கொடுத்த அதே யோவான் தான் எங்களுக்கும் ஞானஸ்நானம் கொடுத்தான். நாங்கள் யோவான் கொடுத்த ஞானஸ்நானம் பெற்றோம்'' என்றான். பாருங்கள்? அப்பொழுது பவுல், யோவான் மனந்திரும்புதலுக்கு ஏற்ற ஞானஸ்நானத்தைக் கொடுத்தான், பாவ மன்னிப்புக்கு அல்ல. ஏனெனில் ஆட்டுக் குட்டியானவர் அப்பொழுது அடிக்கப்படவில்லை. எனவே, யோவான் தனக்குப்பின் வருகிறவராகிய கிறிஸ்து இயேசுவில் நீங்கள் விசுவாசிகளாயிருக்க வேண்டுமென்று சொல்லி மனந்திரும்புதலுக்கு ஏற்ற ஞானஸ்நானத்தைக் கொடுத்தான்'' என்றான். அதைக்கேட்ட போது அவர்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றார்கள். அல்லாமலும் பவுல் அவர்கள் மேல் கைகளை வைத்த போது, பரிசுத்த ஆவி அவர்கள் மேல் வந்தார்; அப்பொழுது அவர்கள் அந்நிய பாஷை பேசி தீர்க்கதரிசனஞ் சொன்னார்கள். இது ''அநேக ஆண்டுகள் கழித்து'' என்றேன். நான் மேலும், ''நீங்கள் வேதத்தை விசுவாசிக்கிறீர்களா?'' என்று கேட்டேன். அவர், ''நிச்சயமாக'' என்றார். 67நான், ''பெந்தெகொஸ்தே நாளில் பேதுரு; அந்த சத்தம் உண்டானது. அவர்கள் எல்லோரும் உரத்த சத்தமாய் தேவனைத் துதித்துக் கொண்டிருந்தனர். அப்பொழுது ஜனங்கள், சகோதரரே, ''நாங்கள் இரட்சிக்கப்படுவதற்கு என்ன செய்ய வேண்டும்?'' என்று கேட்டனர். அப்பொழுது பேதுரு, ''நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது பரிசுத்த ஆவியின் வீரத்தைப் பெறுவீர்கள். வாக்குத்தத்தமானது உங்களுக்கும், உங்கள் பிள்ளைகளுக்கும், நம்முடைய தேவனாகிய கர்த்தர் வரவழைக்கிற தூரத்திலுள்ள யாவருக்கும் உண்டாயிருக்கிறது'' என்றான். வானமும் பூமியும் ஒழிந்துபோம், ஆனால் அந்த வார்த்தை ஒருக்காலும் ஒழிந்து போவதில்லை'' என்றேன். பெந்தெகொஸ்தேயினராகிய நீங்கள் மெதோடிஸ்டு, பாப்டிஸ்டு அல்லது பிரஸ்பிடேரியனுக்கு கவனம் செலுத்தவில்லை. அது ஒவ்வொரு காலத்துக்கும் அளிக்கப்பட்டதென்று நீங்கள் அறிந்து, பெந்தெகொஸ்தே உபதேசத்தை ஏற்றுக் கொண்டீர்கள். நிச்சயமாக: ஆனால் நீங்கள் அத்துடன் நின்று விடக்கூடாது, முன்னேறிக் கொண்டே செல்ல வேண்டும், பாருங்கள், அங்குதான் மெதோடிஸ்டுகள் தவறு செய்தனர். அவர்கள் பரிசுத்தமாக்கப்படுதல் வரைக்கும் முன்னேறி அத்துடன் நின்று விட்டனர். லூத்தரன்கள் நீதிமானாக்கப்படுதலை ஏற்றுக்கொண்டு நின்றுவிட்டனர். பாருங்கள், அதன் பிறகு அவர்கள் ஸ்தாபனம் உண்டாக்கிக் கொண்டு அங்கேயே மரித்து விடுகின்றனர். அதுதான் அதன் முடிவு. அதுதான் அதன் எல்லாமே. 68நாம் வேமாக செல்லும் நேரத்தில் இதைக் கவனியுங்கள். ''சத்திய ஆவியாகிய அவர் வரும் போது, அவர் நான் போதித்த எல்லாவற்றையும் உங்களுக்கு போதித்து,'' ஓ, என்னே, ''அவைகளை உங்களுக்கு நினைப்பூட்டி, வரப்போகும் காரியங்களையும் உங்களுக்கு அறிவிப்பார், அவர் ஒவ்வொரு வார்த்தையையும் உறுதிப்படுத்தி, அடையாளங்களினால் அதை நிரூபிப்பார்'' - தேவன் வேதத்தில் வாக்களித்துள்ள ஒவ்வொன்றையும். நீங்கள் மாத்திரம் ஒவ்வொரு கோட்பாட்டினின்றும் உங்களை விலக்கிக் கொண்டு வார்த்தையை இறுகப்பற்றிக் கொண்டால், தேவன் தமது வார்த்தையைக் கவனித்துக்கொள்ளக் கடமைப்பட்டவராயிருக்கிறார். நீங்கள் அப்படி செய்யும்போது, வார்த்தை தன்னைத்தானே உறுதிப்படுத்துகிறது. ''நல்லது, அற்புதங்களின் நாட்கள் கடந்து விட்டன'' என்று யாரும் கூற அப்பொழுது அவசியமிராது. ஒருகாலத்தில் குருடனாயிருந்த என்னிடம் அற்புதங்களின் நாட்கள் கடந்து விட்டன என்று யார் கூற முடியும்? அல்லேலூயா. ஒருமுறை நான் படுக்கையில் இருந்த போது, மூன்று நிமிடங்கள் மாத்திரமே உயிர் வாழ்வேன் என்று மருத்துவர்கள் எனக்கு அவகாசம் கொடுத்தனர். ஆனால் நான் இன்றும் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறேன், அப்படியிருக்க, அவர்கள் வேறுவிதமாக என்னிடம் எப்படி கூற முடியும்? ஒரு காலத்தில் நான் வெதுவெதுப்பான சபை அங்கத்தினனாக இருந்தேன். இப்பொழுதோ பரிசுத்த ஆவியினால் நிறையப்பட்டிருக்கிறேன். தேவனுக்கு வியாக்கியானி யாரும் அவசியமில்லை. வார்த்தையாகிய ஆவியே அது உண்மையென்று வியாக்கியானம் செய்தி மூர். ஒரு மனிதன் துணிவுடன் நின்று அதை ஏற்றுக்கொள்வானானால், அவர் அதை வியாக்கியானம் செய்து தருவார். ஒருமுறை நீங்கள் அவரை முயன்று பார்த்து, அது சரியா என்று கண்டு கொள்ளுங்கள். வேறு யார் கூறுவதிலும் கவனம் செலுத்தாதிருங்கள். தேவன் செய்யக் கூறியுள்ளதை மாத்திரம் செய்யுங்கள். ''நல்லது, நான் இதை செய்கிறேன்'' என்று நீங்கள் கூறலாம். அப்படியானால் மற்றதைக் குறித்தென்ன, ஒவ்வொரு வார்த்தையும்? ஒரு வார்த்தையை பின்பற்றாமல் போனால், அது சங்கிலியை முறித்து விடுகிறது. அங்குதான் - அந்த சங்கிலியில் - ஸ்தாபனங்கள் எப்பொழுதும் தோல்வியடைகின்றன. அவர்கள் எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து ஒரு பெரிய ஸ்தாபனம் உண்டாக்கிக் கொள்கின்றனர். இந்த மனிதர்கள் ஒன்று சேருகின்றனர் - பரிசுத்த பிதா இன்னார் இன்னார்,மற்றும் டாக்டர் பேராயர் இன்னர் இன்னார். முதலில் உங்களுக்கு நடப்பது என்ன?பார்த்தீர்களா? நீங்கள் அங்கேயே மரித்து விடுகின்றீர்கள். கர்த்தருக்கு சித்தமானால், இன்னும் சில நிமிடங்களில், இயற்கையைக் கொண்டும் வார்த்தையைக் கொண்டும் அதை நிரூபிப்போம். சரி. 69''எல்லாவற்றையும் நினைப்பூட்டுவார். அவர் ஒவ்வொரு வார்த்தையையும் உறுதிப்படுத்துகிறார், அந்த வார்த்தையினால் நாம் பிழைக்கிறோம். அல்லேலூயா! அதனால் நாம் பிழைக்கிறோம்!'' மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல, உறுதிபடுத்தப்பட்ட ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான். விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் தொடரும் - விசுவாசிக்கிறவர்களைத் தொடரும்'' என்று இயேசு கூறினார். அதை இறுகப்பற்றிக் கொள்ளுங்கள்; அது உண்மையென்று தேவன் உறுதிப்படுத்துவார். ஆனால் சாத்தானால் ஊக்குவிக்கப்படும் வேதாகமப் பள்ளிகளும், வேதபண்டிதர்களும், ''நீங்கள் அதை விசுவாசிக்கக்கூடாது. அது அப்போஸ்தலர்களுக்கே. அந்த நாட்கள் கடந்து விட்டன. அப்படிப்பட்ட ஒன்று இப்பொழுது கிடையாது. அக்காலத்தில் சுவிசேஷத்தை நிரூபிக்க, அது அப்போஸ்தலர்களுக்கென்று அளிக்கப்பட்டது'' என்பார்கள். அக்காலத்திலிருந்தவர்களுக்கு நமக்கு இப்பொழுதுள்ளதைக் காட்டிலும் அதிக கல்வியறிவு இருந்தது. சனகரீம் சங்கத்துடன் ஒப்பிடக்கூடிய ஒரு சபையை எனக்குக் காண்பியுங்கள் பார்க்கலாம். அவர்களுடைய முப்பாட்டனார், முப்பாட்டனார், முப்பாட்டனார் ஆசாரியர்களாக இருக்க வேண்டும். சுருளில் ஒரு கோணலான வார்த்தை இருந்தாலும், அவர்கள் கல்லெறிந்து கொல்லப்படுவார்கள். அவர்கள் வார்த்தையுடன் அப்படியே நிலைநிற்க வேண்டியதாயிருந்தது. ஆனால் அவர்கள் அந்த வார்த்தைக்கு உள்ளே இருக்கும் ஜீவனைக் காணத்தவறினர். அதன் காரணமாகத்தான் அவர்கள் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்பட்டு, ''சாத்தானின் ஊழியக்காரர்'' என்றழைக்கப்பட்டனர். 70பாருங்கள், வேதசாஸ்திரபள்ளி மாணாக்கன் ஒருவன் உங்களிடம், ''பரிசுத்த ஆவி இந்நாளுக்குரியதல்ல. தெய்வீக சுகமளித்தல் போன்றவை வேறொரு காலத்துக்குரியது'' என்று கூறினால், அது தேவனுடைய வார்த்தையை பிரதிபலிப்பதாய் இருக்கவில்லை. பாருங்கள், அது தேவனிடம் வரும் பிரதிபலிப்பு அல்ல. அது வேதத்துக்கு அப்பாற்பட்ட உபதேசத்தின் பிரதிபலிப்பாகும். ''இயேசு கிறிஸ்து நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிறார்'' என்று எபி;13:8 உரைக்கிறது. ''என்னை விசுவாசிக்கிறவன், நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான்'' என்று யோவான்;14:12 உரைக்கிறது. அந்த வார்த்தையை வேதத்திலிருந்து எடுத்துப்போட்டு, அந்த இடத்தில் வேறொன்றை சேர்க்க உங்களால் எப்படி முடியும்? அப்படி செய்வீர்களானால், நீங்கள் ஜீவ சங்கிலியை முறித்து விடுபவர்களாயிருப்பீர்கள். மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமே பிழைப்பான். அவன் இந்த அப்பத்தினால் நித்திய காலமாக பிழைப்பான், மாமிசப்பிரகாரமாகவும் அவன் அப்பத்தினாலே, பிழைக்கிறான். இரண்டுவிதமான அப்பங்கள் உண்டு. உங்களுக்குள் இருக்கும் பரிசுத்த ஆவி தேவனுடைய ஒவ்வொரு வார்த்தைக்கும் ''ஆமென்'' என்று உரைக்கும் - அது பரிசுத்த ஆவியாக இருக்குமானால். உங்களை ஒன்று கேட்க விரும்புகிறேன். இது உங்களை நோகச் செய்யும் கட்டம். 71நான் சிறுவனாயிருந்த போது என் தாயார் எனக்கு ஆமணக்கு எண்ணெய் குடிக்கக் கொடுப்பது வழக்கம். எனக்கு அதன் மணம் இன்று வரைக்கும் பிடிக்கவே பிடிக்காது. பாருங்கள்? நாங்கள் ஏழைகளாக வளர்ந்தோம். தாயார் தோல்களை வெந்நீரில் கொதிக்க வைத்து அதிலிருந்து கொழுப்பை எடுப்பார்கள். குட்வின் என்னும் ஒரு வயோதிப அம்மாள் இருந்தார்கள். அவர்கள் பன்றி இறைச்சி சமைத்து விற்பது வழக்கம். அங்கிருந்து நாங்கள் தோல்களை எடுத்து வந்து, அதிலிருந்து கொழுப்பை பிரித்தெடுத்து, எங்கள் சோளரொட்டிகளை சமைத்து உண்பது வழக்கம். நாங்கள் எளிய உணவு உண்டு வந்ததால், எங்களுக்கு சத்துணவு கிடைக்காமல் அடிக்கடி வியாதிப்பட்டோம். ஆனால் ஒவ்வொரு சனிக்கிழமை இரவும் எங்கள் தாயார்.... நாங்கள் சரியான உணவு உண்ணாததன் காரணத்தால், அவர்கள் ஒரு பெரிய அளவு ஆமணக்கு எண்ணெய் எங்களுக்குக் குடிக்கக் கொடுப்பார்கள். நான் மூக்கைப் பிடித்துக் கொண்டு, ''அம்மா, அது எனக்கு குமட்டல் உண்டாக்குகிறது'' என்று அலறுவேன். அவர்கள், ''அது குமட்டல் உண்டாக்காமல் போனால், அதனால் ஒரு உபயோகமும் இல்லை'' என்பார்கள். எனவே, அதேவிதமாக இதுவும் அமைந்திருக்க வழியுண்டு. இப்பொழுது எப்படி.... 72உங்களை ஒன்று கேட்க விரும்புகிறேன். பரிசுத்த ஆவியினால் நிறைந்துள்ளதாக உரிமை கோரும் எந்த மனிதனும், ஸ்திரீயும் - பரிசுத்த ஆவியே வார்த்தை. அது சரியா? நீங்கள் பரிசுத்த ஆவி தங்கும் மாம்சமாக, அவருடைய ஒரு பாகமாக, உங்கள் காலத்தின் சுவிசேஷத்தை பிரதிபலிக்கிறவர்களாக அமைந்திருந்து, அதே சமயத்தில் அவர் எழுதி வைத்த வார்த்தையை எப்படி மறுதலிக்க முடியும்? நீங்கள் எவ்வளவு நல்லவர்களாயிருந்தாலும் எனக்குக் கவலையில்லை. நான் உங்களை ஆப்பிரிக்க பழங்குடியினரிடம் கொண்டு சென்று, எந்த ஓரு கிறிஸ்தவனும் அருகில் வர முடியாத ஒரு சிறந்த வாழ்க்கை அவர்கள் வாழ்வதை உங்களுக்கு காண்பிக்க முடியும். அவர்கள் விபச்சாரத்தில் அகப்பட்டால்; பெண்ணுக்கு திருமணமாவதற்கு முன்பு, அவளுடைய கன்னித்தன்மை சோதிக்கப்பட வேண்டும். அவள் குற்றவாளியாக இருந்தால், எந்த மனிதன் அதை செய்தானென்று அவள் கூற வேண்டும். இருவரும் கொல்லப்படுவார்கள். அப்படிப்பட்ட வழக்கம் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் இருக்குமானால், யாரால் அத்தனை பிரேதங்களை அடக்கம் செய்ய முடியும், பாருங்கள்? எனவே, பார்த்தீர்களா? அவர்கள் அஞ்ஞானிகளே. ஆனால் அவர்களுடைய நல்லொழுக்கத்தைப் பாருங்கள்! எனவே, அந்த அடிப்படையில் நீங்கள் கூற முடியாது. நாம் நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவுக்கு முகம்மதியர்கள் நல்வாழ்க்கையை கடைபிடிக்கின்றனர் என்று இங்குள்ள இந்திய சகோதரர் உங்களிடம் கூற முடியும். 73அப்படியானால் அது என்ன? வார்த்தையே பரிசோதிக்கிறது. அந்த பரிசேயர்கள் இயேசுவைக் காட்டிலும் இரட்டிப்பாக தாழ்மையுள்ளவர்களாயிருந்தனர். அவர் சென்று சபைகளை கிழித்தெறிந்து, அவர்களை வெளியே துரத்தி, அடித்து, இப்படிப்பட்ட செயல்களைப் புரிந்தார். ஆனால் இந்த தேவபக்தியுள்ள வயோதிப குருவானவர்.... இன்று காலை அவருக்கு விரோதமாக நான் ஒரு கூட்டம் நடத்தி, ''நீங்கள் வியாதியாயிருந்த போது உங்களிடம் வந்து ஜெபித்தது யார்?'' என்று கேட்டால், ''அந்த தேவ பக்தியுள்ள வயோதிப குருவானவர்'' என்பீர்கள். தந்தையின் பயிர்கள் விளையத் தவறின போது, அவருக்குக் கடன் கொடுத்தது யார்? ''அந்த தேவ பக்தியுள்ள வயோதிப குருவானவர்.'' உங்களை தேவனுடைய ஊழியத்திற்கென்று பிரதிஷ்டை செய்தது யார்? ''அந்த தேவ பக்தியுள்ள வயோதிப குருவானவர்.'' ஆனால் இயேசு என்றழைக்கப்பட்ட இந்த வாலிப மதத் துரோகி என்ன செய்தார்? உங்கள் போதகரை, ''பாம்பு'' என்றழைத்தார். பாருங்கள்? அது கனிகளினால் அல்ல. அது வார்த்தையினால். ''மனுஷன் கனிகளினால் மாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்.'' அவரே வார்த்தையாயிருந்தார். அவர்கள் அதைக் காணத்தவறினர். அதை தான் அவர் செய்ய வேண்டுமென்று கருதப்பட்டார். அவர்களால் அதைக் காண முடியவில்லை. ஏனெனில், அதைக் காண அவர்கள் நியமிக்கப்படவில்லை. நீங்கள், ''என்னிடம் வர முடியாது'' என்றார். அவர் அந்த ஏழை யூதர்களைப் பாருங்கள், அவர்கள் கண்கள் குருடாக்கப்பட்டிருந்தன. நிச்சயமாக, அவரே அதை செய்தார். அவரே அவர்களைக் குருடாக்கினார். குருடாக்கப்பட்டிருந்தால் எப்படியிருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். வேதத்தைக் காண உங்களுக்குப் பார்வையுள்ளதால் நீங்கள் தேவனை ஸ்தோத்தரிப்பது நலம். இப்பொழுது கவனியுங்கள். 74இப்பொழுது, அவரே இந்த வார்த்தை . அதன் பிறகு அவர் சோதிக்கப்பட்டார். இயேசு சோதிக்கப்படுதல். அதை தான் இப்பொழுது நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். பாருங்கள் யாராகிலும், ''நல்லது, இது வேறொரு காலத்துக்குரியது'' என்று கூறினால், அது வார்த்தையை பிரதிபலிப்பதாய் இல்லை. ஏனெனில் அவர் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிறார் என்று வேதம் உரைக்கிறது. அப்படியிருக்க, நீங்கள் பரிசுத்த ஆவியினால் நிறைந்திருக்கிறீர்கள் என்று எப்படி கூற முடியும்? உங்களை நான் இப்பொழுது சிறிது நோகச் செய்யலாமா? (சபையோர், ''ஆமென்'' என்கின்றனர் - ஆசி). அதனால் பரவாயில்லையா? உங்கள் கைகளையுயர்த்துங்கள். நீங்கள் என்னை கோபித்துக் கொள்ளமாட்டீர்களே (''இல்லை''). நீங்கள் கோபித்துக் கொண்டால் பரவாயில்லை. தலைமயிர் கத்தரித்துக் கொண்டுள்ள பெண்களாகிய நீங்கள், பரிசுத்த ஆவியால் நிறைந்துள்ளதாக என்னிடம் எப்படி கூற முடியும்? ஒரு வார்த்தை! ''ஒ, நான் அந்நிய பாஷை பேசினேன்''. அதனால் ஒன்றுமில்லை. மந்திரவாதிகள் அந்நியபாஷை பேசி, அதற்கு அர்த்தம் உரைத்து, ஆவியில் கூச்சலிட்டு நடனமாடுவதை நான் கண்டிருக்கிறேன். ஆண்களாகிய நீங்கள் உங்களைக் குடும்பத்தின் தலைவன் என்று அழைத்துக் கொண்டு, அதே சமயத்தில் உங்கள் மனைவி குட்டை கால் சட்டை அணிந்து அவ்வாறு நடந்து கொள்வதை அனுமதித்து, உங்களைக் கிறிஸ்தவர்கள் என்று எப்படி அழைத்துக் கொள்ள முடியும்? அதற்கு எதிர்ப்பு தெரிவிக்காத போதகர்களாகிய நீங்கள் தேவனை எப்படி முகமுகமாக சந்திக்கப் போகின்றீர்கள்? அவர்களை நீங்கள் திருத்த முடியாது. அதை எதிர்த்து நீங்கள் பிரசங்கம் செய்ய நேரிட்டால், நீங்கள் வேதசாஸ்திர பள்ளியிலோ அல்லது அந்த குழுவிலோ நீண்ட காலம் நிலைத்திருக்க முடியாது. நீங்கள் வேறெங்கிருந்து தான் ஒத்துழைப்பை பெற முடியும். கர்த்தருக்கு சித்தமானால், இன்னும் சில நிமிடங்களில் அதற்கு வருவோம். பாருங்கள்? 75பார்த்தீர்களா? உங்களை புண்படுத்த வேண்டுமெனும் நோக்கம் எனக்கில்லை. உங்களை நான் நேசிக்கிறேன். அது தான் காரணம். நீங்கள் வெள்ளத்தில் அடித்து கொண்டு போகப்பட்டு, நீங்கள் மூழ்கிப் போவதை நான் கண்டு, ''தேனே, நல்லவனாயிரு'' என்று கூறினால், நான் மாய்மாலக்காரனாயிருப்பேன். அவர்களை எச்சரிப்பது நலம். அது உண்மை. அவர்களுக்கு எடுத்துக் கூறுங்கள்! நான் கிறிஸ்தவனாயிருந்தால், வேதத்திலுள்ள ஒவ்வொரு கதாபாத்திரத்துடனும் என்னை நான் அடையாளம் கண்டுகொள்ள வேண்டுமென்று அன்றொரு இரவு கூறினேன். நான் நோவாவுடன் அந்த நாட்களில் நின்று கொண்டு பிரசங்கித்து ஜனங்களை எச்சரிக்க வேண்டும். அது உண்மை. நான் எலியாவுடன் கர்மேல் பர்வதத்தில் நிற்க வேண்டும். நான் கல்வாரியில் நின்று கொண்டு என்னையும் என் சொந்த கருத்துக்களையும் சிலுவையில் அறைய வேண்டும். அதன் பிறகு அவருடன் ஈஸ்டர் அன்று எல்லாவற்றின் மேலும் ஜெயங் கொண்டவனாய் உயிரோடெழ வேண்டும் - உலகத்தில் காணப்படும் மாம்சப் பிரகாரமான எல்லா காரியங்களுக்கும் மேலாக அவருடன் எழ வேண்டும். 76கவனியுங்கள், அது வார்த்தையை பிரதிபலிப்தில்லை. இல்லை, அது உறுதிப்படுத்துவதில்லை. ஆனால் நீங்கள் வார்த்தையை விசுவாசித்தால், தேவன் இயேசுவுக்கு செய்தது போன்று, உங்களுக்கும் அதை உறுதிபடுத்தி தருவார். வார்த்தை அப்பம் எப்பொழுதும் புசிக்கப்பட வேண்டும். ''மனுஷன் இந்த அப்பத்தைப் போன்ற அப்பத்தினாலே மாத்திரமல்ல, ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்.'' எனவே, அது வார்த்தை அப்பம். அதை நினைவில் கொள்ளுங்கள். இந்த அப்பத்தின் மூலமாகவே ஒவ்வொரு காலத்திலிருந்த சபையும் போஷிக்கப்பட்டு வந்தது. அது ஜெயங்கொள்ளுகிறவனுக்கு மாத்திரம் மறைவான மன்னாவாக இருந்து வந்ததாக வெளிப்படுத்தின விசேஷம் உரைக்கிறது. இதை விவரமாக கூற இப்பொழுது எனக்கு நேரமில்லை. எனக்கு இன்னும் முப்பது நிமிடங்கள் மாத்திரமே உள்ளது. ஆனால் பாருங்கள், பரிசுத்த மன்னா வானத்திலிருந்து விழுந்தது. அது பரிசுத்த ஆவிக்கு அடையாளமாக உள்ளது. அந்த விஷயத்தில் நீங்கள் என்னுடன் இணங்குவீர்கள். ஒரு ஓமர் அளவு மன்னாவை சேகரித்து அதை மகா பரிசுத்த ஸ்தலத்தில் வைக்கும்படி தேவன் மோசேக்கு கட்டளையிட்டார். ஏனெனில், மகா பரிசுத்த ஸ்தலத்தில் வைக்கப்படாமல் போனால், அது புழுத்து போகும். அது சரியா? புழுக்கள் அதற்குள் நுழைந்து விடும். அவர் மோசேயிடம், ''இந்த ஓமர் அளவு மன்னாவை மகா பரிசுத்த ஸ்தலத்தில் வைப்பாயாக. அப்பொழுது ஒவ்வொரு சந்ததியிலும் தேவனுடைய வார்த்தையைப் பிரசங்கிக்க ஒருவன் ஆசாரியனாக ஆகும்போது, அவன் அதற்காக அபிஷேகம் பண்ணப்பட்டவுடன் செய்ய வேண்டிய முதல் காரியம் என்னவெனில், அந்த மூல மன்னாவிலிருந்து ஒரு கைப்பிடியளவு எடுத்து அதைப் புசிக்க வேண்டும்'' என்றார். அந்த மன்னா தான் அவன் தோன்றின அந்த புதிய சபை காலத்தில் அவன் கையில் பிரதிபலிக்கும் அவருடைய ஒளியாக அமைந்தது. பரிபூரணமாக ஜெயங் கொண்ட மனிதன் மாத்திரமே; வார்த்தையைத் தவிர எல்லாவற்றையும் உதறித் தள்ளின மனிதன் மாத்திரமே. வார்த்தைதான் அந்த மன்னா. ஒ என்னே, அது இயேசு! ''மனுஷன் தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்.'' ஒ, அதுவே ஜெயங்கொள்பவனுக்காக வைக்கப்பட்ட மறைவான மன்னா - தொடர்ந்து வரும் ஒவ்வொரு ஆசாரியனுக்கும். 77ஆனால் நீண்ட காலம் முன்பே வேதசாஸ்திர பள்ளிகள் ஆசிர்வதிக்கப்பட்ட இதை ஒரு பானை கூழுக்கு மாற்றிக்கொண்டது. அது முற்றிலும் உண்மை. ஆம், ஐயா. ஏசா செய்தது போல, ஒழுக்க விஷயத்தில் ஏசா, யாக்கோபைக் காட்டிலும் மேன்மையுள்ளவனாயிருந்தான். ஆனால், அவன் வார்த்தையாகிய சேஷ்ட புத்திரபாகத்துக்கு மதிப்பு கொடுக்கவில்லை. மூத்தவனுக்கு வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட சேஷ்ட புத்திரபாகம் வார்த்தை என்று எத்தனை பேருக்குத் தெரியும்? ஏசா நல்லவன், ஒழுக்கமுள்ளவன்; இன்றைய பெயர் கிறிஸ்தவர்களைப் போல் அவன் நல்லவன். அவன் பொய் சொல்லவில்லை. அவன் திருடவில்லை. அவன் தன் தகப்பனுக்கு நல்லவனாயிருந்தான். இவையெல்லாவற்றையும் அவன் செய்தான். ஆனால் பாருங்கள், அவன் தன் சேஷ்ட புத்திர பாகத்தின் மேல் அக்கறை கொண்டிருக்கவில்லை. ''அதனால் என்ன வித்தியாசம்? நான் எப்படியும் ஒரு இஸ்ரவேலன். நான் எப்படியும் இதை சேர்ந்தவன்'' என்றான் அவன். ஆனால் அவனுடைய சேஷ்ட புத்திரபாகம் முக்கியம் வாய்ந்தது, பாருங்கள். அவன் மாமிசப் பிரகாரமாக சரியானவனாயிருந்தான். ஆனால் ஆவிக்குரிய பிரகாரம் அவன் எல்லாவகையிலும் தவறாயிருந்தான். இன்றைக்கும் அவ்வாறே உள்ளது, பானை கூழில் சபையையும், உலகத்தையும் ஒன்றாக கலந்துள்ளனர். ஒவ்வொன்றிலும் சிறிதளவு; பிங்கோ விருந்துகள், நடனங்கள், சபையில் எல்லாவகையான செயல்கள்; குட்டை தலைமயிரும், குட்டை கால் சட்டையும் கொண்ட பெண்கள். நீங்கள், ''சகோ. பிரான்ஹாமே, அது சிறிய காரியம் தானே!'' எனலாம். 78அது வேதத்திலுள்ள வார்த்தைகளில் ஒன்று, அவள் தலைமயிரைக் கத்தரித்துக் கொள்வது தவறு என்பது. இது உண்மை. அவள் அப்படி செய்தால், எப்படி உள்ளே வர முடியும்? பாருங்கள்! நீங்கள் எந்த போதகரையும் கேட்டுப் பாருங்கள். வார்த்தை அவ்விதம் உரைக்கிறதென்று அவர் உங்களிடம் கூறுவார். பாருங்கள், அவள் தன் தலையைக் கனவீனப்படுத்துகிறாள்''. அவள் தன் புருஷனை கனவீனப்படுத்துகிறாள். அவள் தள்ளி வைக்கப்பட வேண்டும். அது முற்றிலும் உண்மை. ''தலை மயிரைக் கத்தரிக்கிறவள் அதை சிரைக்கக்கடவள்.'' பாருங்கள், அதன் மூலம் அது முழு தலையையும் காண்பிக்கிறது. தலைமயிர் கத்தரிக்கப்படுவதனால் அல்ல. தேவன் அவ்விதமாக அதை விரும்புகிறதில்லை. அதுதான் இடையிலுள்ள - கணவன். அதைக் கொண்டு விளையாடாதீர்கள். அதை முழுவதுமாக சிரைத்துவிடுங்கள், அல்லது வளரவிடுங்கள். அப்படித்தான் தேவன் கூறியுள்ளார். சுவிசேஷத்தின் போதகர் எவரும், அவர் அதை வெளிப்படையாகக் கூறினாலும் கூறாவிட்டாலும், அது உண்மையென்று அறிவர். அது உண்மை. பாருங்கள்? மற்றெல்லாவற்றையும் நீங்கள் செய்து விட்டு இதை மாத்திரம் கைக்கொள்ளாமல் விட்டுவிட்டால், அதனால் என்ன உபயோகம்? என்ன? உங்களுக்குள் உலகப்பிரகாரமான நாகரிகம் சிறிது உள்ளது. நீங்கள் மற்ற சபைகள் நடந்து கொள்வதைப் போல் நடக்கப் பார்க்கிறீர்கள். அங்குதான் இஸ்ரவேல் ஜனங்கள் தொல்லையில் அகப்பட்டுக் கொண்டார்கள். அங்குதான் அவர்கள் மரித்தார்கள். அங்குதான் ஆதாம் தொல்லைக்கு ஆளுனான். அங்குதான் மற்றவர் அனைவரும் தொல்லைக்கு ஆளுனார்கள். அதற்கு ஒரு வார்த்தை மீறினால் போதுமானது. பானை கூழில் உலகம் கலந்துள்ளது! உலகம் கொஞ்சம், ஹாலிவுட் கொஞ்சம், சபை கொஞ்சம், வேத சாஸ்திரிகள் கொஞ்சம்; இவைகளை ஒன்று கலந்தால் உங்களுக்கு கிடைப்பதென்ன? 79கவனியுங்கள், சாத்தான் இங்கு தோல்வியடைந்தால், அவன் தன் இரண்டாம் உபாயத்தை கையாண்டு, நீங்கள் வார்த்தையை அவிசுவாசிக்கும்படி செய்வான். அவன் அடுத்த உபாயத்தைக் கையாளுவான். இங்குதான் நீங்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருப்பது அவசியம். உங்களுக்கு விருப்பமானால், உட்கார்ந்து கொண்டு இதைக் குறித்து ஐந்து நிமிடம் கேளுங்கள். அவன் இயற்கைக்கு மேம்பட்ட ஒன்றை உங்களுக்கு அளிப்பான். முடிப்பதற்கு முன்பு இதையெல்லாம் நான் மீண்டும் கூறுவேன்... பாருங்கள், அவன் உங்களை சோதித்து, வார்த்தையிலிருந்து உங்களை அகற்றும் விஷயத்தில் தோல்வியடைந்தால்; இல்லை, ''நான் வார்த்தையில் நிலைத்திருக்கப் போகிறேன்'' என்று நீங்கள் கூறுவீர்களானால், அதன் பிறகு அவன் இயற்கைக்கு மேம்பட்ட ஒன்றை உங்களுக்கு அளிப்பான். அவன், ''நான் சொல்வதைக் கேள். நீ தேவாலயத்தின் உப்பரிகையின் மேலேறி அங்கிருந்து தாழக் குதித்து சேதமடையாமல் எழுந்திரு. இயற்கைக்கு மேம்பட்ட ஒன்றை உன்னால் செய்ய முடியுமென்று ஜனங்களுக்குக் காண்பி'' என்பான். அவர்களை அவன் அதில் சிக்க வைப்பான். இதை கவனியுங்கள். அந்த கட்டத்தை நீங்கள் அடையும் போது, இந்த சோதனை உங்களுக்கு நேரிடும்போது கவனமாயிருங்கள். அவன் உங்களை அந்திய பாஷைகள் பேசும்படி செய்து, நீங்கள் அதைப் பெற்றுக் கொண்டீர்கள் என்று நினைக்கும்படி செய்துவிடுவான். பாருங்கள்? அல்லது அவன் நீங்கள் தீர்க்கதரிசனம் உரைக்கும்படி செய்துவிடுவான் - அது வார்த்தையுடன் இணையாமலிருக்கலாம். ஜனங்கள் எழுந்து நின்று, கிழக்குக்கும் மேற்குக்கும் எவ்வளவு தூரமோ, அவ்வளவு தூரம் வார்த்தைக்கு முரணாயுள்ள தீர்க்கதரிசனம் உரைப்பதை நான் கேட்டிருக்கிறேன். பாருங்கள்? நீங்கள் பிழைப்பது வார்த்தையினாலே. அப்படிப்பட்ட இயற்கைக்கு மேம்பட்ட வரங்களை சாத்தான் உங்களுக்கு கைநிறைய அளிக்கக்கூடும். நிச்சயமாக. அதனால் ஒரு உபயோகமுமில்லை. 80''அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே, உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தேன் அல்லவா உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினேன் அல்லவா? நான் மகத்தான கிரியைகளைச் செய்தேன் அல்லவா? நான் ஸ்தாபனத்தில் பெரிய மனிதனாய் இருந்தேன் அல்லவா? இவையனைத்தும் நான் செய்தேன்'' என்பார்கள். அவரோ, ''அக்கிரமச் செய்கைக்காரனே, என்னை விட்டு அகன்று போ'' என்பார். அக்கிரமம் என்றால் என்ன? அது சரியென்று உள்ளத்தில் அறிந்திருந்தும், அதை செய்யாமல் விட்டு விடுவதே. வேதம் ஒன்றைப் போதிக்கிறது என்று நீ அறிந்தும் அதை செய்யாமலிருப்பதே அக்கிரமம். தாவீது, ''என் இருதயத்தில் அக்கிரம சிந்தை கொண்டிருந்தேனானால், ஆண்டவர் எனக்குச் செவி கொடார்'' என்றான். (சங்;66:18). அது உண்மையா? வேதம் அப்படி கூறுகிறதா? (சபையோர், 'ஆமென்' என்கின்றனர் - ஆசி). நீங்கள் நிச்சயமாக அதைக் குறித்து கோபங்கொள்ளக் கூடாது. ஏனெனில் இயேசுவே, அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே, இவைகளை நான் செய்தேனே என்பார்கள். நான்: அக்கிரமச் செய்கைக்காரரே, என்னை விட்டு அகன்று போங்கள் என்பேன்'' என்று கூறியுள்ளார். ஆதாமும் அப்படித்தான் கூறினான். ''ஆண்டவரே, நான் இதை செய்தேன், அதை செய்தேன்'' என்று ஒரே ஒரு வார்த்தை அது உண்டாகக் காரணமாயிருந்தது. அது மாத்திரமே, அதற்கு அவசியம் - ஒரே ஒரு வார்த்தைக்கு கீழ்ப்படியாதிருத்தல். 81ஆம் ஒருக்கால் வார்த்தைக்கு முரணாக தீர்க்கதரிசனம் உரைக்கலாம். இயற்கைக்கு மேம்பட்ட இந்த வரம் கிடைத்தவுடன் அவன் அந்த கூச்சலிலும் பகட்டிலும் மயங்கி, ''தேவனுக்கு மகிமை! நான் இன்னாருக்கு ஜெபித்தேன். அவர் எழுந்து நடந்தார். அல்லேலூயா! நான் அந்நியபாஷை பேசுகிறேன், வேறொருவர் அதற்கு அர்த்தம் உரைக்கிறார். அது முற்றிலும் உண்மை'' என்கிறான். பவுல், ''நான் மனுஷர் பாஷைகளையும் தூதர் பாஷைகளையும் பேசினாலும், நான் ஒன்றுமில்லை. மலைகளைப் பேர்க்கத்தக்கதாக சகல விசுவாசமுள்ளவனாயிருந்தும், நான் ஒன்றுமில்லை'' என்கிறான். அது சரியா? (சபையோர், 'ஆமென்' என்கின்றனர் - ஆசி). பாருங்கள், அவன் இதை உங்களுக்கு அளிப்பான். ஓ, பெந்தெகொஸ்தே ஜனங்களே, உங்களை நான் நேசிக்கிறேன். இல்லையென்றால் உங்களுடன் நான் இருக்க மாட்டேன். அங்குதான் நீங்கள் தவறி விட்டீர்கள், பாருங்கள். வார்த்தையை கவனியுங்கள், வரங்களையல்ல. அதை யார் அளிப்பது என்பதை கவனியுங்கள் - அது எங்கிருந்து வருகிறதென்று பாருங்கள். அவன் அதில் மயங்கி விடுகின்றான், அவன் ஆவியில் நடனமாடுகின்றான்.... (ஒலிநாடாவில் காலி இடம் - ஆசி)... அது ஒரே காரியம். அவனை அநேகர் சூழ்ந்து கொள்கின்றனர், அவனுக்கு எல்லாவிடங்களிலுமிருந்து அழைப்பு வருகிறது. அவன் வார்த்தையை மறந்துவிடுகிறான். 82அந்த வார்த்தையிலிருந்து நீங்கள் விலகியுள்ள வரைக்கும் மிகவும் பிரபலமாயிருப்பீர்கள். ஆனால் எப்பொழுதாவது நீங்கள் வார்த்தைக்குள் வரும்போது, உங்களுடன் யார் ஒத்துழைக்கின்றனர் என்று பாருங்கள். அப்பொழுது என்ன நடக்கிறதென்று பாருங்கள். இன்னும் சிறிது நேரத்தில் நாம் இயற்கையின் மற்றொரு கட்டத்துக்கு வரப் போகிறோம். பாருங்கள், யாருக்கு உங்களை வேண்டும் என்பதைக் கவனியுங்கள், யாருக்கும் வேண்டாம். ''ஓ, அதிலிருந்து விலகுங்கள்'' என்பார்கள். சில வாரங்களுக்கு முன்பு குறிப்பிட்ட ஒரு சங்கம் இங்கு கூடி, என்னை அல்லது இந்நகருக்கு வரும் வேறெந்த முழு சுவிசேஷ ஊழியக்காரனை, வியாதியஸ்தருக்காக ஜெபிக்கும் படிக்கு அழைக்கும் எந்த ஊழியக்காரனும் சங்கத்தின் உறுப்பினராயிராதபடிக்கு தள்ளப்படுவார் என்று கூறி, எனக்குத் தடை விதித்தது. சரி, நான் வியாதியஸ்தருக்கு ஜெபிப்பதனால் அப்படி செய்தார்கள். ''அவர் கூறுவதைக் கேட்க வேண்டாம்!'' அங்கு வார்த்தை உறுதிப்படுத்தப்பட்டது. நம் ஆண்டவருக்கும் அவர்கள் அதையே செய்தனர். ஒவ்வொரு காலத்திலுள்ள தேவ மனிதருக்கும் அவர்கள் அதையே செய்தனர். அவர்கள் லூத்தர், வெஸ்லி இன்னும் மற்றவர்க்கும் அதையே செய்தனர். துவக்கத்தில் உங்களுக்கும் அவர்கள் அதையே செய்தனர். எந்த சேற்றிலிருந்து நீங்கள் வெளி வந்தீர்களோ, அதே சேற்றுக்குத் திரும்புகின்றனர். அது எக்காலத்தும் அவ்வாறே இருந்து வந்துள்ளது. அது அவ்வாறிருக்கத் தவறினதில்லை. சாத்தான் அதையே செய்து கொண்டு வருகிறான். 83அவன் கூச்சலிலும் பகட்டிலும் மயங்கி, வார்த்தைக்கு கவனம் செலுத்தாமல் போய் விடுகிறான். ''ஓ சகோதரனே, சகோ. இன்னார் இன்னார் இன்னின்னதை கூறினார். நான் அங்கு செல்ல வேண்டும். நான்... ''பாருங்கள், அவன் அதில் மிகவும் மயங்கி, அதை கவனிப்பதும் கூட இல்லை. அது வார்த்தையா இல்லையா, அது அவனுக்கு எந்த வித்தியாசத்தையும் உண்டு பண்ணுவதில்லை. மற்றவர்கள் அது சரியென்று சொன்னார்கள், எனவே அதனால் பரவாயில்லை.'' ஸ்தாபனம், அதை நீ பெற்றுக் கொண்டாய், யாரும் உனக்கு ஆலோசனை கூற சம்மதியாதே'' என்கின்றது. நீ எதை பெற்றுக் கொண்டாய்? பாருங்கள்? கவனியுங்கள், 84இந்த ஒரு இடத்திலும் கூட சாத்தான் வார்த்தைக்கு மேல் பூச்சு (coated) அளித்தான் - இயேசு இயற்கைக்கு மேம்பட்ட அற்புதத்தை செய்ய அவன் முயன்றபோது. இயேசு அவனுக்கு செவி கொடுத்திருந்தால் என்ன நேர்ந்திருக்கும். பாருங்கள்? அவன் இயேசுவிடம், சற்றுபொறும். நீர் வார்த்தையில் நிலைத்திருக்க விரும்புகிறீர், இல்லையா? தம்முடைய தூதர்களுக்கு உம்மைக் குறித்துக் கட்டளையிடுவார்; உமது பாதம் கல்லில் இடறாதபடிக்கு (மோதிக் கொள்ளாதபடிக்கு) ''அவர்கள் உம்மைக் கைகளில் ஏந்திக் கொண்டு போவார்கள் என்பதாய் எழுதியிருக்கிறது'' என்றான். அவர் தமது பாதத்தை எந்த கல்லின் மேலும் மோதிக் கொள்ளவில்லை. பாருங்கள்? கவனியுங்கள். அவர் அதற்கு செவி கொடுத்திருந்தால் என்னவாயிருக்கும்? அவர்... நீங்கள் கவனித்தீர்களா? சாத்தான் வார்த்தையை எடுத்துரைத்ததாக (quoted) நான் கூறவில்லை. அவன் அதற்கு மேல் பூச்சு (coated) பூசினான். ஒரு கேக்கின் மேல் சர்க்கரை ஊற்றி அதை மூடுவது போல், சுவற்றை வெள்ளையடிப்பது போல். அது சரியான இடத்தில் பொருத்தப்படவில்லை. 85இன்றைக்கு அவர்கள் அதை தான் செய்யப் பார்க்கிறார்கள், அவர்கள் வெள்ளையடிக்கப் பார்க்கிறார்கள். அதை மற்ற வேத வாக்கியங்களுடன் நீங்கள் இணையச் செய்ய முடியாது. அது எல்லாமே, ''இயேசு கிறிஸ்து நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிறார்'' என்பதாய் அமைந்திருக்க வேண்டும். பாருங்கள், நீங்கள் எவ்வளவு தான் வார்த்தைக்கு மேல் பூச்சுபூச முனைந்தாலும் அது சரிவராது.... அவர் எவ்வாறு கூறினாரோ, அதேவிதமாக அது எடுத்துரைக்கப்பட வேண்டும். அது சரியாக எடுத்துரைக்கப்பட்டால், உங்கள் வாழ்க்கையில் அவர் அதை உறுதிபடுத்தி தருவார். அப்படித்தான் நீங்கள் எல்லா மனிதராலும் அறிந்து வாசிக்கப்பட்ட எழுதப்பட்ட நிரூபங்களாய் இருக்கிறீர்கள். எழுதப்பட்ட நிரூபம் என்பது இந்த வேதாகமமே. அது சரியா? நிரூபம் என்பது வேதாகமம். நீங்கள் எழுதப்பட்ட வேதாகமமாய் வார்த்தையை பிரதிபலித்து, தேவனுக்குள் பரிபூரண மனிதராய் இருக்கிறீர்கள். ஆனால் இயேசு, ''இப்படியும் எழுதியிருக்கிறதே'' என்றார். 86ஆனால் கவனியுங்கள், ஏவாள் இதே கட்டத்தில் அவளுடைய இயற்கைக்கு மேம்பட்ட புரிந்து கொள்ளும் தன்மையினால் மயங்கினாள். அவளுக்கு வேத சாஸ்திர அனுபவம் கிடைத்தது. அவளுடைய கல்வியறிவு அக்காலத்திலிருந்த எந்த வேத பண்டிதனின் அறிவைக் காட்டிலும் சிறந்ததாயிருந்தது. பாருங்கள், அவள் அதில் மிகவும் மயங்கினதால், அதை அறியவேயில்லை. ஆதாமுக்கு இல்லாத ஒன்று அவளுக்கிருந்தது என்பதை அவள் அறிந்திருந்தாள். அவள் தன் ஆதாமை விட அதைக் குறித்து அதிகம் அறிந்திருந்த காரணத்தால், ஒருக்கால் அவள் அவனை இப்பொழுது ஆளுகை செய்ய முடியும். அவர்களுடைய ஆதாம்கள் இன்று என்ன செய்கின்றனர் என்று கவனியுங்கள். அவள் நன்மை தீமை என்னவென்று அறிந்திருந்தாள். அவள் சத்தியத்தைக் குறித்து சிறந்த கல்வியறிவைக் கொண்டிருந்தாள். அது உண்மை. சத்தியத்தைக் குறித்து அவள் முன்பு அறிந்திராத சிறந்த கல்வியறிவைக் கொண்டிருந்தாள், அது தேவனுடைய சத்தியம். ஆனால் அவ்வார்த்தையை மீறின தன் நிமித்தம் மரித்துபோனாள். ஆம், அவள் தன் கல்வியறிவைப் பெற்றுக் கொண்டாள். சரி. அவ்வாறே வேதாகமப் பள்ளியும் உங்களுக்கு வேத சாஸ்திர அனுபவத்தை அளிக்கிறது. நீங்கள் பழைய ஏற்பாட்டிலும் புதிய ஏற்பாட்டிலும் உள்ள ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் குறித்து எடுத்துரைக்கக் கூடும். ஆனால், நீங்கள் ''அது அவர்களுக்குரியது'' என்று கூறி வார்த்தையை மீறாதபடிக்கு ஜாக்கிரதையாயிருங்கள். அது உங்களுக்கும் உரியது. அது விரும்புகிறவர் யாவருக்கும் உரியது. பாருங்கள்? பாருங்கள்? ஜாக்கிரதையாயிருங்கள். ''ஓ, அது முன் காலத்திலிருந்த சபைக்கு மாத்திரமே'' என்று கூறாதீர்கள். அவர் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிறார். அவளுக்கு நல்ல கல்வியறிவு இருந்தது. ஆனால் அவள் அக்கிரமங்களினாலும், பாவங்களினாலும் மரித்தவளாயிருந்தாள். 87இப்பொழுது சாத்தானின் மூன்றாம் உபாயம். நாம் அதை வேகமாக பார்ப்போம். ஏனெனில் நாம் அதிக நேரம் எடுத்துக்கொள்ள விரும்பவில்லை, ஒருக்கால் இன்னும் பதினைந்து இருபது நிமிடங்கள். அவனுடைய மூன்றாம் உபாயம் அல்லது மூன்றாம் சோதனையைக் கவனியுங்கள். மற்ற உபாயங்கள் தோல்வியடைந்தாலும் இது தோல்வியடையாது, பாருங்கள். அவன் இயேசுவுக்கு செய்தது போல இப்பொழுது உங்களுக்கு ஒரு பதவியை அளிக்கிறான்: ''இந்த உலகத்தை உமக்குத் தருகிறேன். நீர் ராஜாவாயிருக்கலாம். உம்மை ராஜாவாக்குவேன். இவையாவும் எனக்குச் சொந்தம். எனவே, இதை உமக்குத் தருகிறேன்.'' யார் ஒரு மனிதனை போதகராக்க முடியும்? யார் ஒரு மனிதனின் மேல் கைகளை வைத்து அவனுக்குவரத்தை அளிக்க முடியும்? ''தேவன் சபையில் வைத்திருக்கிறார்.'' பாருங்கள்? அவர்கள் வார்த்தையை எப்படி திரித்து விடுகிறார்கள் என்பதைப் பாருங்கள். ஏவாள் தான் பெற்றபுது அறிவைக் கொண்டு ஆதாமை ஆட்டி வைத்தது போல். ஆதாம் அதை ஏற்றுக் கொள்ளும்படி அவள் செய்தவுடனே, அவள் தன் விருப்பப்படி என்ன வேண்டுமானாலும் செய்தாள். ஆனால் அவன் இயேசுவிடம் வந்தபோது, அவர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. அவர், ''அப்பாலே போ சாத்தானே'' என்றார். வேறுவிதமாய் கூறினால்; அதை நான் தவறாக எடுத்துரைக்கவில்லை, அதற்கு விரிவுரை அளிக்கிறேன்: மனுஷன் தேவனுடைய ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறது. ''நான் உம்மை பொதுவான மேற் பார்வையாளராக அல்லது போதகராக அல்லது டீகனாக ஆக்குவேன்'' அல்லது சகோதரியே, ''உன்னை பியானோ இசைக்கருவி வாசிக்கச் செய்வேன்'' என்னும் உன் ஆலோசனையினால் அல்ல. பாருங்கள், ''நீர் பிரபலமானவர், உமது திறன் சபைக்கு அவசியம்'' என்பது போன்ற ஆலோசனை. வார்த்தைக்கு வாருங்கள்! ஏவாள் ஆதாமை ஆள முடிந்தது, அல்லது அவனுக்குக் கற்றுத்தர முடிந்தது - இன்றைக்கு நடப்பது போல். அப்படித்தான் அவர்கள் இன்று செய்கின்றனர் - உங்களுக்கு டாக்டர் பட்டம் அளிக்க, உங்களை மாகாணப் போதகர், மேற்பார்வையாளர், மேலாண்மை தலைவர் போன்ற பதவிகளைக் கொடுக்க. 88இயேசுவைக் காட்டிலும் அது எவ்வளவு வித்தியாசப்பட்டது! அவர் வார்த்தையில் நிலை நின்றார். அடுத்த சில நிமிடங்களுக்கு, இயற்கையைக் கொண்டும் வார்த்தையைக் கொண்டும் இவையனைத்தும் உண்மையென்று நிரூபித்து, இவைகளை ஒன்றாக இணைக்க விரும்புகிறேன். அவரே அப்பத்துக்காக வார்த்தை மாமிசமானவர் என்பதை இது நிரூபிக்கிறது. அவர் வார்த்தை மாமிசமானவர். அவர் எதை பிரதிபலித்தார்? வார்த்தையை மாத்திரம். நீங்கள் எழுதப்பட்ட நிரூபமாயிருப்பீர்களானால், நீங்கள் வார்த்தையை மாத்திரம் பிரதிபலிக்கிறவர்களாயிருப்பீர்கள் - வேதாகமப் பள்ளி கூறுவதையோ, வேறு யாரும் கூறுவதையோ, குமாரி ஜோன்ஸ் கொண்டுள்ள கருத்தையோ, டாக்டர் இன்னார் இன்னார் கொண்டுள்ள கருத்தையோ அல்ல; ஆனால் தேவன் அதைக் குறித்து என்ன கூறுகிறாரோ அதை மாத்திரமே . ''எல்லா மனிதருடைய வார்த்தையும் பொய், என் வார்த்தையே சத்தியம். இந்த கற்பனைகளில் மிகச் சிறியதை மீறி ஜனங்களுக்கு அவ்வாறு போதிக்கும் எவனும்! ஒருவன் இந்த புத்தகத்திலிருந்து ஒரு வார்த்தை எடுத்துப் போட்டால், அல்லது இதனுடன் ஒரு வார்த்தை கூட்டினால்! மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான். அந்த வார்த்தையினால் நித்தியமாக பிழைத்திருங்கள்! 89நீங்கள் சரீரப் பிரகாரமாக பிழைத்திருக்க செத்த ஒரு பொருள் உங்களுக்கு அவசியம் போல, ஆவிக்குரிய பிரகாரம் பிழைத்திருக்க கிறிஸ்து உங்களுக்கு அவசியம்; இல்லையேல் நீங்கள் மரித்து விடுவீர்கள். கிறிஸ்து யார்? ''ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. அந்த வார்த்தை மாம்சமாகி நமது மத்தியிலே வாசம் பண்ணினார்.'' (யோவான்;1:1,14). நீங்கள் அதே எழுதப்பட்ட நிரூபமாயிருக்கிறீர்கள் - ஒரு காலத்துக்கு ஒன்றும், மற்றொரு காலத்துக்கு ஒன்றுமாக அக்காலத்து ஒளியாக விளங்குகிறீர்கள். ஆனால், அவர்களோ அதைக் காண தவறுகின்றனர். நீங்கள் ஒளியை பிரதிபலிக்க மாத்திரம். செய்கிறீர்கள். மற்றவர்கள் ஒவ்வொரு விஷயத்தில் தவறினர். ஆனால் இவரோ: தவறவில்லை. நான் ஏற்கனவே கூறினபடி, வெளி;22:18ல் அவர், ''எவனாகிலும் இதனுடன் ஒரு வார்த்தையைக் கூட்டினால்'' என்றார். 90இப்பொழுது கூர்ந்து கவனியுங்கள். மத்;24:24 மனதில் பதியத்தக்கதாய் உள்ளது. அவர்கள் எப்படி.... ''இந்தக் கடைசி நாட்களில் இந்தக் காரியத்தில், தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் வஞ்சிக்கப்படுவார்கள்'' என்று இயேசு கூறினார். ஆவிகளை கவனியுங்கள். ''கடைசி நாட்களில்''. வேதவாக்கியம் நிறைவேற வேண்டியதாயுள்ளது. அதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? (சபையோர், ''ஆமென்'' என்கின்றனர் - ஆசி). ''கடைசி நாட்களில், தெரிந்து கொள்ளப்பட்டவர்கள், அதற்கென்று முன்குறிக்கப்பட்டவர்கள் வஞ்சிக்கப்படுவார்கள்.'' அது பிழையின்றி வேதப்பிரகாரமாக, மிகவும் அழகாகவும் தெளிவாகவும் உள்ளது. அதில் நீங்கள் எந்த பிழையுமே காண முடியாது. தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் மாத்திரமே அதிலிருந்து தப்பித்துக் கொள்வார்கள். அப்படித்தான் இயேசு கூறினார். அதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? (''ஆமென்'') கூடுமானால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும் அது வஞ்சிக்கும். ''அது பிழையற்ற வேதவாக்கியம், அதை நீங்கள் மாம்சக் கண்களால் காணலாம்.'' ஆனால் பாருங்கள், அதுவல்ல. இயேசு.... அந்த பரிசேயர்கள் மிகவும் பரிபூரணமான வேதத்தைப் பெற்றிருந்தனர், ஆனால் அவர்கள் தங்கள் சொந்த வியாக்கியானத்தினால். அவர் தவறல்ல என்று அவர்கள் எப்படி அறிந்து கொண்டனர்? அந்த காலத்தில் தேவன் அவருக்கு வாக்களித்த ஒவ்வொரு வார்த்தையையும் உறுதிபடுத்தின காரணத்தால். அப்படித்தான் அவர் மேசியா என்பதை அவர்கள் அறிந்து கொண்டனர். பாருங்கள்? 91இப்பொழுது கவனியுங்கள். இந்த நாட்களில் கூடுமானால், ''ஒரே ஒரு வார்த்தை. ஒரு வார்த்தை மாத்திரமே அவசியம். ஆதாமை விழச் செய்ய சாத்தானுக்கு ஒரு வார்த்தை மாத்திரமே அவசியமாயிருதது. அவன் ஒரு வார்த்தையை மீறும்படி செய்தான். இன்றைக்கும் அவனுக்கு அவ்வளவு தான் தேவை - ஒரு வார்த்தை மீறும்படி செய்ய. அவ்வளவு தான், அவ்வளவு தான் அவனுக்குத் தேவை. அது உண்மையென்று உங்களுக்குத் தெரியும். ஒரு வார்த்தையைக் - கூட்டினால், அல்லது ஒரு வார்த்தையை எடுத்துப் போட்டால், அது முழுவதும் தோல்வியடைந்து விடுகிறது. ஒவ்வொன்றும், ''தேவனுடைய ஒவ்வொரு வார்த்தையும்.'' வேதாகமப் பள்ளிகளில் அளிக்கப்படும் வியாக்கியானங்களைக் குறித்து யோசித்துப் பாருங்கள். அவை ஒன்றுக்கொன்று வித்தியாசமாயுள்ளன. எங்காவது சத்தியம் இருக்க வேண்டும். இது தான் அது, வேதாகமம். இயேசு கூறினார்.... நீங்கள், ''நல்லது, சகோ. பிரான்ஹாமே, அவர்கள் மிகவும் அழகான. ஆராதனையைக் கொண்டிருக்கின்றனரே'' எனலாம். இயேசு, ''மனுஷருடைய கற்பனைகளை - வேத சாஸ்திரங்களை - உபதேசங்களாக போதித்து - வார்த்தையை அல்ல - வீணாய் எனக்கு ஆராதனை செய்கிறார்கள்'' என்றார் (மாற்;7:7). மனிதன் தன் சொந்த கருத்தைக் கொண்டவனாய் வார்த்தையை வியாக்கியானம் செய்கிறான். 92நான் ஏற்கனவே கூறினபடி, தேவனுக்கு எந்த வியாக்கியானியும் அவசியமில்லை. அவரே ஒவ்வொரு வார்த்தையையும் வியாக்கியானம் செய்கிறவராயிருக்கிறார். பாருங்கள், யாரும் அதை உங்களுக்கு வியாக்கியானம் செய்து தர அவசியமில்லை. நீங்கள் அதை ஏற்றுக்கொள்ள சித்தமுடையவர்களாகும் போது, தேவனே அதை உங்களுக்கு வியாக்கியானம் செய்து தருகிறார். பாருங்கள், அது தான் ஜீவன், ஜீவன் அதுவே. இயேசு, ''வீணாய் எனக்கு ஆராதனை செய்கிறார்கள்'' என்றார். அவர்கள் உண்மையில் தேவனுக்கு ஆராதனை செய்கின்றனர். துவக்கத்தில் காயீன் உண்மையில் தேவனுக்கு ஆராதனை செய்தான். ஆனால், ''வீணாய் எனக்கு ஆராதனை செய்கிறார்கள்.'' வீண் என்றால் என்ன? ''அதனால் ஒரு உபயோகமுமில்லை.'' அவர்கள், ''நான் இதை செய்கிறேன். நான் ஆவியில் நடனமாடுகிறேன். நான் அந்நிய பாஷை பேசுகிறேன். நான் தீர்க்கதரிசனம் உரைக்கிறேன். நான் சுவிசேஷம் பிரசங்கிக்கிறேன்'' என்று கூறி, அதே சமயத்தில் தலைமயிர் வளர விடாமல் கத்தரிக்கின்றனர். அந்த ஒரு காரியத்தில் அவர்கள் தவறும் போது என்ன நடக்கிறதென்று பாருங்கள். ஆவியானவர் உங்களை அங்கேயே விட்டு சென்றுவிடுவார். அது தான் நமது சபைகளுக்கு நேர்ந்தது. அவர்கள் தவறினர். ''வீணாய் எனக்கு ஆராதனை செய்கிறார்கள். ஓ, அது அழகான ஆராதனை. ஆனால் மனுஷருடைய கற்பனைகளை உபதேசங்களாகப் போதித்து வீணாய் எனக்கு ஆராதனை செய்கிறார்கள்.'' 93அந்த பரிசேயர்கள் அதிகம் படித்த வேத பண்டிதர்கள். அவர்களுடன் ஒப்பிடக் கூடிய எதையாகிலும் இன்று நாம் பெற்றுள்ளோம் என்று கூற துணிச்சல் கொள்ள வேண்டாம். இல்லை, இல்லவே இல்லை. அவர்கள் ஒவ்வொரு வார்த்தையையும், அது எழுதப்பட்ட விதமாகவே அறிந்திருந்தனர். ஆயினும் அவர்கள் வீணாய் ஆராதனை செய்தனர். அதை சற்று யோசித்துப் பாருங்கள் ''வீணாய்.'' பெரிய அழகிய வேதாகமப் பள்ளிகள், ஆசிரியர்கள், வாலிபர்கள், எல்லாமே. ஆனால் இழந்து போனவர்கள். வனாந்தரத்தில் நடந்தது போல. ''எல்லாரும் வனாந்தரத்தில் அவர்களோடே கூடச் சென்ற ஞானக்கன் மலையின் தண்ணீரைக் குடித்தார்கள். எல்லாரும் மன்னாவைப் புசித்தார்கள். ஆனால் அவர்கள் ஒவ்வொருவரும் மரித்தார்கள்'' என்றார். மரணம் என்பது நித்திய பிரிவினையைக் குறிக்கும். ஏன்? அவர்கள் தேவனுடைய வாக்குத்தத்தத்தை விசுவாசிக்க தவறினர். 94ஓ, உங்களை இவ்வளவு நேரம் பிடித்து வைக்க எனக்கு விருப்பமில்லை. இதை நான் கூறியே ஆக வேண்டும். இதை கூற ஒரு நிமிடத்துக்கு மேல் எடுத்துக் கொள்ள மாட்டேன். அவர்கள் ஒவ்வொருவரும் அக்கினி ஸ்தம்பத்தின் கீழ் வெளிவந்து வனாந்தரத்தை அடைந்து, தேவனை விசுவாசித்து, நடந்து சென்றனர். ஆனால் அவர்கள் தடங்கலைக் கண்டபோது - பத்து பேர் திரும்பி வந்து, ''நாம் தேசத்தைக் கைப்பற்ற முடியாது. ஓ என்னே, அங்கு இராட்சதர் இருக்கின்றனர். அவர்கள் இது, அது மற்றது, அவர்கள்.... நம்மால் முடியாது. அதுகூடாத காரியம்'' என்றனர். ஆனால் காலேயும், யோசுவாவும் என்ன செய்தனர்? அவர்கள் ஜனங்களை அமர்த்தி, ''நாம் அதை எளிதாய் ஜெயித்துக் கொள்ளலாம்'' என்றனர். (எண்;13:30). ஏன்? அந்த ஜனங்கள் கண்களால் கண்டதை நம்பினர். ஆனால் காலேபும், யோசுவாவும் தேவன் அளித்த வாக்குத்தத்தத்தை நோக்கினர். ''தேவன், அந்த தேசத்தை உங்களுக்கு நான் கொடுத்தேன். நீங்கள் போய் கைப்பற்றுங்கள்'' என்றார். 95இப்பொழுது எபிரேயர் 6ம் அதிகாரத்திலுள்ள வசனத்தை எடுத்துரைக்கிறேன். ஏனெனில், ''ஒருதரம் பிரகாசிக்கப்பட்டும், பரம ஈவை ருசி பார்த்தும், இனிவரும் உலகத்தின் பெலன்களையும் ருசி பார்த்தும், மறுதலித்துப் போனவர்கள்.'' வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்துக்கு சென்று, அங்கிருந்த திராட்சை பழங்களைத் தின்ற ஆட்களைப் போல். ஆனால் வார்த்தையைப் பின்பற்றும் விஷயத்துக்கு வந்தபோது அவர்கள், ''நம்மால் முடியாது'' என்றனர். அவர்கள் வனாந்தரத்தில் அழிந்து போயினர். அந்த நிலையை தான் நாம் அடைந்துள்ளோம். நாம் தேவனுடைய நல் வார்த்தையை ருசி பார்த்தோம். ஆனால் முழு வாக்குத்தத்தத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்னும் போது, ''இல்லை, இல்லை, எங்களால் முடியாது, பாருங்கள், ஏனெனில் டாக்டர் இன்னார் இன்னார், இன்னும் வேறு சிலர் எங்களால் முடியாது என்று கூறுகின்றனர். ''அது அப்போஸ்தலர்களுக்காம். அது வேறொரு நாளுக்காம்'' என்று கூறி விடுகிறோம். அங்கேயே நீங்கள் மரித்து விடுகின்றீர்கள். பாருங்கள், எல்லா வேத வாக்கியங்களும் ஒன்றாக இணைகின்றன. ஒவ்வொரு வார்த்தையும் ஒன்றாக இணைகின்றது. அது மனிதனால் ஏற்படுத்தப்பட்ட எந்த தத்துவத்தினாலும் முறைமையினாலும் அளிக்கப்பட முடியாது. அது பரிசுத்த ஆவியானவரால் வெளிப்பட வேண்டும். இயேசு, ''பிதாவே, இவைகளை ஞானிகளுக்கும், கல்விமான்களுக்கும் மறைத்து பாலகருக்கு வெளிப்படுத்தினபடியால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்'' என்றார். (மத்;11:25). 96நம்மால் முடிந்தவரை நாம் அடுத்த கருத்துக்கு செல்வோம். ''வீணாய் எனக்கு ஆராதனை செய்கிறார்கள்.'' அந்த படித்த மேதைகளான பரிசேயர்கள், ஓ அவர்கள் நல்லொழுக்கமுள்ளவர்கள். ஆனால் அவர்கள், இயேசுவினால் ''பிசாசுகள்'' என்றழைக்கப்பட்டனர் - அந்த படித்த வேத பண்டிதர்கள். இயேசு, ''நீங்கள் பிசாசுகள், உங்கள் பிதாவின் கிரியைகளையே நீங்கள் செய்வீர்கள். நீங்கள் தீர்க்கதரிசிகளின் கல்லறைகளை அலங்கரிக்கிறீர்கள். உங்களுக்கு முன்னிருந்த உங்கள் பிதாக்களும் அதையே செய்தார்கள்'' என்றார். தீர்க்கதரிசிகள் அந்த மார்க்க சம்பந்தமான முறைகளை கிழித்தெறியவே தோன்றினர். அதை தான் அவர்கள் செய்தனர். தீர்க்கதரிசிகள்! யாரிடத்தில் வார்த்தை வருகிறது, வேத பண்டிதரிடத்திலா அல்லது தீர்க்கதரிசியிடத்திலா? (சபையோர், ''தீர்க்கதரிசியிடத்தில்'' என்கின்றனர் - ஆசி). வேத பண்டிதர்களிடத்திலும் வேதாகம பள்ளிகளிடத்திலும் அது வருவது கிடையாது. அது எப்பொழுதும் தீர்க்கதரிசிகளிடத்தில் வருகிறது. தேவன் தமது முறைகளை ஒருபோதும் மாற்றுவதில்லை. எப்பொழுதும் அவர் அதே முறையை கையாண்டு வருகிறார். ஒரு குழுவுக்கல்ல, ஒரு தனிப்பட்ட நபருக்கு! ஆம் ஐயா, தீர்க்கதரிசிகளுக்கு. அவர்கள் சொன்னார்கள்.... இயேசு, ''உங்கள் பிதாக்கள் தீர்க்கதரிசிகளைக் கொலை செய்து அவர்களை அடக்கம் பண்ணின கல்லறைகளை நீங்கள் அலங்கரிக்கிறீர்கள்'' என்றார். அவர்கள் அதையே சாத்தான் குருடாக்கிப்போட்ட வேதாகமப் பள்ளிகளில் செய்து வருகின்றனர். பாருங்கள்? 97இப்பொழுது, பெந்தெகொஸ்தேயினரே, உலக சபைகளின் ஆலோசனை சங்கத்திலிருந்து விலகியிருங்கள். இங்குள்ள போதகர்களே, உங்கள் தலைமை அலுவலகங்களில் உள்ளவர்களுக்கு எழுதுங்கள். நீங்கள் அசெம்பிளீஸ் ஸ்தாபனத்துக்கு எழுத வேண்டிய அவசியமிராது. ஏனெனில், அவர்கள் அதனுடன் எந்த தொடர்பும் கொள்ளக் கூடாது என்று தீர்மானம் செய்துவிட்டனர். பாப்டிஸ்டு சகோதரர்களே, நீங்களும் அதிலிருந்து விலகியிருங்கள். அது வந்து கொண்டிருக்கும் மிருகத்தின் முத்திரை என்று உங்களால் காண முடியவில்லையா? நீங்கள் வேத வாக்கியங்களை அறிந்திருப்பீர்களானால், அதை விழுங்கப்போவது யாரென்று உங்களுக்கு தெரிந்திருக்கும். வார்த்தை உங்களில் பிரதிபலிக்குமானால், அதிலிருந்து விலகியிருங்கள். உங்கள் ஸ்தாபனம் அதில் சேர்ந்து விடும். நீங்களும் அதில் சேராவிட்டால் உங்கள் ஸ்தாபனம் உங்களை சபையிலிருந்து தள்ளிவிடும். நீங்கள், ''ஸ்தாபனத்தில் இருந்து கொண்டு அதில் சேராமல் இருக்க முடியாது. நீங்கள் அதில் சேர வேண்டும், இல்லாவிடில் உங்கள் ஸ்தாபனத்தை விட்டு வெளிவர வேண்டும். அப்பொழுது நீங்கள் ஸ்தாபனத்தை சேர்ந்திருக்கவில்லை என்பதை காண்பிக்கிறீர்கள். முற்றிலுமாக. நீங்கள் அப்படி செய்வீர்களானால், தேவன் உங்களை ஆசிர்வதிப்பார். எத்தனை பேர் அப்படி செய்வார்கள் என்று கூற இயலாது. ஆனால் சிலர் அப்படி செய்வார்கள், அதில் சந்தேகமில்லை. ஆம், ஐயா. 98வஞ்சிக்கப்பட்டவர்கள், இயேசு அவர்களை ''பிசாசுகள்'' என்றழைத்தார். இயேசு அங்கு நின்று கொண்டு, ஒவ்வொரு சோதனையையும் வார்த்தையினால் கடிந்து கொண்டு, வார்த்தையில் நிலைத்திருந்தார். தேவன் அதை உறுதிப்படுத்தினார். அன்றொரு இரவு நான் மைக்கேல் ஆஞ்சலோவைக் குறித்து பிரசங்கம் செய்தது போல். எத்தனை பேர் ஃபாரஸ்ட் லாணிலுள்ள மைக்கேல் ஆஞ்சலோ உண்டாக்கின மோசேயின் சிலையைக் கண்டிருக்கிறீர்கள்? அதை முதன்முறை நான் கண்ட போது, அது என்னைக் கவர்ந்தது. மைக்கேல் ஆஞ்சலோ ஏறக்குறைய தன் வாழ்நாள் முழுவதும், மோசே எப்படியிருந்தான் என்று தன் கற்பனையில் கொண்டிருந்த கருத்து அனைத்தையும் சின்னமாக உருவாக்கினான். அவன் மரிப்பதற்கு முன்பு அந்த சிலையை உண்டாக்கி முடித்து விட வேண்டுமென்று எண்ணினான். அவன் கல்லை இங்கு செதுக்கி, அங்கு உடைத்து, இங்கு மெருகேற்றி, இப்படியாக அநேக ஆண்டுகள் செலவழித்தான். முடிவில் அவன் சிலையை செய்து முடித்த போது, அவன் கையில் ஒரு கந்தை துணியை வைத்துக் கொண்டு அதை இப்படி பார்த்தான். அவன் மோசேயைக் குறித்து கேள்விப்பட்ட அன்று முதல் அவன் மனதில் மோசே எப்படி இருப்பான் என்று கொண்டிருந்த கற்பனை சிலை வடிவில் அவனுக்கு முன்பாக நின்றது. அவனுடைய வேலைப் பாட்டினால் அவன் அதிக உற்சாகம் கொண்டு, ஒரு சுத்தியலைக் கையிலெடுத்து அந்த சிலையின் காலில் அடித்து, ''மோசே, பேசு'' என்றானாம். மோசேயின் சிலை அவ்வளவு தத்ரூபமாக இருந்த காரணத்தால் அது பேசும் என்று அவன் எண்ணினான். காலில் ஏற்பட்ட பழுது இப்பொழுதும் உள்ளது. அது பிழையற்ற ஒரு சிலையாக அமைந்திருந்தது. ஆனால் இப்பொழுது அதன் வலது காலில் ஒரு துண்டு உடைந்து வந்து விட்டது. ஃபாரஸ்ட் லாணில் அதை சென்று காணுங்கள். நீங்கள் கதவுக்குள் நுழையும் அந்த இடத்தில், மூல சிலையைப் போல் உண்டாக்கப்பட்ட சிலையை (reproduction) காணலாம். மைக்கேல் ஆஞ்ச லோவின் மோசே, அவனுடைய சிறந்த வேலைப்பாடு, அவனுடைய வாழ்க்கையை முத்தரித்தது. 99தேவன் ஒரு சிறந்த சிற்பி, உண்மை. அவர் தம்மைப் பிரதிபலிக்க மனிதனை தமது சாயலிலே உண்டாக்கினார். அவர் வார்த்தை. அவர் என்ன செய்தார்? அவர் ஆதாமைச் சோதித்தார், அவன் தோல்வியடைந்தான். மோசே தோல்வியடைந்தான். மற்றெல்லாருமே தோல்வியடைந்தனர். ஆனால் இங்கு பரிபூரணமான ஒருவர் இருக்கிறார், அல்லேலூயா (அது என்ன?) அவர் மாம்சத்தில் தோன்றிய தேவனேயன்றி, அதைக் காட்டிலும் குறையுள்ளவர் அல்ல. அவரில் பிரதிபலித்த வார்த்தை தேவத்தத் துவத்தின் பரிபூரணத்தை மாமிசத்தில் கொண்டு வந்தது. தீர்க்கதரிசியல்ல, இருப்பினும் அவர் தீர்க்கதரிசியாயிருந்தார்; மனிதனல்ல, இருப்பினும் அவர் மனிதனாயிருந்தார். யூதர்களே, அவர் உங்களுடையவர் என்று உரிமை கோராதீர்கள், அவர் யூதனுமல்ல, புறஜாதியுமல்ல. அவர் தேவன். பாருங்கள்? உங்கள் இரத்தம் எதுவோ, அதுதான் நீங்கள், பாருங்கள். நீங்கள் மாம்சமாயிருக்கிறீர்கள் என்பது உண்மைதான். பரிசுத்த ஆவிமரியாளுக்கு உணர்ச்சியைக் கொடுத்ததன் விளைவாக அவள் கர்ப்பந்தரிக்கவில்லை. பிதாவாகிய தேவன் ஒரு கிருமியை, ஒரு முட்டையை, ஒரு இரத்த அணுவை மரியாளில் சிருஷ்டித்தார். அது தேவனுடைய இரத்தமாயிருந்தது. 100இரத்தம் ஆணிலிருந்து உண்டாகின்றது. எனவே அது... ஹிமோக்ளோபினும் இரத்தமும் தகப்பனிலிருந்து வர வேண்டும். ஆகையால் தான் ஒரு குழந்தை காசம் போன்ற தாய்க்குள்ள வியாதியினால் பாதிக்கப்படுவதில்லை. தாயின் மூச்சின் வழியாக அது குழந்தைக்கு பரவ வழியுண்டு. ஆனால் அதை தாயிலிருந்து பிறப்பின் மூலம் பெற முடியாது. ஏனெனில் அதில் தாயின் இரத்தம் இல்லை. இயேசுவுக்கு யூதனின் இரத்தமோ அல்லது புறஜாதியின் இரத்தமோ இருக்கவில்லை. அது யேகோவாவே சிருஷ்டித்த இரத்தமாகும். அவருக்கு தேவனுடைய இரத்தம் இருந்தது. நாம் தேவனுடைய இரத்தத்தினால் இரட்சிக்கப்படுகிறோம் என்று வேதம் கூறுகிறது. (அப்;20:28). அது யூதனின் இரத்தமும் அல்ல, புறஜாதியின் இரத்தமும் அல்ல. அப்படிப்பட்டது உடலுறவின் மூலம் வரும் இரத்தம். ஆனால் இது தேவனுடைய இரத்தம். 101இப்பொழுது கவனியுங்கள். அவர் அந்த பரிபூரணமானவரைக் கண்டபோது, அவரை அடித்து பழுதுபடுத்தினார். ''நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் நொறுக்கப்பட்டார்'' என்று ஏசாயா உரைக்கிறான் (ஏசா;53:5). அவர் என்னவாயிருந்தார்? அவர் பரிபூரண வார்த்தை பிரதிபலித்த அப்பமாயிருந்தார் - அதை ஒவ்வொரு மனிதனும் புசித்து பிழைக்க வேண்டும் என்பதற்காக. அவர் அரைக்கப்பட்டு, நான்கு சுவிசேஷங்களிலும், வேதாகமத்தின் அறுபத்தாறு புத்தகங்களிலும் போடப்பட்ட தேவனுடைய வார்த்தை என்னும் கோதுமையாக இருந்தார். மனிதன் அதைக் கொண்டு மாத்திரமே பிழைக்க முடியும் - அதன் ஒவ்வொரு வார்த்தையினாலும். ஆமென். அதுவே மைக்கேல் ஆஞ்சலோவின் சிறந்த வேலைப்பாடு. தாம் மனிதனில் பிரதிபலிப்பதைக் காண வேண்டுமென்று கருதி, அந்த பரிபூரண மனிதனை தம் சொந்த சாயலிலே உண்டாக்கினார். ஓ என்னே, என்ன ஒரு மனிதன்! அவர் நம்மெல்லாருக்காவும் மரிக்க வேண்டியதாயிருந்தது. இதைக் குறித்து நாம் பேசிக் கொண்டே போகலாம், ஆனால் நாம் அப்படி செய்யப் போவதில்லை. அவர் நம்மெல்லாருக்காகவும் மரித்தார். பரிபூரணமற்ற நாம் அவருடைய வேதாகமத்திலுள்ள ஒவ்வொரு வார்த்தையிலும் பங்கு கொண்டு பரிபூரணமடைய வேண்டுமென்று கருதி, பரிபூரணமான அவர் மரித்தார். பிறகு நாம் நீதிமான்களாக்கப் படுவதற்காக தேவன் அவரை எழுப்பி, உயிர்த்தெழுந்த கிறிஸ்துவின் மேல் நம்மை உரிமையுள்ளவர்களாக்கினார். அவர் இப்பொழுது இங்கிருந்து கொண்டு, நாம் பிழைத்திருக்கும்படிக்கு, ஒவ்வொரு வார்த்தையையும் நமக்கு அருளுகிறார். 102இப்பொழுது வேகமாக, அதன் பிறகு நாம் முடிப்போம். இப்பொழுது, மணவாட்டியாகிய இரண்டாம் ஏவாள். இப்பொழுது, முதலாம் மணவாளன், ஆதாம்; அது அநேக தீர்க்கதரிசிகளின் வழியாக வந்து, பரிபூரணமடைந்து, மற்றவர்களுக்கு அப்பமாக இருப்பதற்காக மரிக்க வேண்டியிருந்தது. ஏவாளைக் குறித்தென்ன? அவளும் அதையே செய்ய வேண்டும். இயேசு வந்தபோது.... ஞாபகம் கொள்ளுங்கள், ஏவாள் ஸ்திரீ. சபையானது வேதத்தில் எங்கும் ஸ்திரீயாகவே சித்தரிக்கப்பட்டுள்ளது. ஏனெனில், அவள் மணவாட்டி. அவள் என்ன செய்தாளென்று கவனியுங்கள். அவர் அவளுடைய போதகத்தை கைக்கொள்ள இணங்க வைக்க வேண்டுமென்று அவள் முயன்றாள். அவர்களுடைய கருத்தை அவர் பிரசங்கிக்கும் வரைக்கும் அவர் பெரியவராகக் கருதப்பட்டார். ஆனால் ஒரு நாள் அவர், ''நானும், பிதாவும் ஒன்றாயிருக்கிறோம்'' என்றார். ''ஓ, உன்னை தேவனுக்குச் சமமாக்கிக் கொள்கிறாய் ஓ, என்னே! அந்த ஆசாமியிடம் இனிமேல் நாங்கள் எந்த தொடர்பும் கொள்ளமாட்டோம்.'' 103அவர், ''நீங்கள் மனுஷ குமாரனுடைய மாம்சத்தைப் புசியாமல் இருந்தால்'' என்பது போன்ற அநேக காரியங்களை கூற ஆரம்பித்தார். அங்கு உட்கார்ந்து கொண்டிருந்த மருத்துவர் என்ன நினைத்திருப்பார்? சாதாரண அறிவு கொண்ட எந்த மனிதனும், ''நீ என் மாம்சத்தைப் புசித்து என் இரத்தத்தைப் பானம் பண்ண வேண்டும்'' என்பதைக் கேட்டபோது என்ன நினைத்திருப்பார்? அவர்கள், ''இந்த மனிதன் இரத்தத்தைக் குடிக்கும் பூதம், போதகர் அல்ல. அந்த மனிதனிடமிருந்து விலகுங்கள். அவருக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது. அவரிடமிருந்து விலகுங்கள்'' என்று கூறியிருப்பார்கள். ஆனால் அவர் கூறினது உண்மை, பாருங்கள், அது உண்மை. ''நீங்கள் புசியாமல் இருந்தால் அழிந்து போவீர்கள். நீங்கள் புசிக்காவிட்டால் மரிப்பீர்கள்.'' என்பது. இன்றைக்கும் அவ்வாறே உள்ளது. அப்பமும், திராட்சை ரசமும் ஒரு அடையாளமே. அந்த இயற்கை பொருட்களைக் கொண்டு நீங்கள் திருப்தியடைய வேண்டாம். நீங்கள் வார்த்தையாகிய கிறிஸ்துவைப் புசிக்க வேண்டும். அப்படித்தான் நீங்கள் பிழைப்பீர்கள். ''புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும்.'' ஆதியாகமம் தொடங்கி வெளிப்படுத்தின விசேஷம் முடிய முழு வேதாகமமும். 104இப்பொழுது இரண்டாம் ஏவாள், அவளைக் கவனியுங்கள். அவள் அவரைப் போல் புதிதாக சிருஷ்டிக்கப்பட்டாள். பெந்தெகொஸ்தே நாளில் அவள் ஆவியினால் நிறைந்து, வார்த்தையினால் போஷிக்கப்பட்டாள். ஆமென். நான் இப்பொழுது பக்தி பரவசப்படுகிறேன், எனக்கு நல்லுணர்வு தோன்றுகிறது. முதலாம் சபை, அவள் கிறிஸ்துவின் மணவாட்டியாக இருக்க வேண்டியவள். எத்தனை பேர் அதற்கு 'ஆமென்' என்று கூற முடியும்? (சபையோர் 'ஆமென்' என்கின்றனர் - ஆசி). அவள் கிறிஸ்துவின் மணவாட்டியாக இருக்க வேண்டியவள். அவள் பெந்தெகொஸ்தே அன்று பிறந்தாள். அவள் ரோமாபுரியிலிருந்த நிசாயாவில் பிறக்கவில்லை, இங்கிலாந்திலுள்ள லண்டனில் பிறக்கவில்லை, அமெரிக்க ஐக்கிய நாடுகளில் பிறக்கவில்லை, லூத்தரின் காலத்தில் ஜெர்மனியில் பிறக்கவில்லை, வெஸ்லியின் காலத்தில் இங்கிலாந்தில் பிறக்கவில்லை, அமெரிக்க ஐக்கிய நாடுகளில் பெந்தெகொஸ்தேயினர் என்று அழைக்கப்படுபவரிடம் பிறக்கவில்லை. அவள் பெந்தெகொஸ்தே நாளில் பிறந்தாள். அவள் ஆவியில் நிறைந்து, ''தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும்'' போஷிக்கப்பட்டாள்... ஓ, அவர்கள் ஒவ்வொரு வார்த்தையும் ஏற்றுக் கொண்டார்கள். அது தேவனுடைய உலகத்தில், மலர் பூத்து வளரும் மணவாட்டி மரமாக, அவருடைய பிரதிநிதியாக திகழ்ந்தது. 105அவருடைய வாக்குத்தத்தத்தின் வார்த்தை அவரை அவளில் பிரதிபலிக்கச் செய்தது. அவர்கள் பேதுருவின் மேலும் மற்றவர்கள் மேலும் கவனம் செலுத்த வேண்டியதாயிருந்தது. அவர்கள் எந்த வேதாகமப் பள்ளிக்கும் செல்லவில்லை. அவர்களுக்கு படிப்பு எதுவுமில்லை. அவர்களுக்கு தங்கள் சொந்த பெயரையும் எழுதத் தெரியவில்லை. ''அவர்கள் படிப்பறியாதவர்களும், பேதமையுள்ளவர்களும்'' என்பதாக வேதம் உரைக்கிறது (அப்;4:13). ஆனால் என்ன நடந்தது? அவர்கள் இயேசுவுடன் கூட இருந்தவர்கள் என்பதை அவர்கள் அறிந்துகொள்ள வேண்டியதாயிருந்தது. அவர் அவர்களுக்குள் இருந்து கொண்டு, அவருடைய வாக்குத்தத்தத்தை பிரதிபலித்துக் கொண்டிருந்தார். அல்லேலூயா! தேவனுக்கு மகிமை! அதுதான் நமக்கு இக்காலத்தில் அவசியமாயுள்ளது. அவருடைய வார்த்தை அவரை சபையாகிய அவளில் பிரதிபலித்தது, அவள் தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைத்தாள். ஆனால் ஏவாளைப் போல் அவளும் ரோமாபுரியிலிருந்த நிசாயாவில் வார்த்தையிலிருந்து விழுந்துபோனாள். அங்குதான் முதன் முதலாக ஸ்தாபனம் - அகில உலக கிறிஸ்தவ சபை தோன்றினது. இங்கு வேத அறிவாளி யாராகிலும் இருக்கின்றாரா? அது உண்மையென்று அறிந்துள்ள வேத பண்டிதர் யாராகிலும் இருக்கின்றாரா? முதலாம் ஸ்தாபனம் ரோமாபுரியிலிருந்த நிசாயாவில் தோன்றினது. தேவன் ஒருபோதும் ஸ்தாபனத்தைக் கொண்டிருக்கவில்லை, இனி கொள்ளப் போவதுமில்லை. அது மனிதனின் கட்டுக்குள் அடங்கிய ஒன்று. அங்குதான் அவர்கள் எல்லாரும்.... நான் ஒரு கிறிஸ்தவன். ''நீ எந்த சபையைச் சேர்ந்தவன்?'' சபை ஒன்று மாத்திரமே உண்டு. நான் ஐம்பத்தைந்து ஆண்டுகளாக பிரான்ஹாமாக இருக்கிறேன். அந்த குடும்பத்தை நான் சேரவில்லை, அதில் நான் பிறந்தேன். அப்படித்தான் நீங்கள் தேவனுடைய ராஜ்யத்தில் பிறக்கிறீர்கள். நீங்கள் அவருடைய வார்த்தையின் பிரதிபலிப்பாய் இருக்கிறீர்கள். 106கவனியுங்கள், ஏவாள் விழுந்து போனாள். அது போன்று இரண்டாம் ஏவாள் ரோமாபுரியிலிருந்த நிசாயாவில் விழுந்து போய், ஒரு ஸ்தாபனத்தை ஏற்படுத்திக் கொண்டு வார்த்தைக்குப் பதிலாக கோட்பாடுகளை ஏற்றுக்கொண்டு, ஜுபிடர் போன்ற அஞ்ஞான விக்கிரகங்களின் ஸ்தானத்தில் பவுல், பர்னபாஸ் இவர்களின் விக்கிரகங்களை நிறுவி, சூரிய தேவனையும், சந்திர தேவதையையும் வழிபாட்டில் நுழைத்து, சந்திர தேவதையாகிய அஸ்தரோத்தையும் அதை சித்தரிக்கும் வட்டவடிவமான அப்பத்தையும் எடுத்துக் கொண்டு அவளை ஜுபிடராகிய சூரிய தேவனின் தாயாக்கி விட்டனர். இயேசுவின் பிறந்த நாளை அவர்கள் ஏப்ரல் மாதத்திலிருந்து சூரிய தேவனின் பிறந்த நாளுக்கு மாற்றினர். அவர் ஆட்டுக் கடாக்கள் பிறக்கும் ஏப்ரல் மாதத்தில் பிறந்தார். ஏனெனில் அவர் ஆட்டுக்கடா, சூரிய தேவனின் (sun god's) பிறந்தநாள் டிசம்பர் 25ம் தேதி, தேவ குமாரனின் (sur-of-gad's) பிறந்த நாள் அல்ல. ஆனால் நாம் ஒவ்வொருவரும் சாண்டா கிளாஸ் விளையாடி, மரங்களை அலங்கரிக்கிறோம். அது அஞ்ஞான பழக்கவழக்கம். இவையனைத்தும் செய்து நம்மைக் கிறிஸ்தவர்கள் என்று அழைத்துக் கொள்கிறோம். கிறிஸ்தவ சபைக்கு என்ன நேர்ந்தது? வார்த்தையைப் பிரசங்கித்து சத்தியத்தை எடுத்துரைத்து, அதை தேவன் உறுதிப்படுத்தி, அவர் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிறார் என்பதை மக்களுக்கு நிரூபிக்கும் அப்படிப்பட்ட ஒருவர் நமது மத்தியில் எப்பொழுதாகிலும் எழும்புவாரா? நமக்கு வேதாகமப் பள்ளியோ, வேத பண்டிதரோ தேவையில்லை. நமக்கு தேவை தீர்க்கதரிசி. அது உண்மை. தேவன் அதை வாக்களித்துள்ளார். 107ஏவாள் தன் தோல்வியை சந்தித்தாள், சபையும் அப்படியே. அது தன்னை ஸ்தாபனத்துக்கும் மனித ஆளுகைக்கும் அர்ப்பணித்து விட்டது. அது ஆவியினால் நடத்தப்படுவதில்லை. அது வார்த்தையிலிருந்து விலகி, கோட்பாடுகளை ஏற்றுக்கொண்டது. அதற்கு யார் 'ஆமென்' என்று கூற முடியும்? (சபையோர் 'ஆமென்' என்கின்றனர் - ஆசி). நிச்சயமாக! பிராடெஸ்டெண்டுகளாகிய நாம் வார்த்தையுடன் சிலவற்றை கூட்டி, அதிலிருந்து சிலவற்றை எடுத்துப் போட்டதன் விளைவாக அநேக கோட்பாடுகளைக் கொண்டிருக்கிறோம் என்று உங்களுக்குத் தெரியுமா? சாத்தான் ஏவாளிடம் கையாண்ட அதே உபாயத்தை சடையிடமும் கையாண்டு அதைக் கைப்பற்றிவிட்டான் - வார்த்தை அல்லாத ஒன்றுடன் ஒத்துப்போதல். அங்குதான் அவன் அதை கைப்பற்றினான் - வார்த்தையிலிருந்து வித்தியாசப்பட்ட கோட்பாட்டை, ஸ்தாபனத்தை ஏற்றுக்கொள்ளுதல். 108மூலவித்து இரத்த சாட்சியாக மரித்து நிலத்தடியில் சென்றது. ரோமாபுரியின் இயந்திரங்கள் பெந்தெகொஸ்தேயிலிருந்து வளர்ந்து வந்த அந்த கோதுமையை பொடியாக அரைத்து, தொழு மரத்தில் அவர்களை எரித்து, சிங்கங்களுக்கு அவர்களை இரையாக்கினது, அவர்கள் மற்ற கோதுமையைப் போல் நிலத்தடியில் சென்றனர். ஆனால் அவரோ அதை சீர்திருத்தத்தின் போது எழுப்பினார், அதே கோதுமை, இரண்டாம் முறை. அவர் இரண்டாம் ஆதாமுக்குச் செய்தது போல், ஆதாம் விழுந்த பிறகு, அவர் இரண்டாம் ஆதாமை எழுப்பினார். இரண்டாம் ஆதாம் விழுந்து மேலே எடுக்கப்பட்டார். முதலாம் ஆதாம் பாவத்தில் விழுந்து அங்கேயே நிலைத்திருந்தான், ஆனால் இரண்டாம் ஆதாம் மனிதனை பாவத்திலிருந்து மீட்பதற்கென விழுந்து, மேலே எடுக்கப்பட்டார். முதலாம் சபை ரோமாபுரியிலிருந்த நிசாயாவில், வேதத்திலிருந்து ஒரு சத்திய வார்த்தையை எடுத்துபோட்டதன் நிமித்தமாக விழுந்தது. அங்கு ரோம சபை அவர்களுடைய கொள்கைகளையும், கோட்பாடுகளையும் சேர்த்தது. லூத்தர் என்னும் பெயர் கொண்ட குருவானவர் எழும்பி, ''இந்த இராப்போஜனம் கிறிஸ்துவின் சரீரம் அல்ல. அதுவெறும் வட்ட வடிவமான அப்பம். விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான்.'' என்றார். அவர் அப்பத்தை தரையில் எரிந்து, அதை எதிர்த்தார். அதுவே தீயத்திராவின் காலத்தில் பிரகாசித்த முதலாம் நட்சத்திரம். ஆம், ஐயா! விசுவாசத்தினால் நீதிமானாக்கப்படுதல். அந்த சிறந்த சிற்பி அவருடைய வார்த்தையைப் பிரதிபலிக்கும் சிறந்த வேலைப்பாடான மணவாட்டியை உண்டாக்கத் தொடங்கினார். 109ஆனால் லூத்தரின் மரணத்திற்கு பிறகு லூத்தரன்கள் என்ன செய்தனர்? அவர்கள் சாத்தானை சந்தித்து, ஒரு ஸ்தாபனம் உண்டாக்கிக் கொண்டு மரித்தனர். அதன் பிறகு அது வேறொன்றுமே செய்யவில்லை. அது திரளான ஜனங்களைக் கொண்ட ஒரு ஸ்தாபனமானது. சரி. பிறகு தேவன் மற்றொரு சத்தியத்தை பிரதிபலிக்க எண்ணி, ஜான் வெஸ்லியின் காலத்தில் அதை மறுபடியும் எடுத்தார். ஜான் வெஸ்லி என்ன செய்தார்? ''பரிசுத்தமாக்கப்படுதல் கிருபையின் இரண்டாம் கிரியை'' என்றார் அவர். தேவன் என்ன செய்தார்? அதை ஆசிர்வதித்தார். வெஸ்லி ஆங்கிலிகன் சபை, சுவிங்கிலி சபை, சட்ட பூர்வமானவர்கள் (legalists), கால்வீன்கள் போன்றவர்களை எதிர்த்தார். அவர், ''விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான் என்று லூத்தர் கூறினார். கிருபையின் இரண்டாம் கிரியை பரிசுத்தமாக்கப்படுதல்'' என்றார். அது சாத்தியம். அது உண்மை. பாருங்கள்? 110ஆனால் அவர்கள் என்ன செய்தனர்? வெஸ்லி ஆஸ்பரி இவர்களின் மரணத்துக்குப் பிறகு, லூத்தரன்கள் செய்த அதையே இவர்களும் செய்து ஸ்தாபனம் உண்டாக்கிக் கொண்டு மரித்தனர். அதன் நிலையை இன்று பாருங்கள். அறுவை சிகிச்சைக்கு ஆயத்தமாயிருந்த ஒரு ஸ்திரீக்கு ஜெபம் செய்ய அண்மையில் நான் மருத்துவமனைக்கு சென்றிருந்தேன். அவள், ''சகோ. பிரான்ஹாமே, உங்களை நான் அழைத்தேன். உங்களுக்கு என்னைத் தெரியாது. எனக்காக ஜெபிப்பீர்களா? நாளை காலையில் எனக்கு அறுவை சிகிச்சை நடக்கவிருக்கிறது'' என்றாள். நான், ''நிச்சயம், சகோதரியே'' என்றேன். அங்கு வேறொரு மனிதனும், ஸ்திரீயும், ஏறக்குறைய பதினெட்டு வயதுள்ள பையனும் உட்கார்ந்து கொண்டிருந்தனர். அவர்கள் என்னைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தனர். நான் அவர்கள் பக்கம் திரும்பி, ''என்னை மன்னியுங்கள், நான் ஜெபிக்கப் போகிறேன்'' என்றேன். அவள், ''திரையை இழுத்து விடுங்கள்'' என்றாள். ''நீ கிறிஸ்தவள் இல்லையா?'' என்றேன். அவள், ''நாங்கள் மெதோடிஸ்டுகள்'' என்றாள். ''அதை நான் கேட்கவில்லை. நான் கேட்டது என்னவென்றால்.... நீ மெதோடிஸ்டாக இருந்தால், நான் திரையை இழுத்து விடுகிறேன். ஆனால் நீ கிறிஸ்தவளாக இருந்தால், திரையை இழுத்துவிடக் கூறியிருக்க மாட்டாய்'' என்றேன். எனவே, ஆம், அது உண்மை. மெதோடிஸ்டு, பாப்டிஸ்டு, அல்லது பிரஸ்பிடேரியனாக இருப்பதற்கும், கிறிஸ்தவனாக இருப்பதற்கும் நிறைய வித்தியாசம் உண்டு; காம்ப்பெல்லைட்டாக இருப்பதல்ல, கிறிஸ்தவனாக இருப்பது, பாருங்கள். அவள் என்ன செய்தாள்? அதையே. 111பிறகு என்ன நேர்ந்தது? தென்பாகத்திலுள்ள ஒரு சிறு கூட்டத்தை தேவன் தெரிந்து கொண்டார் - கோணல் கண்ணுள்ள கறுப்பு நிறமுள்ள ஒரு மனிதனை. அவர் என்ன செய்தார்? அவர் ஆவியை ஊற்றி வரங்களைப் புதுப்பித்தார். அது பெந்தெகொஸ்தேயாக ஆனது. பின்னால் உட்கார்ந்து கொண்டிருக்கும் சகோ. வால்டெஸ்ஸை போன்ற பழைய காலத்தவருக்கு பெந்தெகொஸ்தே ஆரம்பமானது ஞாபகமிருக்கும். இந்த முதிய பரிசுத்தவான் எனக்கு ஐந்து வயதாயிருந்தகாலம் முதற் கொண்டு பிரசங்கித்து வருகிறார். ஆரம்ப பெந்தெகொஸ்தேயினரிடையே நீங்கள் ஸ்தாபனத்தைக் குறித்து பேச முடியாது. அவர்கள் அந்த அசிங்கமான காரியத்தை விட்டு வெளிவந்தவர்கள். அவர்கள் தேவனுடைய செய்தியை பெற்றிருந்தனர். ஆனால் இவர்களும் என்ன செய்தனர்? மற்றவர்கள் செய்ததையே செய்து ஸ்தாபனம் உண்டாக்கிக் கொண்டனர். தற்போது அவர்களுக்கு முப்பது அல்லது நாற்பது ஸ்தாபனங்கள் உள்ளன - ஒருத்துவம், இருத்துவம், திரித்துவம் போன்றவை. என் வாழ்க்கையில் நான் கேள்விப்படாத அப்படிப்பட்ட பெயர்கள். நீங்கள் என்ன செய்தீர்கள்? அந்த இடத்திலேயே மரித்தீர்கள். அவ்வளவு தூரம் தான் உங்களால் செல்ல முடியும், உங்கள் ஸ்தாபனம் இதை ஏற்றுக்கொள்ளாது. உங்கள் மனிதனை நீங்கள் தெரிந்து கொள்கிறீர்கள். ''இந்த மனிதன் நம்மைப் போல் விசுவாசிக்காவிட்டால், அவரை இங்கு வைக்காதீர்கள். நம்முடைய ஐக்கியம் அவரை வைத்துக்கொள்ள முடியாது'' என்கிறீர்கள். ஓ! 112கவனியுங்கள், வேகமாக முடிக்கிறேன். ஒரு உண்மையான வித்து வர வேண்டும். அது நடக்க வேண்டும் ஏனெனில், அவர் கறை திரையற்ற மணவாட்டிக்காக வருகிறார். அவர் வார்த்தையினால் உறுதிப்படுத்தப்பட்ட மணவாட்டியாக வருகிறார். ஒ, அவள் மிகச்சிறிய கூட்டமாக இருப்பாள். இயேசு, ''நோவாவின் காலத்தில் நடந்தது போல, மனுஷகுமாரன் வருங்காலத்திலும் நடக்கும். அப்பொழுது எட்டு பேர் மாத்திரமே இரட்சிக்கப்பட்டார்கள்'' என்றார். அது சரியா?இப்பொழுது எத்தனை பேர்? எனக்குத் தெரியாது. ஆனால் பாருங்கள், மணவாட்டி, அவரவர் காலத்தில் வார்த்தையை ஏற்றுக் கொண்ட அனைவரையும் கொண்டவளாயிருப்பாள் - இந்த கடைசி கால கூட்டம் மாத்திரமல்ல. தேவன் இவர்கள் அனைவரையும் இங்கிருந்து எடுத்துக்கொள்வார். அது ஆச்சரியப்படும் அளவுக்கு மிகச் சிறியதாயிருக்கும். அவர்கள் காணாமற் போவார்கள். அவர்கள் போய்விட்டார்கள் என்று நீங்கள் அறியவும் மாட்டீர்கள். இந்த கடைசி நாட்களில் அவர் ஐந்நூறு பேர்களை எடுத்துக் கொண்டால் எப்படியிருக்கும்? நீங்கள் அறியவும் கூட மாட்டீர்கள். சில நாட்களில், இரண்டு அல்லது மூன்று நாட்களில் அவர் ஐந்நூறு பேர்களை எடுத்துக் கொண்டால் எப்படியிருக்கும்? உலகில் அத்தனை பேர் காணாமற் போகின்றனர். அவர்கள் எங்கே என்று அறிவதில்லை. அவர்களைக் குறித்து ஒன்றுமே கேள்விப்படுவதில்லை. கர்த்தராகிய இயேசுவின் இரகசிய வருகையின் போதும் அப்படியே இருக்கும். அவள் எடுத்துக் கொள்ளப்படுவாள். மற்றவர்கள் பிரசங்கித்துக் கொண்டேயிருப்பார்கள் - நோவாவின் காலத்தில் நடந்தது போல. ''தேவனுக்கு மகிமை, நாங்கள் பெற்றுக் கொண்டோம், அல்லேலூயா'' என்று கூறி மரணத்துக்கென்று முத்தரிக்கப்படுவார்கள். அப்படித்தான் வேதம் கூறுகிறது. அது ஒருபோதும் தவறாது. 113வரப்போகும் பரிபூரண மணவாளனை நோவா, மோசே, தாவீது ஆகியோர் பிரதிபலித்தது போல, வரப்போகும் பரிபூரண மணவாட்டியை லூத்தர், வெஸ்லி, பெந்தெகொஸ்தேயினர் ஆகியோர் பிரதிபலித்தனர். கவனியுங்கள், ஒவ்வொரு முறையும் அவள் என்ன செய்தாள்? ஒவ்வொரு முறையும் சபையானது, ஏவாள் செய்தது போன்று, அவளுடைய ஆதாம்கள் அவளுடைய புது வெளிச்சத்தை, அவளுடைய திட்டத்தை விசுவாசிக்கும்படி செய்து, அங்கேயே அதனுடன் மரித்து விட்டாள். ''நல்லது, நல்லது, எங்கள் குழு ஒன்றாக சேரும், பாருங்கள், ஓ, நாங்கள் கண்டு கொண்ட எங்கள் புது ஆசீர்வாதங்கள்'' போன்றவை. இவையெல்லாம் ஏவாளுக்கு என்ன செய்தது? நமக்கு குறுகிய நேரமே இப்பொழுது உள்ளது. இவையெல்லாம் ஏவாளுக்கு - முதலாம் தாய் சபைக்கு, முதலாம் ஆதாமின் முதலாம் மணவாட்டிக்கு என்ன செய்தது? அது அவளுக்கு என்ன செய்தது? இப்பொழுது கூர்ந்து கவனியுங்கள். நீங்கள் என்னுடன் இந்த விஷயத்தில் இணங்கப் போவதில்லை, அது ''சர்ப்பத்தின் வித்தை'' தோன்றச் செய்தது, நிச்சயமாக. 114அவளுடைய முதலாம் குமாரன் ஆதாமின் குமாரன் அல்ல. அப்படி இருந்திருந்தால், அவன் பிறப்புரிமையை பெற்றிருப்பான். வேதாகமம் யூதா நிருபத்தில், ''ஆதாமுக்கு ஏழாந் தலைமுறையான ஏனோக்கு'' என்றுரைக்கிறது (14ம் வசனம்). அது சரியா? ''ஆதாம் சேத்தைப் பெற்றான்'' என்று அவன் தொடங்குகிறான். (லூக்;3:38). அப்படியானால் காயீனைக் குறித்தென்ன? யார் பிறப்புரிமையை பெற்றிருந்தான்? காயீன் ஆதாமின் குமாரன் அல்ல. சேத்து ஏனோஸைப் பெற்றான்; யாரேத், இப்படி வழிவழியாக ஆதாம். ''ஏனோக்கு ஆதாமுக்கு ஏழாந் தலைமுறை''. காயீன், ஆதாமின் குமாரனாயிருந்திருந்தால், வேதத்தில் எங்குமே; லூக்காவும் கூட வம்சவரலாற்றைக் கூறும் போது, காயீன் ஆதாமின் குமாரன் என்று கூறவில்லை. அப்படியானால் அவன் யாருடைய குமாரன்? அவன் ஆதாமின் குமாரனாக இருந்திருந்தால் அவனுடைய முதல் குமாரனாக எல்லா பிறப்புரிமையும் பெற்றிருப்பான். ஓ! அங்குதான் வேறொன்றை ஏற்றுக்கொண்ட மாம்சத்துக் குரிய சபை (உங்களால் அதை காண முடியவில்லையா?) வார்த்தைக்குப் பதிலாக விபச்சாரத்தை. பெந்தெகொஸ்தே மக்களே, உங்களை ஆசிர்வதிப்பாராக. சரி, அவன் ஏவாளில் எதை தோன்றச் செய்தான்! சர்ப்பத்தின் வித்தை. இந்தக் கடைசி நாட்களில் ஸ்தாபனத்தின் மூலம் அது என்ன செய்துள்ளது? மறுபடியும் சர்ப்பத்தின் வித்தை தோன்றச் செய்துள்ளது - வார்த்தையில் புகுத்தினது. அவன் எதை செலுத்தினான் ? கனிகளை, இரத்தத்தை அல்ல. 115வார்த்தையின் வெளிப்பாட்டின் மூலம், தேவனுடைய வார்த்தை எழுதி வைக்கப்படுவதற்கு முன்பே, விசுவாசத்தினாலே ஆபேல் காயீனுடைய பலியிலும் மேன்மையான பலியை தேவனுக்குச் செலுத்தினான். அதினாலே அவன், ''நீதிமானென்று சாட்சி பெற்றான்.'' (எபி;11:4). அவன் செலுத்தின காணிக்கையினால் வார்த்தை அவன் மூலம் பிரதிபலித்தது. ஓ, காயீன் சென்று நிலத்தின் கனிகளைக் கொண்டு வந்தான். ஏவாள், ஆப்பிள் பழத்தைப் புசித்ததாக அவன் எண்ணினான். பெரும்பாலான வேதாகமப் பள்ளிகள் இப்பொழுது அதை ஏப்ரிகாட் பழம் என்று மாற்றிவிட்டன. அங்கு நடந்தது விபச்சாரம். வேதம் அறிந்துள்ள எவருக்கும் அது உண்மையென்று தெரியும். நிச்சயமாக அது விபச்சாரமாக இருந்தது. கவனியுங்கள், முதலாம் ஏவாள் வார்த்தையிலிருந்து விலகினதன் நிமித்தமாக சர்ப்பத்தின் வித்து தோன்றினது. இரண்டாம் ஏவாள் அதையே ரோமாபுரியிலிருந்த நிசாயாவில் செய்தாள். அவள் எதைப் பெற்றாள்? ஒரு கூட்டம் ஸ்தாபன பிள்ளைகளை. அது உண்மை. அவர்கள் நல்லொழுக்கமுள்ளவர்கள்; நிச்சயமாக, அருமையானவர்கள். ஆனால் என்ன? அவர்களுடைய கோட்பாடுகளின் மூலம் மரித்து போன நிலையில் உள்ளவர்கள். 116இப்பொழுதும் அதுவே. காயீன் பெற்ற வார்த்தையின் வெளிப்பாடு இவர்களுக்கும் அதையே செய்துள்ளது. என்ன? அவளுக்கு வாக்களிக்கப்பட்டுள்ளது. காலத்தின் முடிவில் இந்த ஏவாளுக்கு என்ன வாக்களிக்கப்பட்டுள்ளது. இப்பொழுது கூர்ந்து கவனியுங்கள், நான் முடிக்கப் போகிறேன். முடிவு காலத்தில் இந்த ஏவாளுக்கு வாக்களிக்கப்பட்டுள்ளது எவை? ஐசுவரியங்கள், லவோதிக்கேயா, பெரிய பெயர், பெரிய மனிதர், ஐசுவரியம். ஆனால் அவள் மரித்து நிர்வாணியாயிருப்பதை அறியாமலிருக்கிறாள். சபை காலம் அதில் தான் முடிவடைகிறது. அவள் வார்த்தையை மறுதலிக்கிறாள். மத்;24:24 அவளில் நிறைவேறுவதற்கென, அவள் நிறைய சத்துடன் செல்ல முயல்கின்றாள். அவள் நிறைய இது, நிறைய சமுதாய பிரபல்யம் போன்றவைகளைக் கொண்டிருந்தது, ''எங்களுக்கு வல்லமை உள்ளது! தேவனுக்கு மகிமை, அல்லேலூயா, எங்களுக்கு வல்லமை உள்ளது!'' என்று சொல்லிக் கொள்கிறாள். தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பெலனை மறுதலித்தல். அது மிகவும் நெருங்கியிருந்து, கூடுமானால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கும்.... ஒரு மனிதன் ஆவியில் நடனமாடி, பல பாஷைகள் பேசி, அதே சமயத்தில் தேவனுடைய வார்த்தை உண்மையல்லவென்று அதை எப்படி மறுதலிக்க முடியும்? அது எப்படி பரிசுத்த ஆவியாக இருக்க முடியும்? இருக்கவே முடியாது. ''ஒவ்வொரு வார்த்தையும்'' தேவன் ஒன்றைக் கூறுவாரானால், அதன் அர்த்தம் அதுவே. அதை வேறு வழியில் வியாக்கியானம் செய்யாதீர்கள். அதை யாரும் தனிப்பட்ட விதத்தில் வியாக்கியானம் செய்யக் கூடாதென்று வேதம் உரைத்திருக்கிறது. அவர் சொன்ன விதமாகவே அதை கூறுங்கள். 117கவனியுங்கள், ஒரு கள்ள வல்லமை. அதை தான் சாத்தான், இயேசுவிடம் உப்பரிகையின் மேல் சென்று அங்கிருந்து தாழ குதித்து தம்மைப் பிரபலியமாக்கிக் கொள்ளக் கூறின போது, அவருக்கு அளிக்க முயன்றான். ஜனங்கள் அப்படி செய்கின்றனர், எல்லோருமே, சபைகளின் ஆலோசனை சங்கம் கூட. அதினோடே - எழும்பி வரும் உலக சபைகளின் ஆலோசனை சங்கத்துடன் - யுத்தம் பண்ணத்தக்கவன் யார்? என்று வேதம் உரைக்கிறது. (வெளி;13:4). நமக்கு நேரமிருந்தால் அதை பார்க்கலாம், ஆனால் நமக்கு நேரமில்லை. கவனியுங்கள், இரண்டாம் வார்த்தை ஆதாரமாகிய இயேசு; நெருங்கியிருக்கப் போகிற இந்த சபையின் நாட்களில் நடக்கிறதைக் கவனியுங்கள். கடைசி சபை காலம் லவோதிக்கேயா. அதற்கு எத்தனை பேர் ''ஆமென்'' என்று கூற முடியும்? (சபையோர் 'ஆமென்' என்கின்றனர் - ஆசி). அவள் என்ன செய்கிறாள்? அந்த மகிமையான கட்டத்திற்குள் அவள் எப்படி செல்கிறாள்? வெது வெதுப்பாக, தேவனற்றவளாக. அவள் என்ன செய்தாள்? 118ஏவாள் மனப்பூர்வமாக..... மனப்பூர்வமாக அல்ல. அறியாமையின் விளைவாக வஞ்சிக்கப்பட்டதை ஆதாம் கண்டு, அவளை மீட்பதற்கென அவளுடன் சேர்ந்து கொண்டான். அது சரியா? ''ஆதாம் வஞ்சிக்கப்படவில்லை'' என்று வேதம் உரைக்கிறது (1.தீமோ;2:14). ஏவாள் வஞ்சிக்கப்பட்டாள். ஆகையால் தான் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க வேதம் ஸ்திரீக்கு தடைவிதிக்கிறது. பாருங்கள்? ஆதாம் மீறுதலுக்கு உட்படவில்லை, ஏவாள் வஞ்கிக்கப்பட்டு மீறுதலுக்கு உட்பட்டாள், ஆகையால் தான் அவள் உபதேசம் பண்ணவும், புருஷன் மேல் அதிகாரம் செலுத்தவும் கூடாது. அப்படித்தான் வேதம் உரைக்கிறது. நீங்கள், ''நல்லது, இது'' எனலாம். இது என்ன செய்கிறது, அது என்ன செய்கிறதென்று எனக்குக் கவலையில்லை. வார்த்தை என்ன கூறுகிறதென்பதே முக்கியம், சகோதரனே, சகோதரியே. நாம் வார்த்தையினால் பிழைக்கிறோம் - ஏதோ ஒரு அத்தாட்சி, அல்லது மாம்சீக அனுபவத்தினால் அல்ல. அதற்கும் இதற்கும் யாதொரு சம்பந்தமுமில்லை. வார்த்தையை மறுதலிக்கும் எந்தவிதமான அனுபவமும் உதவாது. ''அந்நாளில்'' அநேகர் என்னை நோக்கி, ''நான் தீர்க்கதரிசனம் உரைத்தேன், பிசாசுகளைத் துரத்தினேன், அந்நிய பாஷைகளைப் பேசினேன், இவைகளை எல்லாம் செய்தேன், வேத சாஸ்திரத்தில் டாக்டர் பட்டம் பெற்று சுவிசேஷத்தைப் பிரசங்கித்தேன்'' என்று சொல்வார்கள். அப்பொழுது, ''நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை; அக்கிரமச் செய்கைக்காரரே, என்னை விட்டு அகன்று போங்கள் என்று சொல்வேன்'' என்றார். வார்த்தை இவ்வாறு கூறுகிறதென்று அறிந்த போதிலும், ஏதோ ஒரு ஸ்தாபனம் அல்லது ஒரு முறைமைக்காக அதை கைவிட்டு ஒப்புரவாதல். ஓ நண்பனே, உன்னை சிநேகிக்கும் அருமை சகோதரன் என்னும் முறையில் உன்னை எச்சரிக்க விரும்புகிறேன். கூர்ந்து கவனி. 119ஏவாள் வஞ்சிக்கப்பட்ட காரணத்தால், ஆதாம் அவளுடன் வெளியே நடந்து சென்றான். ஆனால் இந்த லவோதிக்கேயா சபை வித்தியாசமான செயலைப் புரிந்தது. ஆம், ஐயா. அவள் அவரை அவளுடைய படுக்கை அறையிலிருந்து துரத்திவிட்டாள். அவர் வெளியே நின்று கொண்டு, கதவைத் தட்டி, உள்ளே வர முயன்று கொண்டிருக்கிறார். அவள் கலாச்சாரமுள்ளவள், உயர்ந்த நிலையில் உள்ளவள். ஓ என்னே, அவளுக்கு ஒரு குறைவுமில்லை என்று அவள் சொல்லிக் கொள்கிறாள். ஆனால் அவள் நிர்வாணி, பரிதபிக்கப்படதக்கவள் என்பதை அறியாமலிருக்கிறாள். அந்த சபைதான் கூடுமானால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கும். கவனியுங்கள், அவளுக்கு வல்லமை இருந்தது - கள்ள வல்லமை. அவள் வார்த்தையின் ஒரு பாகத்தை மாத்திரம் ஏற்றுக் கொண்டாள், மற்றதை ஏற்றுக் கொள்ளவில்லை. 120கூறப்பட்ட மிகப்பெரிய பொய் எது? அதில் தொண்னூற்றொன்பது சதவிகிதம் உண்மை அடங்கியுள்ளது. யாராகிலும் ஒருவர், ''வில்லியம் பிரான்ஹாம் குறிப்பிட்ட இந்த தேதியில் டெக்ஸாஸிலுள்ள ஹவுஸ்டனில் இருந்தார், அவர் குடித்து வெறித்திருந்தார்'' என்று கூறினால், அது பொய். பாருங்கள்? நீங்கள், ''ஓ, இல்லை. அவர் அந்த தேதியில் அரிசோனாவிலுள்ள பீனிக்ஸில் இருந்தார். அவர் கிறிஸ்தவ வர்த்தகர்களுக்கு ஒரு குறிப்பிட்ட பொருளின் பேரில் பிரசங்கித்துக் கொண்டிருந்தார். அநேகர் அங்கிருந்தனர். அவர்கள் 10.30 மணி வரைக்கும் கேட்டுக் கொண்டிருந்தனர்'' என்பீர்கள். ஆனால் நீங்கள், ''10.30 மணிக்குப் பிறகு அவர் என்ன செய்தார் தெரியுமா? அவர் சென்று மதுபானம் வாங்கி அருந்தினார்'' என்று சேர்ப்பீர்களானால், அது பொய். மற்றதெல்லாம் உண்மை. பாருங்கள். வஞ்சிப்பதற்கென அது உண்மையைப் போலவே காணப்பட வேண்டும். அப்படித்தான் ஜனங்கள் இன்று செய்கின்றனர். அவர்கள் பெரும்பாலும் சத்தியத்தைக் கொண்டவர்களாயிருப்பதால், தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும் அவர்கள் வஞ்சிக்கின்றனர்... அதற்கு ஒரு வார்த்தை மாத்திரமே அவசியம். அதை நான் வேதப்பிரகாரமாக நிரூபித்திருக்கிறேன். 121பாருங்கள், அவர் அவளுடன் வெளி நடந்து செல்லவில்லை. அவள் வார்த்தையாகிய அவரை வெளியே துரத்தி. அவரைப் புறக்கணித்தாள். நாம் முடிவுக்கு வரும்போது, இது பரிதாபமான காட்சி. பாபிலோனில் இருப்பது போல் மனிதன் தான் சாதிக்க முயலும் எதையும் நிறுத்த மாட்டான். அவன் நிறுத்தவே மாட்டான். நோவாவின் காலத்தில் நடந்தது போல . எவ்வளவுதான் நோவா பிரசங்கித்து அவர்களை எச்சரித்த போதிலும், அதனால் சிறிது உபயோகமும் இல்லை. ஆகா பின்நாட்களில், அவன் தன்னை நரகத்துக்கு அனுப்பிக் கொள்ள, தன் சொந்த அப்பத்தை உண்டாக்க வேண்டியிருந்தது. அந்த சங்கிலியின் இணைப்பு அறுபட்டு, அது தன்னை நரகத்துக்கு அனுப்புவதற்காக அவன் தன் சொந்த அப்பத்தை உண்டாக்க வேண்டியிருந்தது. ஆகாயும், யேசபேலும் போல. ஆனால் காரியம் என்னவெனில், அவர்கள் பாவம் செய்வதாக நினைக்கவேயில்லை. அவர்கள் நன்மை செய்வதாகவே எண்ணியிருந்தனர். 122உங்களுக்குத் தெரியுமா, ''உங்களைக் கொலை செய்கிறவன் தான் தேவனுக்குத் தொண்டு செய்கிறவனென்று நினைக்குங் காலம் வரும்'' என்று இயேசு கூறினார். (யோவான்;16:2). என் புத்தகம் வெளிவரும் வரைக்கும் காத்திருங்கள். ரோமன் கத்தோலிக்க சபையையும், பிராடெஸ்டெண்டு சபைகளையும் இணைப்பது தவறு என்று கூறின சிலரை நோக்கி அன்றிரவு அவர்கள் சுட்டனர். என் நண்பனின் வீட்டுக்குள் மூன்று துப்பாக்கி வெடிகள் சென்றன. அது மயிரிழையில் குறி தவறினது. இந்த புத்தகம் வெளியாகும் வரை காத்திருங்கள். அவர்கள் பாவம் செய்வதாக எண்ணுவதில்லை, அவர்கள் நன்மை செய்வதாகவே எண்ணுகின்றனர். தேவனுக்கு தொண்டு செய்வதாக அவர்கள் நினைக்கின்றனர், அவர்கள் அறியாமல் செய்கின்றனர். சரியான காரியத்தை செய்வதாக நினைத்து யூதர்கள் இயேசுவை கொலை செய்தனர். ஏனெனில் அவர்களுடைய சபை உபதேசம் அவர் தவறென்று உரைத்தது. ஓ, அவர் கூறினார்... அவர்கள் எந்த அப்பத்தினால் பிழைக்க வேண்டுமென்று கருதப்பட்டனரோ, அந்த அப்பத்தை சிலுவையில் அறைந்தனர். 123ஆனால், ''அவர்களுடைய ஜீவனாக - நித்திய ஜீவனாக - அவரை ஏற்றுக் கொண்டு அவர் மூலம் பிழைத்தவர்கள் எத்தனை பேர்களோ, அத்தனை பேர்களும் அவருடைய பாகமாகி, தேவனுடைய பிள்ளைகளாகும்படி அவர்களுக்கு அதிகாரங் கொடுத்தார்.'' (யோவான்;1:12). அது சரியா? அது பேய்க் கொம்மட்டிக் காய்களைப் போல், வேத சாஸ்திரிகளின் பள்ளிகளிலிருந்து வந்தபானையில் சாவு (2.இரா;4:38-40). அவர்களுக்கு ஜீவ அப்பமாகிய இயேசு வேண்டாம். அவர் அவர்களுக்கு வேண்டாம். அவர்கள் அவரை சபைக்கு வெளியே தள்ளிவிட்டனர். அவர்கள் அப்படித்தான் செய்ய வேண்டும். அவர்கள் என்ன செய்தாலும் எனக்குக் கவலையில்லை. நீங்கள், ''சகோ. பிரான்ஹாமே, நீங்கள் அதை மாற்றி அமைக்கப் போகின்றீர்களா?'' என்று கேட்கலாம். இல்லை, ஐயா. நான் தெரிந்து கொண்டவர்களிடம் பேசிக் கொண்டிருக்கிறேன். அவர்கள் அவரை வெளியே தள்ளினர். ஏன்? அவர்கள் தங்கள் கூழ்ப் பானையை எடுத்து, அதனை உலகத்துடன், சில தத்துவங்களுடன் ஒன்றாக கலந்து, வேதசாஸ்திர பள்ளி கூழ்ப்பானையாக மாற்றினர். பானையிலுள்ள தோஷத்தைப் போக்க அவர்கள் எலியா தீர்க்கதரிசியின் மாவை ஏற்க மறுக்கின்றனர். அந்தக் காலத்தில் அவர்கள் அப்படி செய்தார்களா? எலியாவிடம் கொஞ்சம் மாவு இருந்தது. அந்த மாவு தான் கிறிஸ்துவாகிய போஜன பலி. அது ஒரே அளவாக அரைக்கப்பட்டிருந்தது. அதிலுள்ள ஒவ்வொரு பொடியும் ஒரே அளவாக அரைக்கப்பட வேண்டும். எலியா அதை பானையில் போட்ட போது, அது தோஷத்தை நீக்கி சாவை அகற்றினது. ஆனால் இன்றைக்கு அவர்கள் பானையில் சாவு உள்ளது. அவர்களுக்கு எலியாவின் மாவு, கிறிஸ்து, அப்பம், வார்த்தை வேண்டாம். ''வேண்டாம், ஐயா! அது மத பேதம்'' என்கின்றனர். அவர்கள் அதை ஏற்க மாட்டார்கள். நீங்கள் சென்று அதை புசியுங்கள். உலகம் உள்ளது எவ்வளவு நிச்சயமோ, அவ்வளவு - நிச்சயமாக மரிப்பீர்கள். பானையில் விஷம் உள்ளது. அவர்கள் தங்கள் வேத சாஸ்திர பானையில் இந்த மாவை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். இல்லை, ஐயா! அவர்கள் அதை செய்யவே மாட்டார்கள். உங்களை அவர்கள் வெளியே தள்ளி விடுவார்கள். உங்களுடன் அவர்கள் எவ்வித தொடர்பும் கொள்ளமாட்டார்கள். 124பெந்தெகொஸ்தே நாளில் உருவான இரண்டாம் ஏவாளாகிய அப்பதானியம் இரண்டாம் ஆதாமாகிய அப்பத்தைப் போல் ரோம ஆதிக்கத்தினால் உபத்திரவத்துக்குள்ளாகி இரத்த சாட்சியாக மரித்தது. ஆனால் அவளுடைய சகோதரி வேசியானாள் (அப்படித்தான் வேதம் கூறுகிறதா?). அது உண்மை. அவள் என்ன செய்தாள்? அவள் உலகத்துக்குள் சென்று பிள்ளைகளைப் பெற்றாள். அதற்கு ''ஆமென்'' என்று யார் கூற முடியும்? (சபையோர், ''ஆமென்'' என்கின்றனர் - ஆசி). வெளிப்படுத்தல் 17ம் அதிகாரம் ''வேசியும் அவளுடைய குமாரத்திகளும்.'' ஆண் அல்ல, பெண், சபைகள், ஸ்தாபனங்கள், அவளை வேசியாக்கியது எது? அவள் வார்த்தையைப் புறக்கணித்து ஸ்தாபனம் உண்டாக்கிக் கொண்டதால், அவள் வேசியாகி விட்டாள். அவளுடைய குமாரத்திகள் என்ன செய்தனர்? அவர்களும் வேசிகளே. அவர்களும் வார்த்தையைப் புறக்கணித்து, ஸ்தாபனம் உண்டாக்கிக் கொண்டனர். அவளுடைய பிள்ளைகள், குமாரத்திகள், சபைகள். அவர்களை பாருங்கள். 125இதை தீர்க்கதரிசனமாக உரைக்கிறேன். நீங்கள் புரிந்து கொள்வீர்களா? குடும்பத் தகராறு தீர்ந்துவிட்டது. அவர்கள் எல்லாரும் திரும்பி வந்து ஒன்றாக சேருகின்றனர். தாய் தன் பிள்ளைகளை சேர்த்துக் கொள்ளப் போகிறாள். எப்படியாயினும் அவர்கள் எல்லாரும் ஒன்றே. அவர்கள் ஒன்றாயிருக்க விரும்புகின்றனர். அதே நேரத்தில், சபையும், தேவனும் - சபையும் வார்த்தையும் - ஒன்றாக இணைய நேரமாகி விட்டது. இந்த சபைக்காகவே அவர் வருகிறார் - அப்படிப்பட்ட சபைகளின் ஐக்கியத்திற்காக அல்ல. இல்லை, ஐயா. ஒரு கோதுமை மணி. இப்பொழுது இயற்கையை கவனியுங்கள். இந்த கருத்துடன் நாம் முடிக்கப் போகின்றோம். இயற்கையை கவனியுங்கள். ஒரு மனிதன் கோதுமை விதைக்கிறான். அவர்கள் ஒரு புத்தகத்தை எழுதியுள்ளனர். நீங்கள் எல்லாரும் அதைப் படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். ஒருக்கால் வேதபண்டிதர்களாகிய உங்களில் சிலர் படித்திருப்பீர்கள். அது அமைதியான தேவன் (The Silent God) என்னும் தலைப்பு கொண்டது. புத்தக சாலைகளில் அது வாங்கக் கிடைக்கும்.... நாத்தீகனான ஒருவன், ''தேவன் இருப்பாரானால், இருளின் காலங்களில் சிறு பிள்ளைகள் தீயில் போடப்படுவதையும், நீண்ட தலைமயிர் கொண்டஸ்தீரீகள் தங்கள் தலைமயிர் தாரில் புதைக்கப்பட்டு சுட்டெரிக்கப்படுவதையும், அவர்கள் சிலுவையிலறையப்பட்ட இயேசுவின் சொரூபத்தை முத்தம் செய்ய மறுத்ததால் ஒவ்வொரு கையிலும் மாட்டைப் பூட்டி அவர்களை இரண்டாக கிழித்ததையும் பார்த்துக் கொண்டு அமைதியாக இருந்திருக்க முடியும் என்று நினைக்கிறீர்களா? சிறு பிள்ளைகள் சுட்டெரிக்கப்படுவதை அவர் பார்த்துக் கொண்டு சும்மா இருந்திருக்க முடியுமா?'' என்று அந்த புத்தகத்தில் கேட்டிருந்தான். பாருங்கள், அது மாம்ச சிந்தை. 126கோதுமை மணி நிலத்தடியில் செல்லும் போது, அது அங்கு அழுக வேண்டுமென்று உங்களுக்குத் தெரியுமா? அப்படித்தான் பெந்தெகொஸ்தே சபையும், மீண்டும் ஜீவனைக் கொண்டு வர, நிலத்தடியில் தங்கியிருந்து அழுக வேண்டியதாயிற்று. அது சரியா? (சபையோர் ''ஆமென்'' என்கின்றனர் - ஆசி). இப்பொழுது கவனியுங்கள், இதுவே முடிக்கப்போகும் இந்நேரத்தில், என் கருத்துக்கள். முடிக்கப்போகும் இந்நேரத்தில், நாம் இயற்கையை எடுத்துக்கொள்வோம். தேவன் இயற்கையுடன் இணையாக கிரியை செய்கிறார் என்று எத்தனை பேர் விசுவாசிக்கிறீர்கள்? (''ஆமென்''). பாருங்கள். அவர் உலகத்தை சிருஷ்டித்தார். அவர் மனிதனை மீட்க கையாளும் முறையையே உலகத்தை மீட்பதற்கும் கையாளுகிறார். மனிதன் விசுவாசிப்பது என்ன? அவன் விசுவாசிக்கிறான், அதன் பிறகு ஞானஸ்நானம் பெறுகிறான்; அதன் பிறகு இரத்தத்தினால் கழுவப்படுகிறான், பரிசுத்தமாக்கப்படுதல், அதுவே வெஸ்லியின் செய்தி; அதன் பிறகு அவன் பரிசுத்த ஆவி அக்கினியினால் நிறைக்கப்படுகிறான். அது உலகத்தை அவனிலிருந்து எடுத்துப்போடுகிறது, அவன் ஆவியினால் நிறையப்படுகிறான், அதுவே வார்த்தை. அதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? (சபையோர் ''ஆமென்'' என்கின்றனர் - ஆசி). இப்பொழுது என்னவென்று கவனியுங்கள். தேவன் உலகத்தையும் அதேவிதமாக மீட்கப்போகிறார். 127எத்தனை பேரிடம், ''மணவாளன் மற்றும் மணவாட்டிவின் எதிர்கால வீடு'' என்னும் ஒலி நாடா உள்ளது? பாருங்கள், அதில் இதைக் குறித்து நான் கூறியிருக்கிறேன். தேவன் அதை எனக்கு அளித்தார். அவர் எனக்கு அளிக்கும்போது, நான் உங்களுக்கு அளிக்கிறேன். பாருங்கள், முதலாவதாக, ஆதாம் வார்த்தையிலிருந்து விழுந்த காரணத்தால் இந்த உலகம் ஆக்கினைக்குள்ளாக்கப்பட்டது. நோவாவின் பிரசங்கம் நீதிமானாக்கப்படுதலைக் கொணர்ந்தது. தேவன் பூமியை தண்ணீரினால் ஞானஸ்நானம் பண்ணினார். அதன் பிறகு குமாரன் வந்து தமது இரத்தத்தை அதன் மேல் சிந்தி, அதை பரிசுத்தமாக்கி, அது தம்முடையதென்று உரிமை கோரினார். முடிவில் அது அக்கினியினால் சுத்திகரிக்கப்படும். அது எல்லா கிருமிகளையும் மற்றெல்லாவற்றையும் எரிக்கும். அது ஆயிரக்கணக்கான மைல்கள் உயரத்தில் ஆகாயத்தில் இருக்கும். அதன்பிறகு என்ன? ''பின்பு, நான் புதிய வானத்தையும், புதிய பூமியையும் கண்டேன்; முந்தின வானமும், முந்தின பூமியும் ஒழிந்து போயின. நான் புதிய எருசலேமாகிய பரிசுத்த நகரத்தைத் தேவனிடத்தினின்று பரலோகத்தை விட்டு இறங்கி வரக் கண்டேன்; அது தன் புருஷனுக்காக அலங்கரிக்கப்பட்ட மணவாட்டியைப் போல ஆயத்தமாக்கப்பட்டிருந்தது..''(வெளி;21,1-2). அப்பொழுது தேவனும் மனிதனும்.... 128இயேசுவின் விஷயத்திலும் அப்படியே நடந்தது, பாருங்கள், அவர் தண்ணீரினால் ஞானஸ்நானம் பெற்று, ஆயத்தங்களைச் செய்த போது, அவர் முதலாவதாக பிதாவினால் பரிசுத்தமாக்கப்பட்டார்; அவர் தம் கரங்களை உயர்த்தின போது, இதோ புறா இறங்கி வந்து ஆட்டுக்குட்டியானவரின் மேல் தங்கினது. புறாவை அங்கு வைத்த போது தேவன் என்ன செய்து கொண்டிருந்தார்? அந்த ஜீவனின் பாகத்தை அவர் உரிமை கோரினார். அது பூமியின் ஒருபாகமாக இருந்தது. இயேசு நம்மைப் போல் உணவு உண்டார் - இயற்கை உணவை. தேவன் அதை உரிமைகோரும் போது, எதுவுமே அதை தடுத்து நிறுத்த முடியாது. மரணம் அதை நிறுத்த முடியாது. அவர், ''இந்த ஆலயத்தை இடித்துப் போடுங்கள், இதை மறுபடியும் எழுப்புவேன்'' என்றார். மனிதனும், ஸ்திரீயும் தேவனிடம் முழுவதுமாக செல்லும் போது - ஏதோ ஒரு கவர்ச்சியினால் அல்லது உணர்ச்சி வசத்தினால் அல்ல - ஆனால் உண்மையில் வார்த்தையும் அவனும் ஒன்றாகும் போது, தேவன் அவனை இரட்சித்து, உலகத்தின் காரியங்களிலிருந்து அவனைப் பரிசுத்தமாக்கி, பரிசுத்த ஆவியின் அக்கினியினால் உலகத்தின் காரியங்கள் அனைத்தும் அவனை விட்டு எடுத்துப் போட்டு அவனைப் புதிதாக்கி, அவனுக்குள் வாசம் செய்து, தம்மைப் பிரதிபலிக்கிறார். அந்த பரிபூரண மனிதன் அல்லது ஸ்திரீ வார்த்தையினால் பிழைக்கிறார்கள். பாருங்கள், அதுதான் சுத்திகரிக்கப்பட்ட களிமண். அவர் பூமியையும் அதேவிதமாக மீட்டுக் கொள்வார். 129இப்பொழுது கவனியுங்கள், கோதுமை மணி நிலத்தில் விழுகிறது. இயேசுவே நிலத்தில் விழுந்த அந்த கோதுமை மணி. அவர் பரிபூரணமாக்கப்பட்ட பின்பு அவருக்குள் ஜீவன் இருந்தது. மோசே எழும்பவில்லை, ஆதாம் எழும்பவில்லை. மற்றவர் யாருமே எழும்பவில்லை. ஆனால் ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைத்து, எல்லா விதத்திலும் வார்த்தையைப் பிரதிபலித்த இந்த பரிபூரணமானவர்! எத்தனை பேர் அதற்கு ''ஆமென்'' என்று கூற முடியும்? (சபையோர் ''ஆமென்'' என்கின்றனர் - ஆசி). அவர் ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைத்தார். என்ன நடந்தது? அவர்கள் அவரைக் கல்லறையில் வைத்தார்கள். ஆனால் மூன்றே நாட்களில் அவர் அதை உடைத்து வெளியே வந்தார். பாருங்கள்? இப்பொழுது சபையானது எடுத்துக் கொள்ளப்படுதலுக்கென்று அந்த பரிபூரணத்தை அடைந்து கொண்டிருக்கிறது. ரோமாபுரியிலிருந்த நிசாயாவில் முதலாம் ஸ்தாபனம் உண்டாக்கப்பட்ட போது, சபை நிலத்தில் விழுந்தது. எத்தனை பேர் அது சரியென்று ஆமோதித்து ''ஆமென்'' என்று கூறமுடியும்? (சபையோர் ''ஆமென்'' என்கின்றனர் - ஆசி). அவள் என்ன செய்தாள்? அவள் தற்காலிக உயிர்த்தெழுதலில் வெளிவந்தாள். அவர் நோவாவின் மூலம் முயன்றதையே லூத்தரின் மூலம் முயன்றார். ஆனால் அவர் என்ன செய்தார்? அவர் வார்த்தையில் தவறிப் போய், ஸ்தாபனம் உண்டாக்கிக் கொண்டார். அது என்ன செய்தது? 130அது மேலே வந்து கொண்டிருக்கும் கோதுமை மணியைப் போன்றது. கோதுமை மணி மேலே வரும்போது, முதலில் வருவது என்ன? இரு சிறு முளைகள். இப்பொழுது கூர்ந்து கவனியுங்கள். இயற்கையில் என்ன வருகிறது? நாம் இயற்கையையும், ஆவிக்குரியதையும் ஒப்பிட்டுப் பார்க்கப் போகிறோம் - இயற்கை அப்பத்தை ஆவிக்குரிய அப்பத்துடன். என்ன நடக்கிறது? ''இந்த மனிதன் எப்படி அப்பமாக இருக்க முடியும்?'' கவனியுங்கள். சபை மேலே வந்தபோது, அது ஒரு சிறு துளிராக இருந்தது, காண்பதற்கு அது நிலத்தடியில் சென்ற கோதுமை மணியைப் போலவே இல்லை. ஆனால் அது ஜீவனைச் சுமக்கும் ஒன்று. பாருங்கள்? என்ன நடக்கிறது. பண்ணையாளர், ''ஓ, எனக்கு நல்ல கோதுமை பயிர் கிடைத்துள்ளது'' என்கிறார். ஆனால் அவருக்கு இன்னும் கிடைக்கவில்லை. அவர் மறைவாக (potentially) அதைப் பெற்றிருக்கிறார், என்ன நடந்தது? அடுத்ததாக சுவிங்கிலி தோன்றினார். அது லூத்தருக்குப் பின்பு உண்டான மற்றொரு அசைவு. அப்பொழுதும் அது கோதுமை அல்ல. அது ஒரு முளை கதிர். தண்டு கால்வின் போன்ற அநேக கதிர்களைத் தோன்றச் செய்தது. முடிவில் ஆங்கிலிகன் சபை எழும்பினது - எல்லாம் சதிர்கள். பாருங்கள், எல்லாம் ஒரே போல், அதேவிதமாக. 131பிறகு என்ன நடந்தது? எல்லாமே மாறுகின்றன. அடுத்தபடியாக வருவது பட்டுக் குஞ்சம் (tassel). நீங்கள் அதைப் பட்டுக்குஞ்சம் என்றழைக்கலாம். அதில் என்ன தொங்கிக் கொண்டிருக்கிறதென்று பாருங்கள், சிறு மகரந்தப் பொடிகள். அது கதிரைக் காட்டிலும், நிலத்தடியில் சென்ற மூல கோதுமை மணியைப் போல் சற்று அதிகமாக தோற்றமளிக்கிறது. அது சரியா? வெஸ்லியின் செய்தி லூத்தரின் செய்தியைக் காட்டிலும் வேதத்துக்கு நெருங்கியுள்ளது. அது உங்களுக்குத் தெரியும். அது சரியா? இந்த சிறு பட்டுக்குஞ்சங்கள் எல்லாம் யார்? வெஸ்லியின் மெதோடிஸ்டுகள், நசரீன்கள், யாத்திரீக பரிசுத்தர், ஐக்கிய சகோதரர்கள். இவர்கள் யாவரும் பரிசுத்த மாக்கப்படுதலின் கீழ். அதிலிருந்து என்ன தோன்றினது? முடிவில் அது என்ன செய்தது? ஸ்தாபனம் உண்டாக்கிக் கொண்டு மரித்து விட்டது. அதிலிருத்து தோன்றினது பெந்தெகொஸ்தேயினர். நீங்கள், ''ஓ சகோதரனே'' எனலாம். இதை பயபக்தியுடன் தெய்வீக அன்புடன் கூறுகிறேன். உங்களிடம் நான் தொடக்கத்தில் கூறின சர்வ வியாபியான அந்த மகத்தான பிதா இங்கு பிரசன்னராயிருக்கிறார். இதை நான் தப்பெண்ணம் கொண்டு கூறினால், அவர் என்னை நியாயந்தீர்ப்பார். நான் உண்மையைக் கூறினால், அவர் என்னை ஆசிர்வதிப்பார். நீங்கள் ஜீவனுக்கு நியமிக்கப்பட்டிருந்தால், அதை நீங்கள் காணும்படி செய்வார். 132முதல் சிறு கோதுமை மணி தண்டிலிருந்து தோன்றும் போது, காண்பதற்கு அது கோதுமை மணியைப் போலவே உள்ளது. அது சரியா? ஆனால் அது என்ன? அது கோதுமை மணி அல்ல. அது தான் மத்தேயு;24:24. ''மிகவும் நெருங்கியிருந்து கூடுமானால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கும்.'' கவனியுங்கள், காண்பதற்கு அது கோதுமை மணியைப் போலவே உள்ளது. நீங்கள் அதை பிடுங்கி உட்கார்ந்து, அணுதரிசினியை (microscope) கொண்டு ஆராய்ந்து பார்த்தால், அது கோதுமை மணியின் மேலுள்ள பதர் மாத்திரமே. அது கோதுமை மணியைப் பாதுகாக்கிறது, ஆனால் காண்பதற்கு அது கோதுமை மணியைப் போலவே உள்ளது. அது உண்மையென்று எத்தனை பேருக்குத் தெரியும், கைகளையுயர்த்துங்கள்? நிச்சயமாக. ஆனால் அது பதர். பெந்தெகொஸ்தே சகோதரரே, என்னைத் தவறாகப் புரிந்து கொள்ளாதீர்கள். ஆனால் இதுவே உண்மை. நீங்கள் இயற்கையை எதிர்க்க முடியாது. இயற்கை எல்லாவற்றிலும் தன் சிருஷ்டிகரான தேவனை வெளிப்படுத்துகிறது. 133இப்பொழுது பதரைப் பாருங்கள். காண்பதற்கு.... அவர்கள் என்ன செய்தனர்? அவர்கள் அந்நிய பாஷைகள் பேசினர். பெந்தெகொஸ்தே நாளில் அவர்கள் எப்படி நடந்து கொண்டார்களோ அப்படியே இவர்களும் நடந்து கொண்டனர். ஆனால் நீங்கள் வெட்டி, அதை பார்ப்பீர்களானால், அது பதர்கள் கொண்டதாயுள்ளது. ஒரு நல்ல பூதக் கண்ணாடியைக் கொண்டு அதை பரிசோதித்து பார்த்தால், ஒரு சிறு மணி வளர்ந்து வருவதைக் காண்பீர்கள். அது தான் உண்மையானது. இது அதை சுமப்பது. ஏன்? கோதுமை மணியைப் பாதுகாக்க அது அங்கு இருக்க வேண்டும். அவை இசைவாக இயங்குகின்றன. அது கோதுமை மணியைப் பாதுகாக்க வேண்டும். அந்த கோதுமை மணி நிலத்தடியிலிருந்து லூத்தரன்களின் மூலமாகவும் அவர்களுடைய சபைகளின் மூலமாகவும், வெஸ்லியின் மூலமாக பட்டுக் குஞ்சத்தை அடைந்து இப்பொழுது பதரை அடைந்துள்ளது. பதர் காண்பதற்கு உண்மையானதைப் போல் உள்ளது. ''கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் அது வஞ்சிக்கும்'' என்று இயேசு கூறினதில் வியப்பொன்றுமில்லை. அது காண்பதற்கு கோதுமை மணியைப் போலவே இருந்து, கோதுமை மணி இருக்க வேண்டிய இடத்தில் உள்ளது. ஆனால் என்ன நடந்தது? அதற்கு முன்பிருந்தவர்கள் செய்ததையே அதுவும் செய்தது; அது ஸ்தாபனம் உண்டாக்கிக் கொண்டது. அது என்னவாயிருந்தது? கோதுமை மணியை சுமக்கும் கருவியாக. 134நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்நாட்களில், எந்த எழுப்புதலுமே மூன்று ஆண்டுகள் வரைக்குமே நீடிக்கின்றது என்று சரித்திரக்காரர் எவரும் அறிவர். அதன் பிறகு அதிலிருந்து ஒரு ஸ்தாபனம் தோன்றிவிடுகிறது. ஆனால் சகோதரனே, சகோதரியே, நான் வாழ்ந்து வரும் இந்த மகத்தான பதினைந்து ஆண்டு எழுப்புதலில் - நான் உங்களுடன் வாழ சிலாக்கியம் பெற்ற இக்காலத்தில் - இதிலிருந்து ஒரு ஸ்தாபனமும் எழும்பவில்லை. இனிமேல் ஸ்தாபனங்கள் கிடையாது, அவை இருக்காது. பெந்தெகொஸ்தேதான் கடைசி ஸ்தாபனம். இதை பாதுகாக்க பெந்தெகொஸ்தே இருக்க வேண்டியது அவசியம். இதை விசுவாசிக்க ஒரு பெந்தெகொஸ்தேகாரன் இல்லாமல் போயிருந்தால், இப்படிப்பட்ட ஒரு செய்தியுடன் நாம் எங்கு சென்றிருப்போம்? 1933ம் ஆண்டில் ஓஹையோ நதியில் நடந்த சம்பவத்திற்கு மீண்டும் செல்லுங்கள். பாருங்கள்? என்னை மன்னியுங்கள், நீங்கள் சத்தியத்தை அறிய வேண்டுமென்று விரும்புகிறேன். எனக்கு இன்னும் அதிக காலம் இல்லை, அது உங்களுக்கு தெரியும். எனக்கு ஐம்பத்தைந்து வயதாகிறது. ஆனால், நான் இவ்வுலகை விட்டு போய்விட்ட பின்பும், இந்த ஒலி நாடாக்கள் நிலைத்திருக்கும். அது உண்மையா இல்லையா, நான் உண்மையான ஊழியக்காரனா அல்லது கள்ளத்தீர்க்கதரிசியா என்பதைக் கண்டு கொள்வீர்கள். நான் உரைத்தது ஒன்றும் இதுவரை நிறைவேறாமல் இருந்ததில்லை, ஆகவே இதுவும் நிறைவேறும். 135அது சுமக்கும் ஒரு கருவி. அது அப்படித்தான் இருக்க வேண்டும். ஆனால் கோதுமை வளரத் தொடங்கும் போது; அக்காலத்து சபையும் முதலில் இயேசுவை சுமக்கும் ஒன்றாக அமைந்திருந்தது. ஆனால் அவர் தேவனுடைய சத்தியத்தை அவர்களுக்கு எடுத்துரைத்த போது, அவர்கள் அவரை விட்டுப் பிரிந்து சென்றனர். இப்பொழுது என்ன நடக்கிறது? ஒத்துழைப்பு இல்லை. ஏன்? அது அப்படித்தான் இருக்க வேண்டும். கோதுமை சூரியனுக்கு (Sun) முன்பாக கிடக்க வேண்டியது அவசியம் போல, ஆவிக்குரிய கோதுமையும் குமாரனுக்கு (son) முன்பாக கிடந்து பொன் நிறமான வார்த்தையின் மணியாக ஆக வேண்டும், பாருங்கள், வார்த்தையாக ஆகி, தேவன் மாமிசமாகி, உறுதிபடுத்தப்படுதல்.... ''என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான்.'' (யோவான்;14:12). வார்த்தையினால் பிழைக்கும் சபையானது - ஸ்தாபனத்தின் மூலம் அல்ல - ஆனால் வார்த்தையாகிய குமாரனின் சமுகத்தில்; அது என்னவாகிறது? பெந்தெகொஸ்தே நாளில் நிலத்தடியில் சென்ற அதே வார்த்தையாக. 136கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வருவதற்கு முன்பு இது நடக்குமென்று மல்கியா 4 உரைக்கவில்லையா? அது எத்தனை பேருக்குத் தெரியும்? ''அவர் பிள்ளைகளுடைய இருதயங்களை பிதாக்களிடத்திற்குத் திருப்புவார்.'' அது சரியா? மூல பெந்தெகொஸ்தே பிதாக்களின் விசுவாசத்திற்கு.'' அது லூக்கா;17:20 என்று நினைக்கிறேன் (லூக்கா;17:30 - தமிழாக்கியோன்), இயேசு,''மனுஷகுமாரன் வெளிப்படும் அந்த நாளில்'' என்று கூறியுள்ளார் - மனுஷன் அல்ல, “மனுஷகுமாரன்.'' ஸ்தாபனம் அல்ல, ''மனுஷகுமாரன்''. வார்த்தை மறுபடியுமாக ஜனங்களின் நடுவில் வாசம்பண்ணுதல் . பாருங்கள். வார்த்தையே உங்களில் மாம்சமாகிறது. நீங்கள் இந்த நேரத்தின், செய்தியின், பிரதிபலிப்பாக விளங்குகிறீர்கள். பாருங்கள், நீங்கள் மறுபடியும் இயேசு கிறிஸ்துவுக்குள்ளிருந்த ஜீவனைக் கொண்டு பிழைக்கிறீர்கள். நீங்கள் குமாரனின் சமூகத்தில் இருக்கிறீர்கள். அப்பொழுது... அதற்கு என்ன நடக்கிறது? சபைக்கு என்ன நடக்கிறது? கவனியுங்கள், முடிவில் கோதுமை தன்னை வெளிப்படுத்தத் துவங்கும் போது, பதர் அதிலிருந்து தன்னை விலக்கிக் கொள்கிறது. என்ன நடந்தது? பதரிலிருந்த ஜீவன் கோதுமைக்குள் சென்று விட்டது. ஜீவன் மாறுவதில்லை, சுமப்பவை தான் மாறுகின்றன. அவை ஸ்தாபனம் உண்டாக்கிக் கொள்கின்றன; பாருங்கள், கதிர்கள், பட்டுக் குஞ்சம், பதர் போன்றவை. ஆனால் கோதுமை மாற முடியாது. அவர் வார்த்தையிலிருந்தது போல, முதலாம் சபை ஆவியில் நிறைந்து வார்த்தையிவிருந்து கொண்டு, வார்த்தையினால் போஷிக்கப்பட்டது போல - ஸ்தாபனத்தினால் போஷிக்கப்படுவதல்ல, வார்த்தையினால் போஷிக்கட்படுதல் - இதுவும் முற்றிலும் வார்த்தையிலுள்ள ஊழியமாகத் திகழும். 137இப்பொழுது, இயற்கை உள்ளது, மற்றும் தேவனுடைய வார்த்தை உள்ளது. அவரே அந்த அப்பம். ''மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்.'' முடிக்கப்போகும் இத்தருணத்தில், ஜெபத்துக்கு முன்பு. இங்கு கவனியுங்கள். நான் கூற நினைத்தது இதுவே. பதர் கோதுமையிலிருந்து விலக வேண்டும். அது தேவனுடைய தீர்மானமாய் உள்ளது. எத்தனை பேர் ''ஆமென்'' என்று கூறுவீர்கள்? (சபையோர் ''ஆமென்'' என்கின்றனர் - ஆசி). கோதுமை முதிர்வடைந்து கொண்டு வருவதால் பதர் அதிலிருந்து விலக வேண்டும். கோதுமை வெளியே தோன்றுகிறது. பதர் இனி அங்கு இருக்க முடியாது. அது ஜீவனை சுமந்த ஒரு கருவி மாத்திரமே. அதிலிருந்த ஜீவன் கோதுமைக்குள் சென்று விட்டது. அதுதான் காரணம். கவனியுங்கள் நண்பர்களே, நாம் எந்த காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்? நமக்கு பதினைந்து ஆண்டுகளாக எழுப்புதல் இருந்து வந்துள்ளது. எத்தனை பேர் அதற்கு ''ஆமென்'' என்று கூற முடியும்? (சபையோர் ''ஆமென்'' என்கின்றனர் - ஆசி). அதிலிருந்து எந்த ஸ்தாபனம் எழும்பினது. எதுவுமே இல்லை. அவர்கள் நான் ஸ்தாபனம் உண்டாக்க வேண்டுமென்று முனைந்தனர். ''சகோ. பிரான்ஹாமே, உங்கள் ஊழியத்தை ஸ்தாபனமாக்கிக் கொள்வீர்களா?'' என்று கேட்டனர். நான் அல்ல, என்னைக் குறித்து நான் பேசவில்லை, இக்காலத்தின், இந்நேரத்தின் செய்தியைக் குறித்தே நான் பேசுகிறேன். 138அவர்கள் கனடாவுக்குச் சென்று பின்மாரி சபையைச் சேர்ந்த சில சகோதரர்களை பெற்று நடத்தினர். அது அங்கேயே மரித்தது. சகோதரர்களே, உங்களுக்கு பின்மாரி சபை ஞாபகமுள்ளதா? அது எங்கே போய் விட்டது? மற்றவைகளும் எங்கு சென்று விட்டன? ஸதாபனங்களுக்கு அதிலிருந்து என்ன கிடைத்தது? மனம் மாறின கோடிக்கணக்கானவர். அவர்களை இவர்கள் தங்கள் கோட்பாட்டுகளுக்கு அடிமைகளாக்கி, தாங்கள் ஐசுவரியவான்களாகி, கோடிக்கணக்கான டாலர்கள் செலவில் கட்டிடங்களைக் கட்டி, ''கர்த்தர் வருகிறார்'' என்று அதே சமயத்தில் அறிவித்து, போதகர்களை வேதாமப் பள்ளிகளுக்கு அனுப்பி மனிதரால் உண்டாக்கப்பட்ட வேத சாஸ்திரங்களை அங்கு பயிலச் செய்கின்றனர். லூத்தரன்கள், வெஸ்லியன்கள், இன்னும் மற்றவர்களும் அதையே செய்கின்றனர். அது பதராகிவிடுகிறது. ஆனால், கர்த்தருக்கு ஸ்தோத்திரம், கோதுமை மணி சென்று கொண்டிருக்கிறது. அது வார்த்தையின்படி நாம் வாழும் இக்காலத்தில் உண்மையாயுள்ளது, இயற்கையும் அது உண்மையென்று உறுதிப்படுத்துகிறது. அது எல்லாவிதத்திலும் நிரூபிக்கப்பட்டுவிட்டது. அப்படியானால் இன்னும் நமக்கு எவ்வளவு நேரம் உள்ளது? உங்களுக்குத் தெரியுமா? உலக சபைகளின் சங்கம் வருவதாக கேள்விப்படுகிறேன். அது அதை பிரிக்கும். அது என்ன செய்யும்? தண்டிலிருந்து அதை வெட்டி எடுக்கும். ஆனால் அவளுக்கோ, அவளைக் கொண்டு செல்ல ஒரு 'எலிவேடர்' (elevator) காத்திருக்கிறது. அவள் ஒரு காலையில் வீடு செல்வாள். ஓ ஆம், புரிந்து கொண்டவர்கள் ''ஆமென்'' என்று சொல்லுங்கள். (சபையோர் ''ஆமென்'' என்கின்றனர் - ஆசி). 139உலகம் அதை நம்பவில்லையென்று எனக்குத் தெரியும். அவர்களால் அதை நம்ப முடியாது... அவர்களுக்காக நான் வருந்துகிறேன். ஏனெனில், ''என் பிதா ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான். பிதாவானவர் எனக்குக் கொடுக்கிற யாவும் என்னிடத்தில் வரும்“ (யோவான்;6:44,37). அவனுடைய பெயர் ஜீவ புஸ்தகத்தில் எழுதப்பட்டிருக்குமானால், அவன் வார்த்தையை அடையாளம் கண்டு கொள்வான். அவன் கண்டுகொண்டே ஆக வேண்டும். ஏனெனில் நீண்ட காலமாக அது உண்மை என்று உறுதிபடுத்தப்பட்டு வருகிறது. நமக்கு இனிமேல் வேறு ஸ்தாபனங்கள் இருக்காது. ஆனால் எல்லா ஸ்தாபனங்களும் ஒன்றாக இணையும். அவள் எதற்கு உபயோகம்? அவர்கள் வைக்கோலை என்ன செய்கின்றனர்? சுட்டெரிக்கின்றனர். ''தூதர்கள் வந்து கோதுமையை களஞ்சியத்தில் சேர்ப்பார்கள்'' என்று இயேசு கூறினார். பிறகு என்ன நடக்கிறது? தண்டுகள், முட்கள், பதர் ஆகியவை அவியாத அக்கினியிலே சுட்டெரிக்கப்படும். பாருங்கள்? முதலில் என்ன செய்யப்பட வேண்டும் ? தூதர்கள் முதலில் சென்று களைகளைக் கட்டுகின்றனர். அது சரியா? பாருங்கள், அவர்கள் தங்களை ஒரு பெரிய ஸ்தாபனமாக ஒன்றாக கட்டிக்கொள்கின்றனர். இனி வேறு ஸ்தாபனங்கள் கிடையாது. 140கோதுமை இங்குள்ளது. தேவனுக்கு ஸ்தோத்திரம், கோதுமை இங்குள்ளது. கிறிஸ்து இங்கு இருக்கிறார். அவர் தமது வார்த்தை உண்மையென்று நிரூபிக்கிறார். கோதுமை இங்குள்ளது. அது இப்பொழுது முதிர்வடைந்து வருகிறது. அது குமாரனின் சமுகத்தில் கிடக்கிறது. யாரும் அதை தொடக்கூடாது. ''பதர் அனைத்தும், அதனுடன் நாங்கள் எவ்வித தொடர்பும் கொள்ளமாட்டோம்'' என்று கூறிவிட்டு தங்களை விலக்கிக் கொள்கின்றன. நீங்கள் அப்படித்தான் செய்ய வேண்டும். ஓ சகோதரனே, கோதுமைக்குள் புகுந்து கொள். உனக்குள் இருக்கும் ஜீவன் கோதுமைக்குள் வரட்டும். அப்படி செய்வாயா? தேவனை விசுவாசி..... தேவனுடன் நிலைத்திரு நீ எடுத்துக் கொள்ளப்படுதலில் செல்வாய் என்னும் நிச்சயம் உனக்குள்ளதா? வேறு யாராகிலும் கூறுவார்களானால்.... எனக்குக் கவலையில்லை. 141ஒரு சமயம் ஒரு கதையைப் படிக்க நேர்ந்தது. மருத்துவர் ஒருவர் இருந்தார். அவர் மிகவும் நல்லவர். அவர் எளிய மக்களிடம் அன்பு கொண்டிருந்தார். ஒவ்வொரு முறையும் எளியவர்கள் தங்கள் கடனைச் செலுத்த முடியாத போது, அவர் என்ன செய்தார் தெரியுமா? அவர் ''நீ மன்னிக்கப்பட்டாய்'' என்று கூறி சிகப்பு மையினால் கையொப்பமிடுவது வழக்கம். ஒருநாள் மருத்துவர் மரித்துப் போனார். அவருடைய மனைவி மிகவும் கர்வம் பிடித்தவள். அவள், இன்றைய சபையைப் போல், வித்தியாசமானவள். அவள் சென்று கடன் வாங்கினவர் அனைவரையும் துன்புறுத்தி, அவர்கள் மேல் வழக்கு தொடர்ந்து, அவர்களை நீதிமன்றத்தில் நிறுத்தி, ''நீங்கள் எப்படியும் கடனை செலுத்தித் தீர்க்க வேண்டும்'' என்றாள். ஆனால் நீதிபதி அந்த ரசீதுகளைப் பார்வையிட்டு ''அம்மணி இங்கு வாருங்கள், சிகப்பு மையினால் போடப்பட்ட கையொப்பம் உங்கள் கணவருடையது தானே'' என்று கேட்டார். அவள், ''ஆம் ஐயா'' என்று விடையளித்தாள். அவர், ''அப்படியானால் இந்த தேசத்திலுள்ள. எந்த நீதிமன்றமும் இந்த வழக்கைத் தொடர முடியாது. அவர்கள் சுயாதீனர்'' என்றார். அவர்கள் என்ன வேண்டுமானாலும் கூறட்டும். அவர் தமது வார்த்தையை தமது சொந்த இரத்தத்தினால் கையொப்பமிட்டார். சகோதரனே, எதுவும் அதை நம்மிடத்திலிருந்து எடுத்துக் கொள்ள முடியாது. நாம் சுயாதீனர். நாம் ஜெபிப்போம். [தீர்க்கதரிசனம் உரைக்கப்படுகிறது]: [ஓ, என் ஜனங்களே நான் உங்களுக்கு கூறுவதாவது, எவ்வளவு நாட்களாக… (வெற்றிடம்) அநேகமுறை நான் உங்களிடத்தில் வந்திருக்கிறேன். எனவே நான் உங்களுக்கு கூறுகிறேன், ''என்னுடைய தீர்க்கதரிசிகளை சமதானமான காலங்களில் நான் அனுப்புவதில்லை, ஆனால் தொல்லையான காலங்களிலேயே நான் அவர்களை அனுப்புகிறேன். ஆம், அப்போது அவர்கள் என்னுடைய ஜனங்களை என்னிடத்தில் திருப்புவார்கள். ஓ, என் ஜனங்களே, எவ்வளவு காலம் தான் நீங்கள் ''ஆமென்'' மட்டும் செல்லிக் கொண்டிருப்பீர்கள். எவ்வளவு காலம்தான் நீங்கள் கேட்கிறவர்களாய் இருந்து, என்னுடைய வார்த்தையை கடைபிடிக்காதவர்களாய் இருப்பிர்கள்?என்று கர்த்தர் உரைக்கிறார். என் ஜனங்களே இன்னும் எவ்வளவு காலம்? எவ்வளவு காலம் தான் நீங்கள் என்னுடைய வார்த்தையை கேட்டு, அதை பெற்றுக் கொண்டு, ஆம் உங்கள் இருதயத்தில் பெற்றுக் கொண்டு, அதின் ஒரு பாகமாக நீங்கள் மாறுவீர்கள்? ஆம், என் ஜனங்களே, அது உங்களின் ஒரு பாகமாக மாறும் வரைக்கும்.''] ஆமென். 142உங்கள் தலைகளை வணங்குங்கள். ராஜாவின் நாட்களில் ஒருவன் எழுந்து நின்று, சத்துருவை எங்கு சந்தித்து நிர்மூலமாக்க வேண்டுமென்று தீர்க்கதரிசனம் உரைத்தான் அதை நான் சரியாக விளங்கிக் கொண்டிருந்தால். உங்கள் சத்துருவை சந்திக்க ஒரு இடம் உள்ளது. அதுதான் வார்த்தை. அங்கு தான் அவனும் உங்களை சந்திக்க முயல்கிறான். கர்த்தர் உரைக்கிறதாவது என்பதுடன் அவனை அங்கு சந்தியுங்கள். இங்குள்ள எத்தனை பேர் உங்கள் தலைகள் வணங்கின நிலையில் (இப்பொழுது பகல் நெருங்கிவிட்டது. பீட அழைப்பு கொடுக்க எனக்கு நேரமில்லை); உங்கள் கைகளையுயர்த்தி, உங்கள் கண்களை மூடி, ''நான் அவருடைய ஒரு பாகமாக இருக்க விரும்புகிறேன். அவருடனும் அவருடைய வார்த்தையுடனும் என்னை இணைத்துக் கொள்ள விரும்புகிறேன். என்ன நேர்ந்தாலும், உலகம் என்ன கூறினாலும், நான் அவருடைய ஒரு பாகமாக இருக்க விரும்புகிறேன்'' என்று கூற விரும்புகிறீர்கள்? உங்கள் கைகளையுயர்த்தி, ''நான் அப்படி இருக்க விரும்புகிறேன்'' என்று கூறுங்கள். தேவன் உங்களை ஆசிர்வதிப்பாராக. நூறு சதவிகிதம் என்று நினைக்கிறேன். 143நாம் தலைகள் வணங்கியிருக்கும் இந்நேரத்தில், நாம் யோசித்துக் கொண்டிருக்கும் போது, நாம் அமைதியாக இந்த பாடலை மௌனமாக இசைப்போம். எல்லோரும் ஜெபித்துக் கொண்டிருங்கள். நம் இருதயங்களை கிறிஸ்தவ அன்பினால் பிணைக்கும், (அது வார்த்தை) அந்த பிணைப்பு ஆசிர்வதிக்கப்படுவதாக, ஒரே மனதுள்ளவர்களின் ஐக்கியம். மேற்கூறியது போன்றிருக்கும். (''நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறது போல, நீங்களும் அவரில் ஒன்றாயிருக்கிறீர்கள்'') நாம் பிரிந்து செல்லும்போது, நமக்கு உள்ளில் வேதனை தருகிறது. ஆனால், நாம் அப்பொழுதும் இருதயத்தில், ஒன்றாக இணைக்கப்பட்டு, மறுபடியும் சந்திப்போமென நம்புகிறோம். கர்த்தருக்கு சித்தமானால், அடுத்த சனி காலை அரிசோனாவிலுள்ள ஃபிளாக்ஸ்டாஃப்பில், உங்களை சந்திப்பேன் என்று நம்புகிறேன். அவரை நீங்கள் நேசிக்கிறீர்களா? (சபையோர் ''ஆமென்'' என்கின்றனர் - ஆசி). 144இப்பொழுது இத்துடன் விட்டுவிடப் போகிறேன், பாருங்கள். விசுவாசித்தவர்கள் அத்தனைபேரும், ''வசனத்தை ஏற்றுக்கொண்ட அத்தனை பேரும்'' என்று வேதம் உரைக்கிறது. பாருங்கள்? யார் ஏற்றுக்கொள்வார்கள், யார் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்று என்னால் கூற முடியாது. அது உங்களைப் பொறுத்தது. ஆனால் நீங்கள் ஏதோ ஒரு கோட்பாட்டைப் பின்பற்றுவீர்களானால்; மெதோடிஸ்டுகள், பாப்டிஸ்டுகள், பெந்தெகொஸ்தேயினராகிய உங்களில் சிலர் வார்த்தைக்கு முரணான சிலவற்றை பின்பற்றுவீர்களானால், என் அருமையானவர்களே, தயவு கூர்ந்து இன்றே அதை விட்டு விலகுங்கள். அப்படி செய்வீர்களா? அதிலிருந்து விலகி, அவரிடம் திரும்புங்கள். கிறிஸ்துவின் ஐக்கியத்திலிருந்து ஒரு வார்த்தை கூட உங்களை பிரித்து விடாதபடிக்கு கவனமாயிருங்கள். அவருடைய ஆவி தாமே இதை அருளுவாராக. 145பிதாவே, தேவனே, இந்த மக்கள் நீண்ட நேரம் இங்கு உட்கார்ந்து கொண்டிருந்தனர். பவுல் இதேவிதமாக சுவிசேஷத்தைப் பிரசங்கித்தது என் நினைவுக்கு வருகிறது. அவர்கள் இரவு முழுவதும் உட்கார்ந்து கொண்டு அவன் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தனர். அப்பொழுது ஒரு வாலிபன் ஜன்னல் வழியாக கீழே விழுந்து மரித்துப் போனான். ''பவுல் சென்று அந்த வாலிபனின் மேல் தன்னைக் கிடத்தி அவனுக்கு உயிர் திரும்ப வந்துவிட்டது'' என்றான். இப்பொழுது பிதாவே, இங்கு வியாதியஸ்தரும் அவதியுறுவோரும் உள்ளனர். தங்கள் சரீரங்களுக்கு ஜெபம் தேவையானவர் இங்குள்ளனர். அன்புள்ள தேவனே, சுகம் பெற கூட்டம் முடியும் வரை காத்திருக்க வேண்டாமென்று ஜெபிக்கிறேன். அவர்கள் கூட்டம் முடியும் வரை காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. வார்த்தை, அதாவது கிறிஸ்து, எப்பொழுதும் இங்கிருக்கிறார். இவர்கள் ஒவ்வொருவரையும் சுகப்படுத்த வேண்டுமென்று ஜெபிக்கிறேன். தேவனே, இவர்கள் ஒவ்வொருவரும் பரிபூரண சுகம் பெறுவார்களாக. இதை அருளுவீராக. இவர்களை ஆசீர்வதியும், இவர்களுடைய முயற்சிகளை ஆசீர்வதிப்பாராக. கர்த்தாவே, இவர்கள் விசுவாசிக்காவிட்டால், இவ்வளவு நேரமாக இங்கு உட்கார்ந்து கொண்டு கேட்டிருக்க மாட்டார்கள். இப்பொழுது கர்த்தாவே, அவர்கள் கரங்களை உயர்த்தினர், அவர்கள் அதை விசுவாசிக்கின்றனர். இங்குள்ள ஒவ்வொரு போதகரும், சபையோர் ஒவ்வொருவரும் இதை தங்கள் இருதயங்களில் ஏற்றுக் கொள்வார்களாக. பாவி கிறிஸ்துவை ஏற்றுக்கொள்வானாக, பின்வாங்கிப் போனவன் திரும்பி வருவானாக. பிதாவே, இதை அருளும். இந்த ஆசிர்வாதங்களை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் கேட்கிறேன். ஆமென். நான் அவரை நேசிக்கிறேன், நான் அவரை நேசிக்கிறேன். (அநேக ஆண்டுகளுக்கு முன்பே என் பெயரை அங்கு எழுதிவிட்டார்). முந்தி அவர் என்னை நேசித்ததால்; சம்பாதித்தார் என் இரட்சிப்பை, கல்வாரி மரத்தில். நீங்கள் அவரை நேசிக்கிறீர்களா? நாம் மறுபடியுமாக அதை பாடும் போது, மேஜையின் மற்றபாகத்துக்கு உங்கள் கைகளை நீட்டி அங்குள்ள யாராகிலும் ஒருவருடன் கைகுலுக்கி, ''அருமை யாத்திரீகனே, இன்று காலை இங்கு உட்கார்ந்து கொண்டிருந்ததற்காக மகிழ்வுறுகிறேன். நான் கிறிஸ்தவை விசுவாசிக்கிறேன். நீங்களும் விசுவாசிக்கிறீர்கள் அல்லவா?'' என்று கேளுங்கள். அப்படி ஏதாவதொன்று நாம் மறுபடியுமாக பாடும் போது. நான் அவரை நேசிக்கிறேன் நான் அவரை நேசிக்கிறேன். முந்தி அவர் என்னை நேசித்ததால்; சம்பாதித்தார் என் இரட்சிப்பை, கல்வாரி மரத்தில். 146இப்பொழுது முதல் நாம் உலகத்தை விட்டு விலகுவோமா? உலகத்தின் நாகரீகத்திலிருந்து விலகுவோமா? இந்த அர்த்தமற்ற செயல்கள், இந்த ஆடம்பரங்கள், சுவிசேஷத்தை வாணிபமாக மாற்றுதல் போன்றவைகளை விட்டு விலகுவோமா? இயேசுவை எனக்குத் தாருங்கள். அது மாத்திரமே எனக்கு வேண்டும். ''அவரை அறிவதே நித்திய ஜீவன்.'' அவரை நான் நேசிக்கிறேன். நீங்களும் நேசிக்கிறீர்களா? (சபையோர் ''ஆமென்'' என்கின்றனர் - ஆசி). ஓ, நாம் எவ்வளவாக அவரை நேசிக்கிறோம்! இப்பொழுது ஆராதனையை நான் சகோ. கார்ல்லிடம் ஒப்படைக்கப் போகிறேன். அவர் இன்னும் வேறு என்ன செய்யப் போகிறார் என்று எனக்குத் தெரியாது. தேவன் உங்களை ஆசிர்வதிப்பாராக. உங்களை அடுத்த ஞாயிறு... இல்லை, அடுத்த சனி காண்பேன் என்று நம்புகிறேன். உங்களை அப்பொழுது காணாவிட்டால், நாம் டூசானில் சந்திக்கலாம். அப்பொழுதும் உங்களை நான் காணாவிட்டால், பதினேழாம் தேதி உங்களை இங்கு காண்பேன். அப்பொழுதும் உங்களை காண முடியாவிட்டால், உங்களை மகிமையில் காண்பேன். ஆமென். இப்பொழுது, சகோ. கார்ல். இந்நேரத்தில் அவர் என்ன செய்ய விரும்புகிறார் என்று எனக்குத் தெரியாது. சகோ. வில்லியம்ஸ்.